01 February 2020

ரத்தின பாண்டியன் கொண்டை

நம்பெருமாள் அழகு 2...ரத்தின பாண்டியன் கொண்டை

முந்தைய பதிவு ..
நம்பெருமாள் அழகு ...திருஅத்யயன  பெருவிழா (வைகுந்த ஏகாதசி)




நம்பெருமாள் திருஅத்யயன (வைகுந்த ஏகாதசி) பெருவிழா
பகல் பத்து நாள் 5

முன்னழகு-
ரத்தின பாண்டியன் கொண்டை ,விமான பதக்கம் ,
அடுக்கு பதக்கங்கள்,முத்துச்சரம் ,காசு மாலை
நெல்லிக்காய் ஹாரம் ,வைர அபயஹஸ்தம்
மகர கர்ண பத்ரம் , மகர காது காப்பு

பின்: புஜ கீர்த்தி , பங்குனி உத்திர பதக்கம்










பகல் பத்து நாள் 6


 பனிக்குல்லா..அதன் மேல்- புஜ கீர்த்தி, வைர தயிர் சட்டி அட்டிகை,
வைர அபயஹஸ்தம், தங்க கோலக் கிளி

மார்பில் - பரவாசுதேவன் பதக்கம், ஸ்ரீரங்க நாச்சியார் பதக்கம்,
பங்குனி உத்திர பதக்கம், பவழ மாலை தாயத்து, பவழ மாலை, அடுக்கு பதக்கங்கள், முத்து வடம், காசு மாலை.

பின் : கல் இழைத்த ஒட்டியாணம், காசு மாலை.








பகல் பத்து நாள் 7

அஜந்தா கொண்டை ,
சந்திர-சூரிய வில்லை, தலைச்சரம், கலிங்கதுராய்...

பங்குனி உத்திர பதக்கம், ஸ்ரீரங்க நாச்சியார் பதக்கம், நெல்லிக்காய் மாலை, பவழ மாலை, அடுக்கு பதக்கங்கள், முத்துச்சரம், ரத்தின அபயஹஸ்தம்

பின்: புஜ கீர்த்தி, அண்டபேரண்ட பக்ஷ்சி.










பகல் பத்து நாள் 8

சௌரி கொண்டை

பெரிய- கலிங்கத்துறாய்,

சந்திர-சூரிய வில்லை, நெற்றிச்சரம், ஸ்ரீரங்க நாச்சியார் பதக்கம், மார்பில் புஜ கீர்த்தி, அடுக்கு பதக்கங்கள், பவழ மாலை தாயத்து, நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், காசு மாலை , ரத்தின அபயஹஸ்தம்.

பின்: ரத்தின கண்டிகை, மரகத புஷ்ப வில்லை, வெள்ளை கல் அரச இலை











875

மொய்த்தவல்வினையுள்நின்று மூன்றெழுத்துடையபேரால் * 
கத்திரபந்துமன்றே பராங்கதிகண்டுகொண்டான் * 
இத்தனையடியரானார்க்கு இரங்கும்நம்அரங்கனாய 
பித்தனைப்பெற்றும் அந்தோ! பிறவியுள்பிணங்குமாறே.

 4

876

பெண்டிரால்சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபூண்டு * 
உண்டிஇராக்கிடக்கும்போது உடலுக்கேகரைந்துநைந்து * 
தண்துழாய்மாலைமார்பன் தமர்களாய்ப்பாடியாடி * 
தொண்டுபூண்டமுதமுண்ணாத் தொழும்பர் சோறுஉகக்குமாறே! 

 - 5

877

மறம்சுவர்மதிளெடுத்து மறுமைக்கேவெறுமைபூண்டு * 
புறஞ்சுவரோட்டைமாடம் புரளும்போது அறியமாட்டீர் * 
அறஞ்சுவராகிநின்ற அரங்கனார்க்குஆட்செய்யாதே * 
புறஞ்சுவர்கோலஞ்செய்து புள்கெளவ்வக்கிடக்கின்றீரே.

திருமாலை - 6

தொடரும்...

முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...


அன்புடன் 
அனுபிரேம் 

3 comments:

  1. பார்த்துக் கொண்டே இருக்கலாம் அப்படி அழகு படங்கள்.
    நம்பெருமாள் அழகு.
    அலங்காரபிரியர் ந்மபெருமாள் தரிசனத்திற்கு நன்றி.

    ReplyDelete
  2. சிறப்பான தரிசனம்.

    அழகான படங்கள் மற்றும் விளக்கங்கள். நன்றி.

    ReplyDelete