கொத்தமல்லி தொக்கு
தேவையானவை..
கொத்தமல்லி - 1 கட்டு ( இரு கை பிடி)
புளி - சிறிது
உப்பு - சிறிது
வறுக்க
உ.பருப்பு - 3 ஸ்பூன்
வரமிளகாய் - 3
தாளிக்க
கடுகு - சிறிது
பெருங்காயம் - சிறிது
செய்முறை..
வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து...அதனுடன் கொத்தமல்லி, புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்..
பின் கடுகு, பெருங்காயம் தாளித்து....அரைத்த பொருட்களையும் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கினால்....தொக்கு தயார்...
அனைவருக்கும் வணக்கம் ....
இன்றைய ஸ்பெஷல் கொத்தமல்லி தொக்கு...... ஒரு முறை சுற்றுலா சென்ற போது தங்கை ஒருவர் செய்து எடுத்து வந்தார்...சுவை மிகவும் பிடிக்கவே...
குறிப்பு கேட்டு இப்பொழுது அடிக்கடி செய்வது உண்டு...இந்த தொக்கு சாதத்துக்கும், தோசைக்கும் அருமையாக இருக்கும்...மேலும் உறுகாய் மாதிரியும் உபயோகப்படுத்தலாம்...

கொத்தமல்லியைப் பற்றி ....
மருதாணி மாதரி இருக்குனு பயப்பட வேண்டாம்...சுவை அருமை
- கொத்தமல்லி கீரை இரத்த உற்பத்திக்கும், இரத்த சுத்திக்கும் மிக சிறந்த இயற்கை மருந்தாகும்.
- கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, பி 1 சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன.
- இது மாலைக்கண் நோய், சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும் வல்லமை உடையது.
- சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும்.
- பித்தம், வாந்தி இரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
- இது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும்.
- கொத்தமல்லி நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம்.
- வாயு பிரச்சனையை குணமாக்கும்.
- இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும்.
- உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும்.
- இதை அதிகம் உண்பதால் மந்தம் தோன்றும் எனவே அளவோடு உண்டு பலன் பெறுவது நல்லது.
- - (இணையத்திலிருந்து)
தேவையானவை..
கொத்தமல்லி - 1 கட்டு ( இரு கை பிடி)
புளி - சிறிது
உப்பு - சிறிது
வறுக்க
உ.பருப்பு - 3 ஸ்பூன்
வரமிளகாய் - 3
தாளிக்க
கடுகு - சிறிது
பெருங்காயம் - சிறிது
வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து...அதனுடன் கொத்தமல்லி, புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்..
பின் கடுகு, பெருங்காயம் தாளித்து....அரைத்த பொருட்களையும் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கினால்....தொக்கு தயார்...
வறுத்தவை |
அரைத்தப்பின் |
தாளிக்கும் போது |
அன்புடன்
அருமையான சமையல் குறிப்பு....
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ReplyDeleteசுலபமாகச் செய்து விடலாம்... செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.....
இப்படியும் செய்வதுண்டு...இன்னுமொரு செய்முறை சொல்லுகின்றேன் அனு....கொத்தமல்லிக் கட்டு, பச்சைமிளகாய், புளி, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், வெந்தயம்,...
ReplyDeleteஇரண்டு ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடி பண்ணி வைத்துக் கொள்ளவும். மற்றவற்றை நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும் (பச்சை மிளகாய்க்குப் பதிலாகச் சிவப்பும் உபயோகிக்கலாம்..) அரைத்ததை வாணலியில் நல்லெண்னை வைத்துக் கடுகு தாளித்து விட்டு அரைத்த விழுதைப் போட்டு நன்றாக வதக்கி, சுருண்டு வரும் போது வெந்தயப்பொடி போட்டு கொஞ்சம் வதக்கியதும் இறக்கி வைத்துவிடலாம். இதுவும் எல்லாவற்றிற்கும் நன்றாக இருக்கும்.
கீதா
அடுத்த முறை இவ்வாறு செய்து பதிவிடுகிறேன்..
Deleteநன்றி கீதா அம்மா...
நாங்களும் இது போல் செய்வோம்.
ReplyDeleteபாரதி கவிதை துளி அருமை.