21 March 2023

கயாவில் ....

வாழ்க வளமுடன் ..


கங்கை நதியில் 

காசியின் வீதியில் 



போன நவம்பர் மாதம்  சென்ற காசி பயணத்தின் அனுபவங்களை இனி இங்கு பகிர்கிறேன்,  வாசித்து  தங்களின் எண்ணங்களை பகிருங்கள் .


கயா பற்றி சில வரிகள் ...

கயா இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் புனிதமான நகரங்களில் ஒன்றாகும். 

இந்த நகரம்  பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது, இது பீகார் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். மலைத்தொடர்கள் மற்றும் பால்கு நதி இந்த நகரத்தை 4 பக்கங்களிலிருந்தும் சூழ்ந்துள்ளது 

இது பீகார் மாநிலத்தில் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகவும், வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இந்த புனித நகரம் பால்குனி  ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, இது இதிகாசமான ராமாயணம், மகாபாரதம் மற்றும் புனித புத்த நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கயா, ஜைனர்கள், இந்துக்கள் மற்றும் பௌத்தர்களுக்கான புனித யாத்திரை தலங்களுக்கு இடமளிக்கும் ஒரு மாறுபட்ட நகரம். 


முந்தைய பதிவு 

1. வாரணாசி ......

 எங்களின் காசி பயணம் 5 நாள் பயணம். இதில் நாங்கள்  கயா, காசி, அலஹாபாத்  நகரங்களுக்கு சென்றோம்.

எங்களின்   பயணம்  சென்னையிலிருந்து தொடங்கியது. சென்னையிலிருந்து முதலில் கயா  செல்ல திட்டமிட்டு,  அதற்கு பாட்னா வரை விமானத்திலும் அங்கிருந்து கயாவிற்கு டாக்ஸியிலும் சென்றோம்.

 பாட்னாவிலிருந்து கயாவிற்கு செல்லும் சாலை பகுதிகள் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தன. 100km  செல்ல 4 மணி நேரம் ஆனது. இருப்பினும் எங்களின் வண்டி ஓட்டுனர் நிதானமாக, அருமையாக ஓட்டிச் சென்று எங்களை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு கயா நாட்டுக்கோட்டை செட்டியார் மடத்தில் இறக்கி விட்டார். இந்த நாட்டுக்கோட்டை செட்டியார் மடத்திற்கு ஏற்கனவே பேசி அறை  புக் செய்து இருந்தோம். 


சென்னையில் 

பறக்கும் பொழுது 

பாட்னாவில் 

வழியில் 


அங்கு சென்று எங்களின் அறைக்கு செல்லும் பொழுது, இரவு உணவுக்கான டோக்கனும் பெற்றுக்கொண்டோம். அன்று  இரவு உணவாக உப்புமா இருந்தது. அறை  வாடகை  400 ரூபாய். அறையில் பாத் ரூம் வசதிகள் எல்லாம் இல்லை. தனியே வெளியே உள்ளன. ஆனால்  பயம் ஏதும் இல்லாமல் சென்று வரலாம். மிக எளிமையாக தங்க எண்ணுபவர்களுக்கு ஏற்ற இடம். உணவும் வெளியில் உண்ணாமல் எளிமையாக உண்ணும் வகையில் இருக்கிறது.

 செட்டியார் மடம் பழைய காலத்து நமது ஊர் வீடுகளைப் போன்று இருந்தது. மிகப்பெரிய சுவர்களும் உயரமான சீலிங்கும் என்று இருந்தன. அங்கு இரு  பெரிய ஹால் மற்றும் பல அறைகள் உள்ளன. நாங்கள் சென்ற பொழுது இன்னும் இரண்டு குரூப் மக்கள் வந்து அந்த ஹாலில் தங்கினார்கள். அனைவரும் நமது ஊரில் இருந்து வந்தவர்களே.






தொடரும் ...

அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼





6 comments:

  1. பயணத்தில் தொடர்கிறோம்.

    ReplyDelete
  2. சிறப்பான பயணம். கயா தங்குமிட தொடர்பு என்னும் சேர்த்தால் வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  3. கயா பயணம் ஆஹா! சூப்பர். நாட்டுக்கோட்டைச் செட்டியார் தங்குமிடம் பரவாயில்லையே.....செலவு சொல்கிறேன். ..

    படங்கள் எல்லாம் சூப்பர். அந்த டீ/காஃபி கோப்பை அழகு!! எனக்கு இந்த வடிவம் மிகவும் பிடிக்கும்

    கீதா

    ReplyDelete
  4. தளத்தின் மேலே உள்ள படம் கங்கை அழகு!!

    கீதா

    ReplyDelete
  5. நாங்கள் போய் வந்துவிட்டோம்

    ReplyDelete
  6. அருமையான பயண கட்டுரை.

    ReplyDelete