வாழ்க வளமுடன்
1 |
படம் : மொழி
இசை : வித்யாசாகர்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுஜாதா மோகன்
காற்றின் மொழி... ஒலியா இசையா
பூவின் மொழி ....நிறமா மணமா
கடலின் மொழி .....அலையா நுரையா
காதலின் மொழி .....விழியா இதழா
2 |
3 |
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
(காற்றின் மொழி)
4 |
5 |
6 |
காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித் திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம்
சப்தக்கூட்டில் அடங்காது
சப்தக்கூட்டில் அடங்காது
(இயற்கையின் மொழிகள்)
(காற்றின் மொழி)
7 |
8 |
9 |
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்
(இயற்கையின் மொழிகள்)
(காற்றின் மொழி)
10 |
11 |
12 |
காற்றின் மொழி... ஒலியா இசையா
பூவின் மொழி ....நிறமா மணமா
கடலின் மொழி .....அலையா நுரையா
காதல் மொழி .....விழியா இதழா
13 |
லால்பாக் பூங்காவில் எடுத்த அழகிய மலர்கள் .. ...காற்றின் மொழி ஒலியா இசையா என்ற பாடல் வரிகளுடன் ,....
அன்புடன்
அனுபிரேம்
வணக்கம் சகோதரி
ReplyDeleteமலர்களின் அழகு மனதை கவர்கிறது. படங்கள் ஒவ்வொன்றும் துல்லியம். அழகான மலர்களை கண்டதும் மனது உற்சாகம் அடைகிறது. அந்த அடர்ந்த பிங்க் கலர் சூப்பர். பொருத்தமான பாட்டும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனு அட்டகாசமான படங்கள் செம செம....
ReplyDeleteரொம்ப ரசித்தேன்
கீதா
ReplyDeleteபடங்கள் அனைத்தும் கண்ணை கவர்கின்றன....பாராட்டுகள்