13 March 2023

ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம்

 ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் - மார்ச் 2023

வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. 

வாமனன் என்றால் குறுகிய வடிவினான் என்பது பொருள். அந்த குறுகிய வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றது.; ஆலமரத்தில் உள்ள அற்புத தத்துவங்கள் எல்லாம் தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பது போன்று பேரண்டத்திலுள்ள தத்துவங்கள் எல்லாம் தன்னுள் அடங்கிக் கொண்டு இருக்கிறது இந்த வாமன வடிவம்.


ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம் - நாள் - 1 

த்வஜரோகணம்  (கொடியேற்றம்)







 

ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம் - நாள் - 1  - மாலை பரங்கி நாற்காலியில் 




 ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம்  இரண்டாம்  நாள் காலை  ....




ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம்  -3ம்  நாள் - காலை 





ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம் - 3ம் நாள் -

  மாலை - சிறிய திருவடி (அனுமந்த வாகனம்)





ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம் - 4ம்  நாள்

காலை - (திருமஞ்சனத்திற்கு பிறகு)





ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம் - 4ம்  நாள்   

மாலை - சேஷ வாகனத்தில் 






ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம் - 5 ம் நாள்  - காலை




பெரிய திருமொழி 

9 -5. தவள இளம்பிறை 


 1788  

தவள இளம் பிறை துள்ளும் முந்நீர்* 

 தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி- 

துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்*

  சூழ்பனி நாள் துயிலாதிருப்பேன்,*

இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்*  

என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன*

குவளை மலர்நிற வண்ணர் மன்னு*

  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்   (2)



1789.   

தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த* 

 தண் மதியின் இள வாடை இன்னே,* 

ஊதை திரிதந்து உழறி உண்ண*  

ஓர் இரவும் உறங்கேன், உறங்கும்*  

பேதையர் பேதைமையால் இருந்து* 

 பேசிலும் பேசுக பெய்வளையார்,*

கோதை நறு மலர் மங்கை மார்வன்*  

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் 


தொடரும் ...

அன்புடன் 
அனுபிரேம் 💕💕💕

1 comment:

  1. படங்கள் அனைத்தும் அழகு....... தகவல்கள் சிறப்பு. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete