வாழ்க வளமுடன்
பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை இதமாக இருப்பதுடன், மனம் மகிழும் வண்ணம் ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது.
முந்தைய பதிவு டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி
நாங்கள் திருச்சியில் இருந்து பின்னிரவில் கிளம்பி , பொள்ளாச்சிக்கு காலையில் வந்து சேர்ந்தோம் ...முதலில் நாங்கள் பார்க்க நினைத்த இடம் ஆழியார் நீர் அடுக்கு ( aliyar water cascade)....குழந்தைகளுடன் சென்றதால் முதலில் இங்கு சென்று அவர்களை நீரில் விளையாட விடும் எண்ணத்தில் இங்கு வந்தோம்.
பிரதான சாலையிலிருந்து சிறிது தூரம் கீழிறங்கி சென்று இந்த இடத்தை காண வேண்டும்.
நடந்து வந்து இந்த இடத்தை காணவும் கொஞ்சம் அதிர்ச்சியே ....படங்களில் நாங்கள் கண்ட இடம் வேறு மாதரி இருந்தது ...
இணையத்தில் பார்த்த படங்கள் .. |
இணையத்தில் பார்த்த படங்கள் .. |
எங்கள் பார்வையில் ... |
ஆனாலும் பசங்கள் ஏமாறாத அளவு கொஞ்சம் தண்ணீர் இருக்கவும் ...அதில் மிக மகிழ்ச்சியாக ஆடி, பாடி , விளையாண்டு மகிழ்ந்தனர் ...
இங்கிருந்து அடுத்து எங்கு சென்றோம் அடுத்த பதிவில் தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம்
தண்ணீர் குறைவான காலத்தில் போயிருந்தீர்களோ?
ReplyDeleteஇணையத்தின் படம், பல திரைப்படப் பாடல் காட்சிகளை இந்த லொகேஷனில் எடுத்திருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.
நாங்கள் சென்ற போது நிறையவே தண்ணீர் இருந்தது. அங்கேயும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கும் சென்று வந்தோம்.
ReplyDeleteபடங்கள் அழகு.
வணக்கம் சகோதரி
ReplyDeleteஅழகான இடங்கள். கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. இயற்கையின் வனப்புகள் என்றுமே பார்ப்பதற்கு இனிதானவைதான். ஆழியார் என்றால் பெயர் போன யோகா பயிற்சி நிலையம் உள்ளதே..! அதுதானே...அடுத்த பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.