19 August 2016

லால்பாக் மலர் கண்காட்சி 2016 ...



ஒவ்வொரு ஆண்டும்   சுதந்திர தினம்  மற்றும்  குடியரசு நாள் வாரத்தில்  பெங்களுரு  லால்பாக் பொட்டானிக்கல் கார்டனில்  மலர் கண்காட்சி நடைப்பெறும்.   இந் நிகழ்வினை தோட்டக்கலை துறையும்  ,    மைசூர் தோட்டக்கலை சங்கமும் ஏற்பாடு  செய்கின்றது.


இந்த ஆண்டு 4 லட்சம் ரோஜா மலர்களால் பாராளுமன்ற கட்டிடம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.



கர்நாடக தோட்டக்கலையின் தந்தை என்று போற்றப்படும் பசுமை சிற்பி எம்.எச்.மரிகெளடாவின் நூற்றாண்டு விழா நிகழாண்டில் தொடங்கியுள்ளது  அதனை சிறப்பிக்கும் வகையில் இந்த முறை மலர் கண்காட்சி அமைந்து இருந்தது.

இந்தியாவின் பசுமை ஆபரணமாக விளங்கும் பெங்களூருக்கு பூங்கா நகரம் என்ற புகழ் கிடைக்க லால்பாக் பூங்கா மற்றும் கப்பன் பூங்காவே காரணமாகும். இத்தனை புகழுக்கும் லால்பாக் பூங்காவை உயர்த்தியவர்தான் டாக்டர் எம்.எச்.மரிகெளடா. இந்தியாவின் தோட்டக்கலை மாநிலம் என்ற பெயரை கர்நாடகத்துக்கு பெற்றுத் தந்தவரும் மரிகெளடாதான். அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பாலமாக விளங்கி கர்நாடகத்தை தோட்டக்கலையின் தொட்டிலாக மாற்றி, அதைப் பாராட்டி தாலாட்டி வளர்த்தவர் மரிகெளடா.

 இந்த ஆண்டு அவர் பிறந்த நூற்றாண்டாகும். இதை ஆண்டு முழுவதும் கொண்டாட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே நிகழாண்டுக்கான சுதந்திர தின மலர்க்கண்காட்சி, எம்.எச்.மரிகெளடாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


அங்கு எடுக்கப் பட்ட சில படங்கள் இங்கே...

ரோஜா மலர்களால் ஆன பாராளுமன்ற கட்டிடம் ..
























மலர்களால் உருவாக்கப்பட்ட வீடு












காற்றலை


சுற்றிலும் நீர் தெளிப்பான்கள்...






மலர்களின் வழியில் பாராளுமன்றம்...





அன்புடன்

அனுபிரேம்








7 comments:

  1. நேரில் பார்த்த உணர்வு
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. நானும்கூட ஒரு ரெண்டு வருஷம் லால்பாக்'குக்கு அடிக்கடி போயிருக்கேன் :)

    பதிவின் தலைப்பு & படங்கள் பழைய நினைவுகளை அசைபோட வைத்தன !

    ReplyDelete
  3. படங்கள் அழகு... வாழ்த்துக்கல்.

    ReplyDelete
  4. அருமையான படங்கள்.
    பாரதி கவிதை பகிர்வு அருமை.

    ReplyDelete