25 August 2016

யசோதை கண்ணன்... தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 6

அனைவருக்கும்  காலை வணக்கங்கள் ....

       
       கிருஷ்ணன் ஜெயந்தி வாழ்த்துக்களுடன் மீண்டும் ஒரு   தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் ...       இன்றைய ஓவியத்தில் யசோதை கண்ணன்... எங்கள் வீட்டு கண்ணன் பிடிக்க எடுத்த படம் ...முந்தைய ஓவியங்கள் ...

கண்ணன் தாமரையுடன் .....

பெருமாளும் தாயாரும்

விநாயகர்  ....

மாப்பிள்ளை கிருஷ்ணர் ...

ராதை கிருஷ்ணர்  ...


ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்

கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் ..தாலேலோ...அவன் வாய்நிறைய மண்ணை உண்டு

 மண்டலத்தைக் காட்டியபின்

ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ...!

ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ...!

(ஆயர்பாடி ...)பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு

 மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ ...!

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு

மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ ...!


அந்த மந்திரத்தில் அவர் உறங்க

மயக்கத்திலே இவனுறங்க

 மண்டலமே உறங்குதம்மா ஆராரோ  ...!

மண்டலமே உறங்குதம்மா ..ஆராரோ ...!


(ஆயர்பாடி ...)

நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்


 தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் ..தாலேலோ ...!


நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்


 தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் ..தாலேலோ ...!


அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை

 போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார்.. ஆராரோ  ...!

யாரவனைத் தூங்கவிட்டார் ..ஆராரோ ...!

(ஆயர்பாடி ...)


கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே ..தூங்கிவிடும்

அன்னையரே துயிலெழுப்ப ..வாரீரோ ...!


கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே ..தூங்கிவிடும்

அன்னையரே துயிலெழுப்ப ..வாரீரோ ...!


அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் ..

போதை முத்தம் பெறுவதற்க்கும் ..

கன்னியரே கோபியரே வாரீரோ  ...!

கன்னியரே கோபியரே வாரீரோ.. ...!ஆயர்பாடி மாளிகையில்

 தாய்மடியில் கன்றினைப் போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான்.. தாலேலோ  ...!

மாயக்கண்ணன் தூங்குகின்றான் ...தாலேலோ ...!
அன்புடன் 

அனுபிரேம் 

19 August 2016

லால்பாக் மலர் கண்காட்சி 2016 ...ஒவ்வொரு ஆண்டும்   சுதந்திர தினம்  மற்றும்  குடியரசு நாள் வாரத்தில்  பெங்களுரு  லால்பாக் பொட்டானிக்கல் கார்டனில்  மலர் கண்காட்சி நடைப்பெறும்.   இந் நிகழ்வினை தோட்டக்கலை துறையும்  ,    மைசூர் தோட்டக்கலை சங்கமும் ஏற்பாடு  செய்கின்றது.


இந்த ஆண்டு 4 லட்சம் ரோஜா மலர்களால் பாராளுமன்ற கட்டிடம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.கர்நாடக தோட்டக்கலையின் தந்தை என்று போற்றப்படும் பசுமை சிற்பி எம்.எச்.மரிகெளடாவின் நூற்றாண்டு விழா நிகழாண்டில் தொடங்கியுள்ளது  அதனை சிறப்பிக்கும் வகையில் இந்த முறை மலர் கண்காட்சி அமைந்து இருந்தது.

இந்தியாவின் பசுமை ஆபரணமாக விளங்கும் பெங்களூருக்கு பூங்கா நகரம் என்ற புகழ் கிடைக்க லால்பாக் பூங்கா மற்றும் கப்பன் பூங்காவே காரணமாகும். இத்தனை புகழுக்கும் லால்பாக் பூங்காவை உயர்த்தியவர்தான் டாக்டர் எம்.எச்.மரிகெளடா. இந்தியாவின் தோட்டக்கலை மாநிலம் என்ற பெயரை கர்நாடகத்துக்கு பெற்றுத் தந்தவரும் மரிகெளடாதான். அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பாலமாக விளங்கி கர்நாடகத்தை தோட்டக்கலையின் தொட்டிலாக மாற்றி, அதைப் பாராட்டி தாலாட்டி வளர்த்தவர் மரிகெளடா.

 இந்த ஆண்டு அவர் பிறந்த நூற்றாண்டாகும். இதை ஆண்டு முழுவதும் கொண்டாட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே நிகழாண்டுக்கான சுதந்திர தின மலர்க்கண்காட்சி, எம்.எச்.மரிகெளடாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


அங்கு எடுக்கப் பட்ட சில படங்கள் இங்கே...

ரோஜா மலர்களால் ஆன பாராளுமன்ற கட்டிடம் ..
மலர்களால் உருவாக்கப்பட்ட வீடு
காற்றலை


சுற்றிலும் நீர் தெளிப்பான்கள்...


மலர்களின் வழியில் பாராளுமன்றம்...

அன்புடன்

அனுபிரேம்
14 August 2016

பாரதியின் வரிகள்..

அனைவருக்கும் வணக்கம்....

எங்கு நோக்கினும்  மூவர்ண்ண கொடி விளம்பரங்கள்....அனைத்து  நாளிதலிழும் சுதந்திர தின சிறப்பு சலுகைக்கான அழைப்புகள்...

ஆனால் இன்றைய நாளை நாம் எப்படி பார்ப்பது......என்ற குழப்பமான நிலை...விடுமுறை நாள் என்று மட்டுமே இது வரை எண்ணி இருந்தது போய்....வேறு பல நல்ல சிந்தனைகளை வித்திடும் நாளாக இன்று அமைய வேண்டும் என்ற எண்ணத்துடனே இன்றைய பதிவு...


தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! -நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே! -அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா! -தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!வேத முடையதிந்த நாடு, -நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி  பாப்பா!


 
வாழ்க நம் தேசம்...

வளர்க அதன் புகழ்..  சுதந்திர தின வாழ்த்துக்கள்
அன்புடன்

அனுபிரேம்....

09 August 2016

செடியில் படும் ஒளி கதிர்கள்...சில புகைப்படங்கள்...

இன்று எனது காட்சிப்பதிவுக்குள்....


ஒளிக் கதிர்கள் செடியின்

இடையே சென்று  காட்டும் - அழகு..அன்புடன்

அனுபிரேம்


04 August 2016

கொத்தமல்லி தொக்கு

கொத்தமல்லி தொக்கு


அனைவருக்கும்  வணக்கம் ....

இன்றைய  ஸ்பெஷல்   கொத்தமல்லி தொக்கு......  ஒரு   முறை  சுற்றுலா  சென்ற  போது  தங்கை  ஒருவர்  செய்து  எடுத்து வந்தார்...சுவை  மிகவும்  பிடிக்கவே...
குறிப்பு   கேட்டு   இப்பொழுது  அடிக்கடி  செய்வது  உண்டு...இந்த தொக்கு   சாதத்துக்கும்,   தோசைக்கும்   அருமையாக இருக்கும்...மேலும்   உறுகாய்   மாதிரியும்    உபயோகப்படுத்தலாம்...


கொத்தமல்லியைப்   பற்றி ....
 • கொத்தமல்லி கீரை இரத்த உற்பத்திக்கும், இரத்த சுத்திக்கும் மிக சிறந்த இயற்கை மருந்தாகும்.

 •  கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, பி 1 சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன.

 • இது மாலைக்கண் நோய், சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும் வல்லமை உடையது.

 • சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும்.

 •  பித்தம், வாந்தி இரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.

 • இது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும்.

 • கொத்தமல்லி நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம்.

 • வாயு பிரச்சனையை குணமாக்கும்.

 • இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும்.

 • உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும்.

 • இதை அதிகம் உண்பதால் மந்தம் தோன்றும் எனவே அளவோடு உண்டு பலன் பெறுவது நல்லது. 
 •   - (இணையத்திலிருந்து)


மருதாணி மாதரி இருக்குனு பயப்பட வேண்டாம்...சுவை அருமைதேவையானவை..


கொத்தமல்லி   -  1 கட்டு ( இரு கை பிடி)

புளி                          - சிறிது

உப்பு                       - சிறிது

வறுக்க

உ.பருப்பு             -  3  ஸ்பூன்

வரமிளகாய்     - 3

தாளிக்க

கடுகு                      - சிறிது

பெருங்காயம்     - சிறிது
செய்முறை..

வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து...அதனுடன் கொத்தமல்லி,    புளி, உப்பு  சேர்த்து நன்றாக அரைக்கவும்..


பின் கடுகு, பெருங்காயம்  தாளித்து....அரைத்த பொருட்களையும்  சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கினால்....தொக்கு தயார்...
வறுத்தவை

அரைத்தப்பின்

தாளிக்கும் போது


அன்புடன்

அனுபிரேம்