01 April 2020

மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் ....





ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்.

மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்ற அர்த்தம்.


எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான்.




ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்கான ஸ்ரீமத் நாராயணனே ராமனாக வந்தார்.


சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும்.

 இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும்.






 இந்த சித்த சுத்தி மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும். கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள்.


ராகவா, எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும் என் ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.









ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது.

ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன.

(முக நூலிலிருந்து ...)








பெருமாள் திருமொழி
பத்தாம் திருமொழி - அங்கணெடுமதின்


ஸ்ரீராமாயண கதைச்சுருக்கம்



அங்கணெடுமதிள்புடைசூழ் அயோத்தியென்னும்
அணிநகரத்து உலகனைத்தும்விளக்கும்சோதி *
வெங்கதிரோன்குலத்துக்கு ஓர்விளக்காய்த்தோன்றி
விண்முழுதும் உயக்கொண்டவீரன் தன்னை *
செங்கணெடுங்கருமுகிலை இராமன் தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எங்கள்தனிமுதல்வனையெம்பெருமான்தன்னை
என்றுகொலோ? கண்குளிரக்காணும்நாளே. (2)

1 741


வந்தெதிர்ந்ததாடகைதன்உரத்தைக்கீறி
வருகுருதிபொழிதரவன்கணையொன்றேவி *
மந்திரங்கொள்மறைமுனிவன்வேள்விகாத்து
வல்லரக்கருயிருண்டமைந்தன்காண்மின் *
செந்தளிர்வாய்மலர்நகைசேர்செழுந்தண்சோலைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
அந்தணர்களொருமூவாயிரவர் ஏத்த
அணிமணியாசனத்திருந்தஅம்மான்தானே.

2 742






"மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் திருவடிகளே சரணம்"


அன்புடன் 
அனுபிரேம் 

3 comments:

  1. அழகான தரிசனம்...

    அவனருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    ReplyDelete
  2. 16 வருடங்களுக்கு முன்பாக என் மச்சினருக்கு பெண் பார்க்கபோனபோது இக்கோவிலுக்கு போய் இருக்கேன். போகனும்ன்னு நினைப்பேன் ஆனா வாய்ப்பு கிட்டலை.

    இப்ப என் பெரிய மகளின் மாமியார் வீடு மதுராந்தகத்திற்கு அருகேதான் இருக்கு. அங்கிருந்து ஒருமுறை போகனும்.

    ReplyDelete
  3. புதுயுகத்தில் ஸ்ரீ ராம ஜெயந்தி அன்று அவர் அபிஷேகம், அலங்கார பூஜை பார்த்தேன்.

    இங்கும் அருமையான தரிசனம் கிடைத்தது.

    ReplyDelete