வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள் ...
1.குடகு மலை காற்றில்
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
முந்தைய பதிவில் நம்ட்ரோலிங் - தங்கக்கோயில் கண்டோம்.. நேற்று பார்த்தது பெரிய கோவில், அதன் அருகிலேயே அது போன்ற இன்னும் இரு கோவில்கள் உள்ளன.
இங்கு சிறிய அளவில் புத்தர் சிலைகள் உள்ளன. இந்த கோவில் தங்க நிறத்தில் மின்னுகிறது.
இந்த மடாலயத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட துறவிகள் வசிக்கிறார்கள். இதனுள்ளே பௌத்த மதக்கல்லூரியும், மருத்துவமனை ஒன்றும் செயல்படுகிறது.
இந்த இரண்டாம் கோவிலில் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது .
சுற்றுலா பயணிகளுக்கான திபெத்திய உணவகங்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான கடைகள் என்று எல்லாம் இதன் அருகிலேயே இருந்தன.
சுத்தமாக , அழகாக பராமரிக்கப்படும் இடம் .நாங்கள் சென்ற போது பல பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்து இருந்தனர்.
தொடரும் ...
அனுபிரேம்
அனு மேடம், நாங்களும் இந்த கோவிலை பார்த்திருக்கின்றோம். எனக்கு அங்கு சென்று வந்ததை நினைக்கும்போது நினைவிக்கு வர்வதெல்லாம், அந்த கோவிலில் பரவியிருக்கும் பரவசமான அமைதியும் ஆன்மீக அதிர்வுகளும்தான். அந்த புத்தர் முகத்தில் காணும் சாந்தம் மற்றும் அமைதி கண் கொள்ளா காட்சி.
ReplyDeleteஅழகான கோவில். படங்கள் அனைத்தும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகோவில்களின் படங்கள் நன்றாக உள்ளன. தங்க நிறத்தில் ஜொலிக்கும் கோபுரங்களும், புத்தரின் சிலைகளும், கண்களை கவர்கிறது. கோவில் மேல் விதானத்தின் ஓவியங்களும்,மற்ற ஓவியங்களும் நன்றாக உள்ளது. இந்த இடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி. ஓர் இடம், அதுவும் புனிதமான கோவில் சுத்தமாக இருந்தால்தானே மனதும் அந்த அழகில் லயிக்கும். சுற்றுலாவுக்கும் சிறந்த இடம் என்ற விபரங்களுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
புத்தகோவில் அழகாகவும்,பளிங்கா இருக்கும். புத்தமக்கள் நிறைய பக்தியாக இருப்பார்கள்.எங்க நாட்டில் பார்த்தது. அவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள். அழகான படங்கள்.
ReplyDeleteமிகவும் அருமை. தரையைத் தொட்டமர்ந்த புத்தர் சிற்பங்கள் மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்.
ReplyDelete