30 July 2016

கடற்கரைக் கோவில் - மாமல்லபுரம் 8


அனைவருக்கும் வணக்கம்...

எங்களது மாமல்லபுர பயண அனுபவங்களில்...


இதுவரை பார்த்து ரசித்தவை.......


சிற்பிகளின்  கைவண்ணம்

அர்ச்சுனன் தபசு சிற்பங்கள்

மலைக்கோவிலும், கலங்கரை விளக்கமும்

ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில்

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்

 பஞ்ச பாண்டவ ரதங்கள்


அடுத்ததாக நாம் செல்ல  இருப்பது  கடற்கரைக் கோவிலுக்கு...  தமிழ் நாட்டில்   முதன்   முதலில்   அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்  ஆகும்.     இது இராஜசிம்ம   பல்லவனால்   கட்டப்பட்டது.   தமிழ்நாட்டின்    தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில்   45 அடி    உயரம் கொண்டது. இக்கோயிலில்   லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட   பெருமாளும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.


இக்கோவில் மிக அழகான பராமரிப்போடு படு சுத்தமாக உள்ளது...கோவிலின் முன்புறம் ..


சிறிது சிறிதாக பலபல வேலைப்பாடுகள்....கோவிலிருந்து கடற்கரை...


கடைசியாக  கடலின் அழகையும்  ரசித்தோம்...
இதுவரை எங்களின்  மாமல்லபுர பயண அனுபவங்களை பார்த்தும். ...படித்தும்  ரசித்த அனைவருக்கும் மிகவும் நன்றி...அன்புடன்

அனுபிரேம்25 July 2016

சிற்பிகளின் கைவண்ணம்... மாமல்லபுரம் 7

அனைவருக்கும் வணக்கம்...

எங்களது மாமல்லபுர பயண அனுபவங்களில்...


இதுவரை பார்த்து ரசித்தவை.......


அர்ச்சுனன் தபசு சிற்பங்கள்

மலைக்கோவிலும், கலங்கரை விளக்கமும்

ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில்

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்

 பஞ்ச பாண்டவ ரதங்கள்அனந்தசயன சிற்பங்கள்


 திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க,  இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி.மகிஷாசுரமர்த்தினி சிற்பங்கள்

மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில்  துர்க்கை  சிங்க வாகனத்தில் ஏறி, மகிஷன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி உள்ளது. மகிஷாசுரமர்த்தினி  பத்து கைகளுடன்  ஆக்ரோஷமாக எருமைத்தலை கொண்ட மகிஷாசுரனை கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல பூதகணங்களும் காணப்படுகிறார்கள்.


மனித தலையும் சிங்க உடலும்

கோவர்த்தன காட்சிகள்

இந்திரனுக்கு விழா எடுப்பதை கண்ணன் தடுத்து நிறுத்தியதால் கோபம் கொண்ட இந்திரன் மழையை வருவிக்க, கோகுலமே மழை,  வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. ஆயர்களையும், மாடு, கன்றுகளையும் காக்க கோவர்த்தனக் குன்றையே குடையாக  கண்ணன்  ஏந்தினான்....  அக்காட்சிகளின் அழகு வடிவமே இங்கு உள்ளவை... 
பேன் பார்க்கும் குரங்கு சிலை....
தெய்வங்களின் தத்ருபமான  அழகு சிலைகள்வராக சிற்பம்


கலங்கரை விளக்கம் தொலைவில்...

தொடரும் ....

அன்புடன்

அனுபிரேம்21 July 2016

அர்ச்சுனன் தபசு சிற்பங்கள் ...மாமல்லபுரம் 6

அனைவருக்கும் வணக்கம்...

எங்களது மாமல்லபுர பயண அனுபவங்களில்...


இதுவரை பார்த்து ரசித்தவை.......


மலைக்கோவிலும், கலங்கரை விளக்கமும்

ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில்

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்

 பஞ்ச பாண்டவ ரதங்கள்இப்பொழுது  நாம் பார்க்கும் இடம் அர்ச்சுனன் தபசு ...இந்தியாவிலேயே   வித்தியாசமான    சிற்பக்கலை   அம்சமாக   இந்த அர்ஜுனன்   தபஸ்   எனும்   பாறைச்   சிற்ப   அமைப்பு கருதப்படுகிறது.

43 அடி உயரம்   கொண்ட   இந்த   திறந்த  வெளி  பாறை  அமைப்பில் புடைப்புச்சித்திரங்கள்   ஒரு    பிரம்மாண்ட   காட்சித்திரை   போன்று செதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த   பாறைச்சிற்பங்களில்   சித்தரிக்கப்பட்டிருக்கும்   காட்சிகள் அக்காலத்திய   புராணக்  கதைச்சம்பவங்களை  குறிப்பிடுகின்றன.


 வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. 

நிலைக்குத்துத் திசையில் சிற்பத்தொகுதி நான்கு அடுக்குகள்   அல்லது   நிலைகளாகக்   கருதி  வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலிருந்து பார்க்கும்போது முதல் நிலை விண்ணுலகையும், இரண்டாவது விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடைப்பட்ட நிலையையும்,            மூன்றாவது மண்ணுலகையும்,         அடியில் உள்ளது பாதாள உலகத்தையும் குறித்து நிற்பதாகக் கூறப்படுகின்றது.ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன், பூதகணங்கள் சூழ நின்று, வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன.

அருச்சுனன் பாசுபத அஸ்திரத்தை வேண்டிச் சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சிதான் இங்கே செதுக்கப்பட்டுள்ளது என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள்.   ஒருசிலர், பகீரதன் கங்கையை வர வைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சி இது என்று கூறுகிறார்கள்.


   இந்த ஒரு திறந்தவெளிப் பாறையில் சிற்பிகள் 150 க்கும் மேற்பட்ட சிற்பங்களை செதுக்கியுள்ளனர்.


   இவற்றைப் பொதுவாகக் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்: அர்ச்சுனன் சிவனிடம் பாசுபத அஸ்திரம் வேண்டி செய்யும் தவம்: இதில் உடல் ஒட்டி, எலும்பும் நரம்பும் வெளியே தெரியக்கூடிய தவக்கோலத்தில் ஒற்றைக் காலில் நின்று இரு கைகளையும் பூட்டி சூரிய வணக்கம் செய்யும் அர்ச்சுனன், கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து நிற்கும் சிவன், சுற்றி பூதகணங்கள்.

இரு பாறைப் பிளவுகளுக்கு இடையே கங்கை ஆறு ஓடிவருமாறு அழகாகச் செய்யப்பட்டிருக்கும் பாதை.  


   மழை   பொழியும்போது   இந்தப் பாதை வழியாக ஆறுபோலவே   ஓடும்  காட்சியைக்  காணலாம்.   கங்கை ஆற்றின் இருபுறமும் ஆற்றை நோக்கி வரும் சூரியன், சந்திரன், தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், கின்னரர்கள் (கீழுடல் பறவை, மேலுடல் மனிதர்). வதரியாசிரமம் (பத்ரிநாத்) எனப்படும் ஒரு திருமால் கோயில், அதன்முன் அமர்ந்திருக்கும் சில முனிவர்கள் (இவர்களின் தலை துண்டாகியுள்ளது), கங்கை ஆற்றில் குளித்துச் சடங்குகள் செய்யும் பக்தர்கள். வேடர்கள். இவர்கள் வேட்டையாடிய பொருள்களைக் கையில் எடுத்து வருமாறு அமைக்கப்பட்டுள்ளனர்.
ஒரே கல்லில் எத்தனை விதமான படைப்புகள்....

சேவல்,மயில்,வாத்து, மான், சிங்கம், கரடி, யானை குடும்பம், பாம்பு,
சிவன், விஷ்ணு, பூதகணங்கள், முனிவர்கள், மனிதர்கள் ....என ஒரே  தொகுதியில்   அனைத்து வடிவங்களும்....பார்க்கவே பிரமிக்க வைக்கும் அழகு....

தொடரும் ....

அன்புடன்

அனுபிரேம்


14 July 2016

மலைக்கோவிலும், கலங்கரை விளக்கமும்...மாமல்லபுரம் 5


எங்களது மாமல்லபுர பயண அனுபவங்களில்...


முந்தைய பதிவுகளில்  பார்த்தவை.......

ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில்

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்

 பஞ்ச பாண்டவ ரதங்கள்


இப்பொழுது  நாம் செல்லும் இடம் மலைப்பாறை ( மலைக்கோவில்)...

இங்கு தான்  பல குடைவரை சிற்பங்களும்....கலங்கரை விளக்கமும் உள்ளது...


செல்லும் வழி
இந்த  குன்றின் மீது ஏறலாம்... படிகள் எல்லாம் அந்த கால அமைப்புடன் பழமை மாறாமல் உள்ளது....ஆனாலும்   பசங்களை அழைத்து செல்லும் போது கவனம் மிகவும் தேவை...


குன்றின் மேலிருந்து  இயற்கையின்  அழகு...
 நகரின்   பசுமை..


அங்கிருந்து   கலங்கரை விளக்கம்...

நாங்க கலங்கரை விளக்கத்தின் மேலே எல்லாம் போகல... பசங்க குட்டி பசங்க...அதனால்  தூரமாவே நின்னு  கலங்கரை விளக்கத்தை 
பார்த்து ரசுசாச்சு...


தூரமா கடல்  ...அப்ப....எவ்வளவு கஷ்டப்பட்டு படம் புடிக்கிறார்...
கலைஞர்..
ராஜி  அம்மா அவர்கள் தளத்தில் இருந்து  ....அவர்கள் எடுத்த படம் கலங்கரை விளக்கத்தில் இருந்து நாங்கள் நின்ற குன்று...தொடரும் ....

அன்புடன்

அனுபிரேம்08 July 2016

ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோவில்....மாமல்லபுரம் 4


கடல் கிளிஞ்சல் அருங்காட்சியத்திலிருந்து நாங்க  ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயிலுக்கு (திருக்கடல்மல்லை)  சென்றோம்.....


இணையத்திலிருந்து


இணையத்திலிருந்து          இத்திருக்கோவில்     வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் 64 வது திவ்ய தேசம்....

          இத் தலத்திலேயே  வைணவ  ஆழ்வார்களில்  ஒருவரான பூதத்தாழ்வார்  அவதரித்தார்..

          உற்சவப்பெருமாள்  கையில்   தாமரை  மலருடன்  நிற்கும்  ஒரே திருத்தலம் .


           மாசி மகம்  நாளன்று  இத்திருத்தலத்   தீர்த்தத்தில்  நீராட ராமேஸ்வரத்தில்  நீராடிய   புண்ணியம்  என்று குறிப்பிடப்படுகின்றது ..
இணையத்திலிருந்து


இணையத்திலிருந்து


             முன்பு  காடாக  இருந்த   இப்பகுதியில்   புண்டரீக மகரிஷி தவம்   செய்து   வந்தார்.     ஆயிரம்   இதழ்   கொண்ட அபூர்வ  தாமரை மலர்   ஒன்றைக்   கண்ட   மகரிஷி    அதனை   திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணருக்கு சமர்ப்பிக்க எண்ணினார். அன்பின் மிகுதியால் கடல் நீரை வற்ற இறைத்து விட்டால் திருப்பாற்கடலை அடைந்து தாமரை மலரை இறைவனுக்கு அர்ப்பணித்து விடலாம் என்று கருதினார்.


           கடல் நீரை கைகளால் இறைத்து வற்றச் செய்ய முயன்றார். திருமாலும் ஒரு முதியவர் வடிவம் கொண்டு, முடியாத இக்காரியத்தைச் செய்ய முயலுகின்றீரே, பசித்திருக்கும் எனக்கு உணவளியுங்கள் என வினவ, பசித்தோருக்கு உணவிட வேண்டிய கடமையையும் தமது சீரிய காரியத்தில் ஏற்பட்டுள்ள தடையையும் கண்டு திகைத்தார் மகரிஷி. வந்த முதியவர், மகரிஷி சென்று உணவு கொணரும் வரை தாம் அவரது பணியை மேற்கொள்வதாக உறுதி கூறி மகரிஷியை உணவு கொண்டுவர அனுப்பினார்.              


               உணவுடன்  மகரிஷி   திரும்புவதற்குள்  தாமரை  மலர்  சூடி தரையிலேயே  சயன  கோலத்தில்  பள்ளி கொண்டார்  திருமால்.  திரும்பி  வந்து  தரிசனம்  பெற்ற  முனிவர்  ஆனந்தத்துடன்  வழிபட்டு மகிழ்ந்தார்.

 
     இத்தலத்தில்  திருமால்  ஆதிசேசனில்  பள்ளி  கொள்ளாமல்  ஸ்தலத்தில்  பள்ளி கொண்டுள்ளார்.திருப்பாதத்தின் அருகில் புண்டரீக   மகரிஷி அமர்ந்துள்ளார். தாமரை மலரும் அமைந்துள்ளது.


நண்ணாத வாள் அவுணர் * இடைப் புக்கு * வானவரைப்
பெண் ஆகி * அமுது ஊட்டும் பெருமானார் * மருவினிய
தண் ஆர்ந்த கடல் மல்லைத் * தல சயனத்து உறைவாரை *
எண்ணாதே இருப்பாரை * இறைப் பொழுதும் எண்ணோமே *

திருமங்கை ஆழ்வார்  


விளக்கம்: -
பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதத்தை தீயவர்களான அசுரர்களுக்கு கிடைக்காமல் இருக்க மற்றவர்களை தன் கவர்ச்சியால் மயக்க, அழகான மோகினி பெண்ணாய் மாறி தேவர்களுக்கு அமுதை ஊட்டும் பெருமாளும்,
இனிமையாக பொருந்திய குளிர்ச்சியான இடமான மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தில் வசிப்பவருமான எம் செல்ல பெருமாளை எண்ணாமல் இருப்பவரை ஒரு நொடி பொழுது கூட எண்ண மாட்டோம்.


பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலே உள்ள அழகான ஸ்தலம்....


அங்கிருந்து நாங்கள்  மலைப்பாறைக்கு  சென்றோம்.....அங்கு  தான்  பல்லவ கலைக் கூடமே உள்ளது...


செல்லும் வழியில் எடுத்த காட்சிகள்....  நர்த்தன விநாயகர்... கண்ணன்...என வழி நெடுக  கல்லில் செதுக்கிய  காட்சிகள்...அற்புதம்...

தொடரும் ....

முந்தைய பதிவுகள்....

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்

 பஞ்ச பாண்டவ ரதங்கள்

அன்புடன்

அனுபிரேம்கீதா அம்மா  உங்கள் செல்லம் கண்ணழகி புகைப்படத்தை இங்கு பாரதியின் வரிகளுக்கு உபயோகப்படுத்தி உள்ளேன்....படத்திற்கு நன்றி...