தொடர்ந்து வாசிப்பவர்கள்

08 July 2016

ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோவில்....மாமல்லபுரம் 4


கடல் கிளிஞ்சல் அருங்காட்சியத்திலிருந்து நாங்க  ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயிலுக்கு (திருக்கடல்மல்லை)  சென்றோம்.....


இணையத்திலிருந்து


இணையத்திலிருந்து          இத்திருக்கோவில்     வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் 64 வது திவ்ய தேசம்....

          இத் தலத்திலேயே  வைணவ  ஆழ்வார்களில்  ஒருவரான பூதத்தாழ்வார்  அவதரித்தார்..

          உற்சவப்பெருமாள்  கையில்   தாமரை  மலருடன்  நிற்கும்  ஒரே திருத்தலம் .


           மாசி மகம்  நாளன்று  இத்திருத்தலத்   தீர்த்தத்தில்  நீராட ராமேஸ்வரத்தில்  நீராடிய   புண்ணியம்  என்று குறிப்பிடப்படுகின்றது ..
இணையத்திலிருந்து


இணையத்திலிருந்து


             முன்பு  காடாக  இருந்த   இப்பகுதியில்   புண்டரீக மகரிஷி தவம்   செய்து   வந்தார்.     ஆயிரம்   இதழ்   கொண்ட அபூர்வ  தாமரை மலர்   ஒன்றைக்   கண்ட   மகரிஷி    அதனை   திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணருக்கு சமர்ப்பிக்க எண்ணினார். அன்பின் மிகுதியால் கடல் நீரை வற்ற இறைத்து விட்டால் திருப்பாற்கடலை அடைந்து தாமரை மலரை இறைவனுக்கு அர்ப்பணித்து விடலாம் என்று கருதினார்.


           கடல் நீரை கைகளால் இறைத்து வற்றச் செய்ய முயன்றார். திருமாலும் ஒரு முதியவர் வடிவம் கொண்டு, முடியாத இக்காரியத்தைச் செய்ய முயலுகின்றீரே, பசித்திருக்கும் எனக்கு உணவளியுங்கள் என வினவ, பசித்தோருக்கு உணவிட வேண்டிய கடமையையும் தமது சீரிய காரியத்தில் ஏற்பட்டுள்ள தடையையும் கண்டு திகைத்தார் மகரிஷி. வந்த முதியவர், மகரிஷி சென்று உணவு கொணரும் வரை தாம் அவரது பணியை மேற்கொள்வதாக உறுதி கூறி மகரிஷியை உணவு கொண்டுவர அனுப்பினார்.              


               உணவுடன்  மகரிஷி   திரும்புவதற்குள்  தாமரை  மலர்  சூடி தரையிலேயே  சயன  கோலத்தில்  பள்ளி கொண்டார்  திருமால்.  திரும்பி  வந்து  தரிசனம்  பெற்ற  முனிவர்  ஆனந்தத்துடன்  வழிபட்டு மகிழ்ந்தார்.

 
     இத்தலத்தில்  திருமால்  ஆதிசேசனில்  பள்ளி  கொள்ளாமல்  ஸ்தலத்தில்  பள்ளி கொண்டுள்ளார்.திருப்பாதத்தின் அருகில் புண்டரீக   மகரிஷி அமர்ந்துள்ளார். தாமரை மலரும் அமைந்துள்ளது.


நண்ணாத வாள் அவுணர் * இடைப் புக்கு * வானவரைப்
பெண் ஆகி * அமுது ஊட்டும் பெருமானார் * மருவினிய
தண் ஆர்ந்த கடல் மல்லைத் * தல சயனத்து உறைவாரை *
எண்ணாதே இருப்பாரை * இறைப் பொழுதும் எண்ணோமே *

திருமங்கை ஆழ்வார்  


விளக்கம்: -
பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதத்தை தீயவர்களான அசுரர்களுக்கு கிடைக்காமல் இருக்க மற்றவர்களை தன் கவர்ச்சியால் மயக்க, அழகான மோகினி பெண்ணாய் மாறி தேவர்களுக்கு அமுதை ஊட்டும் பெருமாளும்,
இனிமையாக பொருந்திய குளிர்ச்சியான இடமான மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தில் வசிப்பவருமான எம் செல்ல பெருமாளை எண்ணாமல் இருப்பவரை ஒரு நொடி பொழுது கூட எண்ண மாட்டோம்.


பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலே உள்ள அழகான ஸ்தலம்....


அங்கிருந்து நாங்கள்  மலைப்பாறைக்கு  சென்றோம்.....அங்கு  தான்  பல்லவ கலைக் கூடமே உள்ளது...


செல்லும் வழியில் எடுத்த காட்சிகள்....  நர்த்தன விநாயகர்... கண்ணன்...என வழி நெடுக  கல்லில் செதுக்கிய  காட்சிகள்...அற்புதம்...

தொடரும் ....

முந்தைய பதிவுகள்....

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்

 பஞ்ச பாண்டவ ரதங்கள்

அன்புடன்

அனுபிரேம்கீதா அம்மா  உங்கள் செல்லம் கண்ணழகி புகைப்படத்தை இங்கு பாரதியின் வரிகளுக்கு உபயோகப்படுத்தி உள்ளேன்....படத்திற்கு நன்றி...

5 comments:

 1. அருமையான தகவல்கள். படங்களும் நன்று.

  ReplyDelete
 2. கடற்கரை அருகில் ஒரு ஸ்தலசயனப் பெருமாள் இருக்கிறார். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர் தான் ஒரிஜினல் ஸ்தலசயனப் பெருமாள் என்கிறார்கள். அவரும் மிகவும் கம்பீரமாக இருப்பார். உண்மையிலேயே தரையில் கிடந்திருப்பார். பார்க்க மனது பதறும்.

  ReplyDelete
  Replies
  1. சரியாக தெரியவில்லையே...விசாரிக்க வேண்டும்..

   Delete
 3. என்னுடைய வலைத்தளத்தையும் உங்கள் வலைத்தளத்தில் இணைத்துக் கொண்டு எனக்கு நீங்களும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டீர்கள், அனு.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாளாவே உங்கள் தளத்தை ஈமெயில் வழியாக தொடர்கிறேன் அம்மா.....அது வழியாக படிப்பதால் மறுமொழிகள் இட இயலவில்லை..

   ஆனால் இன்று உங்கள் கண்ணுக்கு தெரியாத ரசிகர்களை படிக்கவும்..நானும் அதில் ஒருவர் என்பதால் மறுமொழி கொடுத்தேன்...

   உங்கள் உடனடி வருகைக்கும் கருத்திர்க்கும் மிகவும் நன்றி அம்மா...

   Delete