நம்பெருமாள் அழகு 4 ...ரத்னங்கி சேவை
முந்தைய பதிவுகள் ..
இராப்பத்து 1ஆம் நாள் -வைகுண்ட ஏகாதசி
நம்பெருமாள் "ரத்னங்கி" என்னும் தங்கத்தில் ரத்தினக் கற்களையும்,வைர,வைடூரிய,மாணிக்க,மரகத கற்களும் பதிக்கப்பட்ட,விலைமதிப்பற்ற அங்கியை அணிந்து கொண்டும்,பாண்டியன் கொண்டை அணிந்தும் சேவை சாதிப்பார்.
(மூலவர் பெரியபெருமாள் 20 நாட்களிலும் முத்தங்கியில் சேவை சாதிப்பார்)
இராப்பத்து-2 ஆம்நாள்
முத்து கீரிடம் , கலிங்கத்துறாய்
சந்திர ஹாரம், புஜ கீர்த்தி, ஸ்ரீரங்க நாச்சியார் பதக்கம், அடுக்கு பதக்கங்கள் , நெல்லிக்காய் மாலை, பவழ மாலை,
வைர அபயஹஸ்தம் அலங்காரத்தில் நம் பெருமாள்
வைர அபயஹஸ்தம் அலங்காரத்தில் நம் பெருமாள்
இராப்பத்து -நாள் 3
முத்து பாண்டியன் கொண்டை, கலிங்கத்துறாய்
சந்திர ஹாரம், புஜ கீர்த்தி, ஸ்ரீரங்க நாச்சியார் பதக்கம், அடுக்கு பதக்கங்கள் , நெல்லிக்காய் மாலை, பவழ மாலை, முத்துச்சரம், புதிய ரத்தின அபயஹஸ்தம்
அலங்காரத்தில் நம் பெருமாள்
அலங்காரத்தில் நம் பெருமாள்
நாட்டினான்தெய்வம்எங்கும் நல்லதோரருள்தன்னாலே *
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும்வண்ணம் *
கேட்டிரேநம்பிமீர்காள்! கெருடவாகனனும்நிற்க *
சேட்டைதன்மடியகத்துச் செல்வம்பார்த்திருக்கின்றீரே.
திருமாலை -10
881
திருமாலை -10
881
ஒருவில்லால்ஓங்குமுந்நீரடைத்து உலகங்களுய்ய *
செருவிலே அரக்கர்கோனைச்செற்ற நம்சேவகனார் *
மருவியபெரியகோயில் மதிள்திருவரங்கமென்னா *
கருவிலேதிருவிலாதீர்! காலத்தைக்கழிக்கின்றீரே.
திருமாலை -11
882
882
நமனும்முற்கலனும்பேச நரகில்நின்றார்கள் கேட்க *
நரகமேசுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி *
அவனதூர் அரங்கமென்னாது அயர்த்துவீழ்ந்தளியமாந்தர் *
கவலையுள்படுகின்றாரென்று அதனுக்கேகவல்கின்றேனே.
திருமாலை -12
883
883
தொடரும்...
முகநூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...
அன்புடன்
அனுபிரேம்
அனு அவர்களே, உங்கள் ரத்தினங்கி சேவை கட்டுரை மிகப் பிரமாதம். ஒவ்வொரு புகைப்படமும் நம்மை பெருமாளிடமே அழைத்து செல்கின்றது என்பதில் சிரிதும் ஐயமில்லை. உங்கள் தமிழ் வளம் அஹா, அஹாஹா. பெருமாள் திருவடிகளே சரணம். நீங்கள் என் http://manakottai.blogspot.com/2020 சென்று என் "நம்மாழ்வார் சேர்க்கை" கட்டுரையை படித்து கருத்து கூறவும். ஏனெனில், நானும் கோவில்கள் பற்றி எழுதுபவள். அத்தி வரதரை பற்றியும் எழுதியுள்ளேன். நன்றி.
ReplyDeleteதெளிவான புகைப்படங்கள் மூலம் இனிய தரிசனம்.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அழகு. பார்த்து ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.
ReplyDelete