தொடர்ந்து வாசிப்பவர்கள்

21 July 2016

அர்ச்சுனன் தபசு சிற்பங்கள் ...மாமல்லபுரம் 6

அனைவருக்கும் வணக்கம்...

எங்களது மாமல்லபுர பயண அனுபவங்களில்...


இதுவரை பார்த்து ரசித்தவை.......


மலைக்கோவிலும், கலங்கரை விளக்கமும்

ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில்

கடல் கிளிஞ்சல் அருங்காட்சியகம்

 பஞ்ச பாண்டவ ரதங்கள்இப்பொழுது  நாம் பார்க்கும் இடம் அர்ச்சுனன் தபசு ...இந்தியாவிலேயே   வித்தியாசமான    சிற்பக்கலை   அம்சமாக   இந்த அர்ஜுனன்   தபஸ்   எனும்   பாறைச்   சிற்ப   அமைப்பு கருதப்படுகிறது.

43 அடி உயரம்   கொண்ட   இந்த   திறந்த  வெளி  பாறை  அமைப்பில் புடைப்புச்சித்திரங்கள்   ஒரு    பிரம்மாண்ட   காட்சித்திரை   போன்று செதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த   பாறைச்சிற்பங்களில்   சித்தரிக்கப்பட்டிருக்கும்   காட்சிகள் அக்காலத்திய   புராணக்  கதைச்சம்பவங்களை  குறிப்பிடுகின்றன.


 வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. 

நிலைக்குத்துத் திசையில் சிற்பத்தொகுதி நான்கு அடுக்குகள்   அல்லது   நிலைகளாகக்   கருதி  வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலிருந்து பார்க்கும்போது முதல் நிலை விண்ணுலகையும், இரண்டாவது விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடைப்பட்ட நிலையையும்,            மூன்றாவது மண்ணுலகையும்,         அடியில் உள்ளது பாதாள உலகத்தையும் குறித்து நிற்பதாகக் கூறப்படுகின்றது.ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன், பூதகணங்கள் சூழ நின்று, வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன.

அருச்சுனன் பாசுபத அஸ்திரத்தை வேண்டிச் சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சிதான் இங்கே செதுக்கப்பட்டுள்ளது என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள்.   ஒருசிலர், பகீரதன் கங்கையை வர வைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சி இது என்று கூறுகிறார்கள்.


   இந்த ஒரு திறந்தவெளிப் பாறையில் சிற்பிகள் 150 க்கும் மேற்பட்ட சிற்பங்களை செதுக்கியுள்ளனர்.


   இவற்றைப் பொதுவாகக் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்: அர்ச்சுனன் சிவனிடம் பாசுபத அஸ்திரம் வேண்டி செய்யும் தவம்: இதில் உடல் ஒட்டி, எலும்பும் நரம்பும் வெளியே தெரியக்கூடிய தவக்கோலத்தில் ஒற்றைக் காலில் நின்று இரு கைகளையும் பூட்டி சூரிய வணக்கம் செய்யும் அர்ச்சுனன், கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து நிற்கும் சிவன், சுற்றி பூதகணங்கள்.

இரு பாறைப் பிளவுகளுக்கு இடையே கங்கை ஆறு ஓடிவருமாறு அழகாகச் செய்யப்பட்டிருக்கும் பாதை.  


   மழை   பொழியும்போது   இந்தப் பாதை வழியாக ஆறுபோலவே   ஓடும்  காட்சியைக்  காணலாம்.   கங்கை ஆற்றின் இருபுறமும் ஆற்றை நோக்கி வரும் சூரியன், சந்திரன், தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், கின்னரர்கள் (கீழுடல் பறவை, மேலுடல் மனிதர்). வதரியாசிரமம் (பத்ரிநாத்) எனப்படும் ஒரு திருமால் கோயில், அதன்முன் அமர்ந்திருக்கும் சில முனிவர்கள் (இவர்களின் தலை துண்டாகியுள்ளது), கங்கை ஆற்றில் குளித்துச் சடங்குகள் செய்யும் பக்தர்கள். வேடர்கள். இவர்கள் வேட்டையாடிய பொருள்களைக் கையில் எடுத்து வருமாறு அமைக்கப்பட்டுள்ளனர்.
ஒரே கல்லில் எத்தனை விதமான படைப்புகள்....

சேவல்,மயில்,வாத்து, மான், சிங்கம், கரடி, யானை குடும்பம், பாம்பு,
சிவன், விஷ்ணு, பூதகணங்கள், முனிவர்கள், மனிதர்கள் ....என ஒரே  தொகுதியில்   அனைத்து வடிவங்களும்....பார்க்கவே பிரமிக்க வைக்கும் அழகு....

தொடரும் ....

அன்புடன்

அனுபிரேம்


5 comments:

 1. அருமையான படங்கள். புகழ் பெற்ற இச்சிற்பங்களைப் பற்றிய விளக்கங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 2. அழகான படங்களுடன் பகிர்வு அருமை.

  ReplyDelete
 3. அருமையான மிக மிக அழகான புகைப்படங்கள் தகவலும் ரொம்ப நன்றாக உள்ளது சகோ/அனு. புகைப்படங்கள் ரொம்ப தெளிவாக இருக்கின்றன...

  ReplyDelete
 4. அருமையான படங்கள். தகவல்களும் சிறப்பு. நன்றி.

  ReplyDelete
 5. படங்கள் அனைத்தும் பளிச் பளிச்னு அழகா இருக்கு அனு !

  ReplyDelete