நம்பெருமாள் அழகு 3 ...நாச்சியார் திருக்கோலம்
முந்தைய பதிவுகள் ..
பகல் பத்து நாள் 9
முன்: முத்துக்குறி அலங்காரம் ...
முத்து சாயக் கொண்டை. , கலிங்கத்துறாய்
முத்து கர்ண பத்ரம் , முத்து அபயஹஸ்தம் ,
முத்து கபாய் (அங்கி)
பகல் பத்து நாள் 10
நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் -
நாச்சியார் சௌரிக்கொண்டை, கலிங்கத்துறாய்,
சந்திர-சூரிய வில்லை ,நெற்றிச்சரம்,
பிறை சந்திர பதக்கம் , மூக்குத்தி
அழகிய மணவாளன் பதக்கம் , பங்குனி உத்திரம் பதக்கம்,
மங்கல திருமாங்கல்யம், வைர மாட்டல்-தோடு-தொங்கல் ஜிமிக்கி, பாரிஜாத பதக்கம், அஷ்ட தள பதக்கம்,
அடுக்கு பதக்கங்கள் நெல்லிக்காய் மாலை,
பவழ மாலை, முத்துச்சரம், வலக் கையில் கோலக்கிளி,
இடது - ஓய்யார திருக்கை.
அதில் - அரச இலை பதக்கம், வங்கி, வளைசல், கனகக் கடிப்பு, பவழக் கடிப்பு ;
திருவடி தண்டை, சதங்கை
கைகள் நிறைய அலங்கார வளையல்கள், மோதிரங்கள் அணிந்து வெண்பட்டுச் சேலையில், குத்திட்டு அமர்ந்த கோலத்தில்!
பின் : புஜ கீர்த்தி, ஒட்டியாணம், வைர அட்டிகை, அரச இலை பதக்கம், அரை சலங்கை.
கிளி மாலையுடன்
நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில்
878
புலையறமாகிநின்ற புத்தொடுசமணமெல்லாம் *
கலையறக்கற்றமாந்தர் காண்பரோகேட்பரோதாம்? *
தலையறுப்புண்டும்சாகேன் சத்தியம்காண்மின்ஐயா *
சிலையினால்இலங்கைசெற்ற தேவனே தேவனாவான்.
திருமாலை - 7
879
வெறுப்பொடுசமணர்முண்டர் விதியில்சாக்கியர்கள் * நின்பால்
பொறுப்பரியனகள்பேசில் போவதேநோயதாகி *
குறிப்பெனக்கடையுமாகில் கூடுமேல்தலையைஆங்கே *
அறுப்பதேகருமம்கண்டாய் அரங்கமாநகருளானே!
திருமாலை - 8
880
மற்றுமோர்தெய்வமுண்டே? மதியிலாமானிடங்காள் *
உற்றபோதன்றிநீங்கள் ஒருவனென்றுஉணரமாட்டீர் *
அற்றமேலொன்றறீயீர் அவனல்லால்தெய்வமில்லை *
கற்றினம்மேய்த்தஎந்தை கழலிணைபணிமின்நீரே.
திருமாலை - 9
தொடரும்...
முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...
அன்புடன்
அனுபிரேம்
படங்கள் அனைத்துமே அழகு. தகவல்களும் சிறப்பு.
ReplyDeleteதொடரட்டும் பதிவுகள்.
படங்களுடன் தகவல்கள் அருமை.
ReplyDeleteநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
https://newsigaram.blogspot.com/
நகைகளின் மிக அழகான நுணுக்கங்களை புகைப்படங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அனைத்துமே அழகான புகைப்படங்கள்! பாடல்கள் அருமை!
ReplyDeleteமிக அருமையான நாச்சியார் திருக்கோலம்.
ReplyDeleteகிளி அழகு. நாச்சியார் அழகு. பகிர்ந்த படங்கள் அழகு.
பாடல் பகிர்வு அருமை.