ராமன் பிறந்தது நவமியில், அவன் தம்பி பரதன் பிறந்தது தசமியில் !*
கௌசல்யா ராமனைத் தந்தது நவமியில் !
கைகேயி பரதனைத் தந்தது தசமியில் !
புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
*பூசம் பரதனின் நட்சத்திரம் !*
லக்ஷ்மணனும் , அவன் தம்பி சத்துருக்கனனும் பிறந்ததும் தசமியில்தான் !!!
சுமித்திரை பகவானுக்காக லக்ஷ்மணனைப் பெற்றதும்,
பாகவதனுக்காக சத்துருக்கனனைப் பெற்றதும் தசமியிலே !
ஆயில்யம் அடைந்தது லக்ஷ்மணனையும், சத்துருக்கனனையும் தந்தது !
நவமியில் வந்தவன் ஒருவன் ! அவனே ஆதிமூலன் !
தசமியில் முதலில் வந்தவன் ஒருவன் ! அவனே பரதன் !
இருவரில் முதலில் வந்தவன் ஒருவன் ! அவனே லக்ஷ்மணன் !
நால்வரில் கடையனாய் வந்தவன் ஒருவன் ! அவனே சத்துருக்கனன் !
ராமன் உலகைக் காக்க வந்தான் ! லக்ஷ்மணன் அவனைக் காக்க வந்தான் !
பரதன் நாட்டைக் காக்க வந்தான் ! சத்துருக்கனன் அவனைக் காக்க வந்தான் !
ராமன் தர்மம் சொன்னபடி நடந்தான் !
லக்ஷ்மணன் ராமன் சொன்னபடி நடந்தான் !
பரதன் ராம பாதுகையோடு நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்கு பாதுகையாய் நடந்தான் !
ராமன் சீதையோடு நடந்தான் !
லக்ஷ்மணன் ராமனோடு நடந்தான் !
பரதன் ராமனுக்காய் நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்காய் நடந்தான் !
ராமன் தந்தை சொல் காத்தான் !
லக்ஷ்மண் தாய் சொல் காத்தான் !
பரதன் ராமன் சொல் காத்தான் !
சத்துருக்கனன் பரதன் சொல் காத்தான் !
ராமனோ தர்மம் !
லக்ஷ்மணனோ கைங்கரியம் !
பரதனோ நியாயம் !
சத்துருக்கனனோ சத்தியம் !
(--*ஆனந்தவேதம்* தளத்திலிருந்து )
No comments:
Post a Comment