05 February 2020

கும்பஜ்...


வாழ்க வளமுடன் 



முந்தைய பதிவு ...குடகு  மலை காற்றில் 

என்ன இது கும்பஜ்.... இது சுல்தானின் சமாதி அமைந்து இருக்கும் இடம் ...ஸ்ரீரெங்கப்பட்னா ,மைசூரில் 

கூர்க் செல்லும் வழியில் மைசூரில் கண்ட  இடங்கள் இவை..

எங்கள்  திட்டத்தில் இவை இல்லை என்றாலும்  செல்லும் வழி  என்பதால் நின்று பார்த்தோம் ...



கும்பஜ்

பெரிய அழகான விசாலமான தோட்டத்துக்கு நடுவிலே  ரொம்பவே அழகான ஒரு கட்டடம்.

அழகாக வடிவமைக்கப்பட்ட சுவர்களும் 36 கம்பீரமான தூண்களும் இந்த மண்டபத்திற்கு அழகை கூட்டுகின்றன. 220 ஆண்டுகள் வயதுடைய இந்த பழைய கோட்டை ஒரு உயரமான மேடைமீது எழுப்பப்பட்டு இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது.


திப்புவின் பெற்றோரான மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஹைதர்அலி, திப்புவின் தாயார் பஹ்ருன்னிக்கா   ஆகியோரின் சமாதிகள் இந்த மண்டபத்தின் உள்ளே  உள்ளன .

 திப்பு சுல்தான் தான்  இறந்த பின்  தன் பெற்றோரின் சமாதிக்கு இடையே தான், தன்னையும் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தாராம் ...அதனால் இம்மூவரின் சமாதியும் சேர்ந்தே இங்கு உள்ளது.



மினுமினுக்கும் புலித்தோல் வண்ண வரிகள் பூசப்பட்ட உட்புறச்சுவர்களும், அரிதான கறுப்பு சலவைக்கல்லால் ஆன தூண்களும் இங்குள்ள மைய மண்டபத்தை அலங்கரிக்கின்றன.






தோட்டத்திலும், மற்றும் மண்டபத்தின்  வெளியிலும் எங்கு நோக்கினும், கல்லறைகள் , கல்லறைகள்.



தொடரும்...

அன்புடன்
அனுபிரேம்



2 comments:

  1. வாய்ப்பு கிடைத்தால் செல்லவேண்டிய இடம்.

    ReplyDelete
  2. அழகான படங்கள். கர்னாடகா பக்கம் நிறைய சென்றதில்லை. பெங்களூரு, மைசூர் போன்ற இடங்களுக்குச் சென்றதுண்டு - பதிவராக ஆவதற்கு முன்னர்! :)

    தொடர்கிறேன்.

    ReplyDelete