03 September 2020

அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்

  வாழ்க வளமுடன் 

பொள்ளாச்சியின் புராதனப் பெயர், “இயற்கை வளமும், செல்வமும் கொழிக்கும் நாடு” என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வந்த “பொருள் ஆட்சி” என்ற பெயரே ஆகும். 

மூன்றாவது குலோத்துங்கச் சோழரின் ஆட்சிக்காலத்தில், இவ்வூர், “முடி கொண்ட சோழநல்லூர்” என்றும் அழைக்கப்பட்டுள்ளது.


முந்தைய பதிவு   டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி

ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி

ஆழியார் நீர் அடுக்கு கண்டு ரசித்த பின் நாங்கள் சென்ற இடம் மாசாணியம்மன் திருக்கோவில்.

போன வருடம் ஆடி  மாத  வெள்ளிக்கிழமை பதிவில்  பதிவிட்ட செய்திகளை மீண்டும் மீள்பதிவு செய்கிறேன் ....பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ளது ஆனைமலை. மலையில் தோன்றி பாய்ந்து வருகிறது உப்பாறு. ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது அருள்மிகு மாசாணியம்மன் கோவில்.


 இக்கோவிலில் அருள்மிகு மாசாணியம்மன்  17 அடி சயனக் கோலத்தில் அருள் புரிகின்றாள். அம்மனின் காலடியில் இருக்கும் அசுரன் மகுடாசுரன் என அழைக்கிறார்கள்.
ஸ்தல வரலாறு -

பழங்காலத்தில் நன்னன் என்ற குறுநில மன்னன் இப்பகுதியை ஆண்டுவந்தான். அவனுக்கு சொந்தமான தோட்டத்தில் விளையும் மாம்பழத்தை யார் உண்டாலும் அவருக்கு மரண தண்டனை நிச்சயம் என சட்டம் விதித்திருந்தான்.

அப்போது ஒரு சிறுமி இந்த சட்டத்தை அறியாமல் இந்த தோட்ட பழத்தை உண்டுவிட்டாள். இதையறிந்த நன்னன் அச்சிறுமிக்கு மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றினான்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவனுடன் போர்புரிய அதில் நன்னன் கொல்லப்பட்டான். பிறகு அந்த கிராம மக்கள் அனைவரும் இறந்த அந்த சிறுமிக்கு கோவில் கட்டி வழிபடலாயினர். அக்கோவிலே மாசாணியம்மன் கோவில் என்று கூறப்படுகிறது.மாசாணம் என்றால் மயானம் என்று பொருள். மயானத்தில் இருக்கும் அம்மன் நீதி தேவதையாக பார்க்கப்படுகின்றார்.


கோயில் பிராகாரத்தில் சப்தகன்னிகள், பேச்சி, துர்கை, மகிஷாசுர மர்த்தினி, பிள்ளையார், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் அருள்புரிகிறார்கள்.

மிளகாய் அரைத்து வழிபாடு:

பொருள்களைக் களவு கொடுத்தல், கடன் பிரச்னை, நம்பிக்கை துரோகம், பகை என மனக்குறையோடு வரும் பக்தர்கள் அங்குள்ள நீதிக் கல்லில் மிளகாய் அரைத்து பூசி நீதியை வேண்டுகின்றனர்.

இங்கு வழிபடும் பக்தர்கள் கோயிலை விட்டு செல்லும் போது  தங்களின் மனக்குறை இறக்கி வைத்து விட்டு செல்கின்றனர்.


 கோவிலின் உள்ளே மிக சுத்தமாக பராமரிக்கப்படுகிறது . நாங்கள் சென்றது ஒரு சாதாரண நாளில் அன்றும் சிறிது கூட்டமாகவே இருந்தது . ஆனாலும் நல்ல தரிசனம் . பலர் அம்மனுக்கு புடவை காணிக்கை செலுத்துகின்றனர்.

மிகவும்  பரவசம் செய்யும்  அழகில் அம்மன் அருள் புரிகிறாள் .


எடுத்து சென்ற காலை உணவை இங்கு அமர்ந்து சாப்பிட்டு விட்டு ....எங்களது பயணத்தை டாப்ஸ்லிப் நோக்கி ஆரம்பித்தோம் ....பசுமையான வழி தொடரும் .....

அன்புடன் ,

அனுபிரேம் 4 comments:

 1. Thanks For Sharing The Amazing content. I Will also share with my
  friends. Great Content thanks a lot.
  positive thinking stories tamil

  ReplyDelete
 2. இத்திருக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்..
  ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை.. கொங்கு மண்டல மக்களின் இஷ்ட தெய்வம்...

  ReplyDelete
 3. சில கோயில்களுக்குச் செல்லும்போது என்னையும் அறியாமல் சில மனச்சுமைகள் கீழே இறங்குவதைப் போல உணர்ந்துள்ளேன். அத்தகைய உணர்வினை இக்கோயிலில் நான் பெற்றேன். நாம் அம்மன் மீது வைத்திருக்கின்ற அபரிமிதமான பக்தியோ, என்னவோ ஒன்று நம்மை அந்த அளவிற்கு இட்டுச்செல்லும். இவ்வாறாக எனக்கு இஷ்ட தெய்வமாக நான் வணங்குகின்ற பட்டீஸ்வரம் கோயிலுக்குச் செல்லும்போதும் உணர்வேன்.

  ReplyDelete
 4. நல்ல தகவல்கள். மாசாணியம்மன் பற்றிய தகவல்கள் நன்று. முன்னரே தகவல்களை அறிந்திருந்தாலும் மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

  படங்களும் அழகு. தொடரட்டும் பயணம்.

  ReplyDelete