30 September 2020

பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம்

 வாழ்க வளமுடன் ,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிற்றூர் அருகே ஆனைமலைக்கும் நெல்லியம்பதி மலைக்கும் இடையே பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் உள்ளது.

இந்த விலங்குகளின் சரணாலயம், பரம்பிக்குளம், தோனகடவு, மற்றும் பெருவாரிபள்ளம் ஆகிய மூன்று இடங்களும்  சேர்ந்து மனிதனால் உருவாகப்பட்டதாகும்.  இதன் நுழைவு வாயிலில் தான் அழகிய துவையர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. 

 இந்த சரணாலத்திற்கு உட்பட்ட இடத்தில் 7 பெரிய பள்ளத்தாக்குகளும், 3 ஆறுகளும், தேக்கடி, பரம்பிக்குளம் அணை மற்றும் சோலையாறு அணை அமைந்துள்ளது. 

இங்கு காரபாரா ஆறு (Karappara river), மற்றும் குரியர்குட்டி ஆறு (Kuriarkutty river) போன்றவை வடிகால் பகுதியாக உள்ளது.


27 September 2020

ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம்...

 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் -

ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் முதல்  திருநாள் ..
26 September 2020

ஸ்ரீ ஆதி வராகப்பெருமாள் திருக்கோவில் , புத்தூர் - திருச்சி

 திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள புத்தூர் அக்ரஹாரத்தில் உள்ளது இந்த திருக்கோவில்.24 September 2020

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்

வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவு பஞ்சதுவாரகா தரிசனம் ...

இந்த ஸ்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.


21 September 2020

மேலே உயரே உச்சியில்...

 வாழ்க வளமுடன் ,

டாப்ஸ்லிப் , இந்த இடத்தின்  உண்மை பெயர் வேட்டைக்காரன் புதூர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கோ, இரைச்சல் போடும் இசைக் கருவிகளுக்கோ, போதைப் பொருட்களுக்கோ அனுமதி இல்லை. 

ஆனைமலையில் உள்ள கரிசன்சோழா என்னும் பகுதியை மூலிகை மருத்துவமனை என்றே செல்ல பெயரிட்டு அழைக்கின்றனர். அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.

டாப் ஸ்லிப்பின் நுழைவுப் பகுதியிலேயே மிக விசாலமான புல் வெளியைக் காணலாம். 

19 September 2020

திருக்கரம்பனூர், அருள்மிகு உத்தமர் திருக்கோயில்- திருச்சி

திருச்சியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் சேலம் செல்லும் சாலையில் டோல் கேட் அருகில் உள்ளது இத்திருக்கோவில் .பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 3 வது திவ்ய தேசம்.

17 September 2020

பஞ்சதுவாரகா தரிசனம் ...

 வாழ்க வளமுடன் 

துவாரகை - துவாரகா குஜராத் மாநிலத்தின் தேவபூமி. 
16 September 2020

ஆலு புஜியா


வாழ்க வளமுடன் 


இன்றைய பதிவில்  ஆலு புஜியா /உருளைக்கிழங்கு சேவ்  எப்படி ஈஸியா  செய்யலாம் என்னும் வீடியோ பதிவு ....


அன்புடன் 
அனுபிரேம் 
11 September 2020

பாரதியின் வாக்கு ...

 வாழ்க நலம்...இன்றைக்கு  மகாகவி பாரதியாரின் நினைவு நாள்...

ஆகவே கவியின் நினைவுகள் சில..

06 September 2020

டாப் ஸ்லிப் ஆனைமலை புலிகள் காப்பகம்

  வாழ்க வளமுடன் ,

கோவையில் இருந்து 78 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது டாப்ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வனம். பரம்பிக்குளம் கேரளா வன துறையாலும், டாப்ஸ்லிப்  தமிழக வன துறையாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.


இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம்... தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.


பொள்ளாச்சியிலிருந்து 36 கிமீ தூரம் பயணித்து அங்கிருந்து மலை ஏற்றம். 

03 September 2020

அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்

  வாழ்க வளமுடன் 

பொள்ளாச்சியின் புராதனப் பெயர், “இயற்கை வளமும், செல்வமும் கொழிக்கும் நாடு” என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வந்த “பொருள் ஆட்சி” என்ற பெயரே ஆகும். 

மூன்றாவது குலோத்துங்கச் சோழரின் ஆட்சிக்காலத்தில், இவ்வூர், “முடி கொண்ட சோழநல்லூர்” என்றும் அழைக்கப்பட்டுள்ளது.