முந்தைய பதிவுகள் ...
முந்தைய பதிவில் கங்கா ஆர்த்தி சேவையையும், தேவ் தீபாவளி அனுபவங்களையும் பகிர்ந்து இருந்தேன். அன்று இரவு மடத்தில் ஓய்வு எடுத்தப்பின், அடுத்த நாள் காலையில் படகில் பயணம் செய்து கங்கா படித்துறைகளை காணலாம் என்று எண்ணினோம். அதற்காக மடத்தின் வழியாகவே அங்கிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசி 1700 ரூபாய்க்கு தனிப்படகில் சென்று அனைத்து படித்துறைகளையும் காணலாம் என்று பேசிக்கொண்டோம். அதன்படி அகல்யா காட்டில் சென்று படகில் ஏறினோம்.
அப்பொழுதும் கங்கையில் பல மக்கள் குளித்தும் , தியானம் செய்து கொண்டும் இருந்தார்கள்.
வருணா, அஸிகளுக்கிடையில் தான் இந்தப் படித்துறைகள் இருக்கின்றன. நூத்தியெட்டு, நூறு இப்படி பல எண்ணிக்கைகள் சொன்னாலும் இப்போதைக்குக் கணக்கில் இருப்பவை 84. Ghat என்பது கூட ஸ்நானக் கட்டம் என்ற பொருளில்தான். இவை அனைத்தும் இருப்பது சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்குள். இந்தப் படித்துறைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் உண்டு. படித்துறையை ஒட்டி பெரிய மாளிகைக் கட்டிடங்களும், கோயில்களும் உள்ளன.
காசியில் உள்ள இந்தப் படித்துறைகள், பலரும் தங்களது பிதுர்க்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உபயோகப்படுகிறது. இவை அமைந்திருக்கும் மிக முக்கியமான பாதை என்று கருதப்படுவது - ‘பஞ்சார்டிதி யாத்ரா’. இது வடக்கிலிருந்து தெற்கே செல்கிறது.
இதன் வழியில் ஐந்து முக்கியமான படித்துறைகள் உள்ளன. அவை, ஆசி, தசாவமேத், ஆதிகேசவா, பஞ்சகங்கா, மணி கர்ணிகா ஆகிய படித்துறைகளாகும். கங்கையில் உள்ள எல்லாப் படித்துறைகளையும்விட இவை மிகவும் புனிதமானவை என்று கருதப்படுவதால், எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
1. தசாஷ்வமேத் காட்
தசாஷ்வமேத் காட் அனைத்து படித்துறைகளிலும் மிகவும் பரபரப்பாக இருக்கும் இடம்.
பிரம்மா இந்த தளத்தில் தான் பத்து குதிரை யாகம் (தச-அஸ்வமேத) செய்தார் அதனால் இவ்விடம் தசாஷ்வமேத் காட் எனப்படுகிறது. பூசாரிகள் மூங்கில் குடையின் கீழ் அமர்ந்து பகல் நேரத்தில் பல்வேறு சடங்குகள் மற்றும் யாத்ரீகர்களுக்கான சடங்குகளை நடத்துகிறார்கள், மாலையில் தினசரி ஆராத்தி சடங்கு இங்கே செய்யப்படுகிறது .
பல பழங்கால நூல்கள் இந்த காட்டின் மகிமையைக் குறிப்பிடுகின்றன, இது பல முக்கியமான யாத்திரை பாதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1740 ஆம் ஆண்டு பாலாஜி பாஜிராவ் பேஷ்வாவால் கட்டத்தின் தெற்குப் பகுதி புதுப்பிக்கப்பட்டது, மேலும் 1774 ஆம் ஆண்டில் இந்தூரின் அஹில்யாபாய் ஹோல்கரால் மேலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.
5. பிரயாக் காட்
பிரயாக் காட், அலகாபாத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பனாரசுக்கு மேற்கே 80 மைல் தொலைவில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள மற்றொரு புனித நகரம் பிரயாக் நகரமாகும். இங்கு சடங்குகள் செய்வதும் புனித நீராடுவதும் பிரயாகாவில் செய்வதாக நம்பப்படுகிறது. 19 ஆம் மாநிலத்தில் திக்பதியாத்தின் (மேற்கு வங்கம்) ராணியால் இந்த காட் புதுப்பிக்கப்பட்டது.
6. ராஜேந்திர பிரசாத் காட்
தசாஷ்வமேதா காட் விரிவாக்கம் செய்யப்பட்டு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அங்கிருந்த குதிரை சிலைகள் அகற்றப்பட்டு அவைகள் சங்கத்மோச்சனா கோயிலுக்கு மாற்றப்பட்டது. பின் 1950 முதல் 1962 வரை பதவி வகித்த இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரின் நினைவாக 1979 ஆம் ஆண்டு இந்த காட் ராஜேந்திர பிரசாத் காட் பெயர் மாற்றப்பட்டது.
அனுபிரேம் 🌼🌼🌼
எல்லா காட் ககளுமே அழகு அதுவும் கங்கையில் பயணம் செம...இடையில் சீகல் பறவைகள் பறப்பதும் எல்லாமே ரசித்தேன் அனு. கங்கை கடல் போல இருக்கு. முதல் காணொளி யுட்யூபில் பார்த்த நினைவு மற்ற இரண்டும் இப்பதான் பார்க்கிறேன்.
ReplyDeleteஎல்லாமே ரசித்துப் பார்த்தேன் அனு, ஆடிப் பெருக்கு நாளில் கங்கைப்பெருக்கு!!!!!
கீதா