வாழ்க வளமுடன்
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...
இந்த வருடம் நடைப்பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் -
விநாயகர் சதுர்த்தி திருவிழா காட்சிகள்
முதல் நாள் -
காலை - கொடியேற்றத்துடன் துவங்கியது.
மாலை- வெள்ளி மூஷிகவாகனம்
ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - வெள்ளி ரிஷபம்
மூன்றாம் திருநாள்
காலை - ஸ்ரீ விநாயகர் வெள்ளி கேடயம்
ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - விமானம்
நான்காம் திருநாள்
இரவு - ஸ்ரீ விநாயகர் தங்க மூஷிகம்
ஸ்ரீ சண்டிகேஸ்வரர் வெள்ளிரிஷபம்
ஐந்தாம் திருநாள்
இரவு- ஸ்ரீவிநாயகர் சிறிய வெள்ளிரிஷபம்
ஸ்ரீ சண்டிகேஸ்வரர் மர ரிஷபம்
விநாயகர் அகவல் – ஔவையார்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம்
கற்பக விநாயகர் பதம் பணிவோம்.
ReplyDeleteநான்காம் நாள் திருவிழா படங்கள் மிக அருமை.
அகவல் படித்தேன்.
கணபதி தரிசனம் கண்கவரும் படங்களுடன்...
ReplyDeleteஓம் கணபதயே போற்றி...
வாசிக்கும் வலைப்பூக்கள் பகுதியில் எனது தளத்தையும் கண்டேன்.. மகிழ்ச்சி.. நன்றி..
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அழகு.
ReplyDeleteபிள்ளையாரின் அலங்காரம் மிக அருமை... ஒய்யாரமாக சரிந்து படுத்திருக்கும் காட்சி அழகு...
ReplyDeleteநான்குநாட்கள் நடந்த விழாக்கால படங்கள் அழகு. விநாயகர் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.
ReplyDeleteமிகவும் அழகான பிள்ளையார்பட்டி விநாயகர் புகைப்படம்Tamil Song Lyrics
ReplyDelete