வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள் ...
1.குடகு மலை காற்றில்
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி நிசர்காதமா
7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா
8.செல்லும் வழியில்
9.தலைக்காவேரியிலிருந்து ...
10.பிரம்மகிரி மலைத் தொடர் ...
தலைக்காவேரியை கண்டு வணங்கி விட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் பாகமண்டலேஸ்வரா கோவில்.
கேரளா கட்டிட கலை அமைப்பில் உள்ள கோவில். அழகான , அமைதியான இடத்தில் அமைந்துள்ள கோவில் ...
பாகண்ட முனிவர், சிவ பெருமானையும், சுப்ரமணியரையும் மனதில் இருத்தி தவம் செய்கிறார். அவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் மகரிஷிக்குத் தரிசனம் கொடுத்தார். பின் முனிவரின் ஆசைக்கு இணங்கி, மகரிஷி பூஜித்து வந்த சிவலிங்கத்திலேயே பெருமான் தங்கிவிட்டார் என்பது ஐதீகம் இங்கு.
பாகண்ட மஹரிஷி பூஜித்து வந்ததால் ஸ்வாமிக்குப் பாகண்டேஷ்வரர் என்ற திருநாமம்...
இங்கு சுப்பிரமணியர், விநாயகர்க்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன .
1790 ஆம் ஆண்டில் அப்போது குடகு மன்னராக இருந்த மகாராஜா வீர ராஜேந்திர வாடியர் ஆட்சிக்காலத்தில் இக்கோவிலை புதுப்பித்து கட்டியதாக சில தகவல்கள் கூறுகின்றன.
இங்கு கோவிலுக்கு உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை . அதனால் வெளிப்புற காட்சிகள் மட்டுமே ...
நாங்கள் முருகனை வணங்கும் போது அங்கிருந்த குருக்கள் மதிய நேரம் ஆகிவிட்டது , அதனால் கோவிலில் உணவருந்தி விட்டு செல்லுமாறு கூறினார் . நாங்களும் கோவிலின் பிரசாத்தை மகிழ்வுடன் சாப்பிட்டோம் , எளிய இனிய உணவு. பொறுமையாக வரிசையில் அமர செய்து , சிறிதும் வீணாக்காமல் உண்ண வேண்டும் அங்கு....
அன்புடன்
அனுபிரேம்
இதுவரை அறிந்திராத இடம். படங்கள் அருமை
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteபடங்களும் விவரனங்களும் அருமை. நன்றாக இருக்கிறது.
ReplyDeleteதுளசிதரன், கீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteகோவிலின் படங்களும், அதன் விபரங்களும் நன்றாக உள்ளது. அறியாத தகவல்களுடன் கோவிலைப்பற்றி அருமையான விளக்கங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகான கோவில். தகவல்களும் சிறப்பு.
ReplyDelete