01 September 2020

ஆதிப்ரமோத்ஸவம் - ஸ்ரீநம்பெருமாள் - ஸ்ரீரெங்கநாயாகி தாயார் சேர்த்தி சேவை

 வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவு ஆதிப்ரமோத்ஸவம் - கருட சேவை, ஸ்ரீரங்கம்

ஆதிப்ரமோத்ஸவம் - நெல் அளவை, ஸ்ரீரங்கம் 


ஆதிப்ரமோத்சவம் ஒன்பதாம் நாள் 

தாயார் பெருமாள் சேர்த்தி நாள், மட்டை அடி உற்சவமும் , தாயார் சன்னதி வெளி வாயில் சமாதானமும்..





 9-ம் நாள் காலை ஸ்ரீநம்பெருமாள் - ஸ்ரீரெங்கநாயாகி தாயார் சேர்த்தி சேவை



























நம்பெருமாள் ரெங்கநாயகி தாயார் சேர்த்தி திருமஞ்சனம்








































திருமஞ்சனத்திற்கு  பின் சேர்த்தி சேவை












திருவாய்மொழி - ஏழாம் பத்து


இரண்டாம் திருவாய்மொழி – கங்குலும்பகலும் 


3352

சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும்

திருவரங்கத்துள்ளாய்! என்னும் வந்திக்கும் *

ஆங்கே மழைக் கண்ணீர் மல்க

வந்திடாயென்றென்றே மயங்கும் *

அந்திப் போது அவுணன்  உடலிடந்தானே!

அலைகடல் கடைந்த ஆரமுதே *

சந்தித்து உன்சரணம் சார்வதேவலித்த

தையலை மையல் செய்தானே!

 5


3353

மையல் செய்தென்னை மனம்கவர்ந்தானே!

என்னும் மாமாயனே! என்னும் *

செய்யவாய் மணியே! என்னும் தண்புனல்சூழ்

திருவரங்கத்துள்ளாய்! என்னும் *

வெய்யவாள் தண்டு சங்கு சக்கரம் வில்லேந்தும்

விண்ணோர்முதல்! என்னும் *

பைகொள் பாம்பணையாய்! இவள்திறத்தருளாய்

பாவியேன் செயற்பாலதுவே.

- 6


3356

என்திருமகள் சேர்மார்வனே! என்னும் 

என்னுடையாவியே! என்னும் *

நின்திரு வெயிற்றாலிடந்து நீகொண்ட

நிலமகள் கேள்வனே! என்னும் *

அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட

ஆய்மகளன்பனே! என்னும் *

தென்திருவரங்கம் கோயில் கொண்டானே!

தெளிகிலேன் முடிவிவள் தனக்கே. (2)

9

ஆதிப்ரமோத்ஸவம் படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கியவர்களும் , கண்டு மகிழ்ந்த  அனைவருக்கும் நன்றிகள் பல ...


ஸ்ரீ நம்பெருமாள் திருவடிகளே சரணம் ...



அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. ஸ்ரீரங்க தரிசனம் இனிமை...
    ஸ்ரீ ரங்கநாதன் திருவடிகள் போற்றி.. போற்றி..

    ReplyDelete
  2. அழகான படங்கள். உங்கள் பதிவு மூலம் திருவரங்கம் சென்று வந்தேன்! :) நன்றி.

    ReplyDelete