15 August 2020

சுதந்திர தின வாழ்த்துக்கள் ....

 இன்று  நமது 74-வது ஆண்டு சுதந்திர தினம்....

 அனைவருக்கும்  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ....சுதந்திர தினம், பல போராட்டங்களுக்கு பிறகு பல ஆண்டுகளாக அடிமை சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நாம், அதை உடைத்தெறிந்த நாள். 

இந்த 74வது சுதந்திர தினத்தில், 

நமது மூவர்ண கொடி பற்றிய சுவாரஸ்யமான சில  தகவல்கள் ....

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீராரும் விவசாயியுமான பிங்காலி வெங்கய்யா அவர்கள்.


முதல் இந்தியக் கொடி ஆகஸ்ட் 7, 1906 அன்று கல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. பச்சை, மஞ்சள், சிவப்பு நிறத்தில் மூன்று கிடைமட்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. இது பழைய வடிவம்.

கிலாபத் இயக்கத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான மௌலான மொகமத் அலி தலைமையில் 1923ம் ஆண்டு ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பிங்கலி வெங்கய்யா, இந்தியாவுக்கு தேசியக்கொடி வேண்டும் எனப் பேசினார். 

அவரையே தேசியக்கொடியினை வடிவமைத்திடும்படி காந்தி அடிகள்  கேட்டுக்கொண்டார். 

இவர் வடிவமைத்த கொடியிலும் அசோகச் சக்கரமே இருந்தது. 

இவர் “A National Flag for India“ எனும் புத்தகமும் எழுதினார். இந்தப் புத்தகம் அச்சாவதற்குரிய அனைத்துச் செலவுகளையும் எஸ்.வி. ராமமூர்த்தி ஏற்றுக்கொண்டார். 


1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் ராஜேந்திர பிரசாத் தலைமையில், அபுல் கலாம் ஆசாம், சரோஜினி நாயுடு, அம்பேத்கார் ஆகியோர் கொண்ட ஒரு அவசர அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் ஒரு கொடி வேண்டுமென தீர்மானித்தது. இதற்காக பல கொடிகள் உருவாக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

அப்படி  22 முறை இந்திய கொடியானது மாற்றப்பட்டது. 
இறுதியாக ஒரே அளவிலான காவி, வெள்ளை, பச்சை வண்ண பட்டைகளுடன்,
 நடுவில் நீல நிறத்திலான அசோக சக்கரம் தாங்கிய கொடி வேண்டுமென அந்த அமைப்பு முடிவு செய்தது. 

1947 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று இந்திய தேசிய கொடியின் மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டு, 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ம் தேதி அரசியல் சட்ட நிர்ணய சபையின் முன் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. 

இறுதியாக பிங்காலி வெங்கய்யா வடிவமைத்த கொடியை இந்திய தேசிய கொடியாக அந்த அமைப்பு அறிவித்தது.

 தேசிய கொடியில் உள்ள காவி நிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது, 
வெள்ளை நிறம் உண்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது. 
கொடியில் உள்ள பச்சை நிறம் செழிப்பைக் குறிக்கிறது.

 நடுவில் உள்ள அசோக சக்கரம் தர்ம விதிகளை குறிக்கிறது

இந்தியாவின் தேசியக் கொடி சட்டப்படி, காதி,  கையால் நெய்யப்பட்ட பருத்தி அல்லது பட்டினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். 

கொடியை தயாரிப்பதற்கான உரிமை காதி அபிவிருத்தி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையத்திடம் உள்ளது. 


 கொடி ஏற்றுதல் தொடர்பான நெரிமுறைகளின் படி, கொடி பகல் நேரத்தில் ஏற்றப்பட வேண்டும். தேசிய கொடிக்கு மேல் வேறு எந்த அடையாளமோ அல்லது வேறு எந்த கொடியோ இருக்கக்கூடாது.


பாரத நாடு

எங்கள் நாடுமன்னும் இமயமலை யெங்கள் மலையே
    மாநில மீதிது போற் பிறிதிலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
    இங்கிதன் மாண்பிற் கெதிரதுவேறே?
பன்னரு முபநிட நூலெங்கள் நூலே
    பார்மிசை யேதொரு நூல் இது போலே!
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
    போற்றுவம் இஃதை எமக்கிலைஈடே.

1

மாரத வீரர் மலிந்தநன் னாடு
    மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
    நல்லன யாவையும் நாடுறும் நாடு
பூரண ஞானம் பொலிந்தநன்நாடு
    புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரும் நாடே
    பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.

  2


இன்னல்வந் துற்றிடும் போததற்கஞ்சோம்
    ஏழையராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
    தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன்பாலும்
    கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
    ஓதுவம் இஃதை எமக்கிலைஈடே. 3


வாழ்க பாரதம் ....

இடர் பல கண்ட போதும் என்றும் நேர்மையில், உண்மையில், அன்பில் தலை நிமிர்ந்து நிற்கும் நம் பாரதம் ...,

வாழ்க வாழ்கவே ....அன்புடன்
அனுபிரேம்7 comments:

 1. வாழ்க பாரதம்.. வளர்க தமிழகம்..
  வந்தேமாதரம்.. வந்தேமாதரம்...

  ReplyDelete
 2. தளத்தின் புதிய வடிவமைப்பு நன்றாக இருக்கிறது..
  நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.
  பதிவு அருமை.

  ReplyDelete
 5. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். தகவல்கள் நன்று.

  ReplyDelete
 6. வணக்கம் சகோதரி

  தங்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 7. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். பகிர்வும் சிறப்பு

  துளசிதரன்

  நேற்று வலை வர முடியலை அனு. தாமதமான வாழ்த்துகள். பதிவு நல்லாருக்கு

  கீதா

  ReplyDelete