30 November 2016

ஆரோவில் 2 (Auroville ) --- புதுச்சேரி

அனைவருக்கும் வணக்கம்...


இதுவரை  புதுச்சேரி  பயணத்தில்....


புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )


புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  )..,,,


 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... என  இதுவரை ரசித்தோம்,..

இன்றும் ஆரோவில் (Auroville ) பற்றிய பதிவே....




ஆரோவில்  தோன்ற காரணமான    ஸ்ரீஅரவிந்த அன்னையை பற்றி.....


அன்னை என்று அனைவராலும் அழைக்கப்படும்   "" மிர்ரா அல்ஃபாஸா "  பாரீஸ் நகரில் 1878 ஆண்டு, பிப்ரவரி திங்கள் 21 ஆம் நாள்  அவதாரம்  செய்தவர்.     சிறு வயதிலேயே படிப்பிலும், ஒவியங்கள் வரைவதிலும், பியானோ வாசிப்பதிலும் தேர்ச்சி
பெற்றிருந்த மிர்ரா மற்ற குழந்தைகளிடமிருந்து வேறு பட்டு விளங்கினார்,   அறியாப்பருவத்திலேயே  ஆன்மீகம் அவரை ஆட்கொண்டது.  நான்கு வயதிலேயே தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து     தியான நிலையில் மூழ்கத் தொடங்கினார்..  ஆன்மீக ஒளி, வெள்ளம்   போல்   பெருகி   அவருள்   பாய்ந்து  பரவசப்படுத்தியது.   12 வயது இருக்கும் போது பல இரவுகள்,  தன் உடலை விட்டு வரும்  அனுபவத்தை உணர்ந்தார். 


   பின்னர் சித்து வேலைகளில் நாட்டம் ஏற்பட்டதால் அல்ஜீரிய நாட்டுக்குச் சென்று அங்கு மாகஸ் தியான் மற்றும் அவர் மனைவி அல்மா தியான் ஆகியோரிடம் பல சித்து ஞானங்களைக் கற்றார்.


   விவேகானந்தரின் "ராஜயோகம்" நூல் அன்னையின் ஆன்மீகவளர்ச்சிக்குத் துணை புரிந்தது...


    19 -வது வயதில் மிர்ராவிற்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.  திருமணத்தில்  நாட்டம்    இல்லாத  அன்னைக்கு இதுவும் ஒரு உதவியாக  அமைந்தது, தொழில்  முறையாக பாண்டிச்சேரி வந்த அவரது  கணவர் பால் ரிச்சர்ட், இந்தியாவின் பெருமைகளையும்   அரவிந்தரைப்   பற்றியும்    அறிந்து நாடு திரும்பியதும்   அவற்றை   அன்னைக்கு   எடுத்துரைத்தார்.


   தன்  கணவருடன்  1914 ஆம்   ஆண்டு   புதுவை   வந்த  அன்னை அரவிந்தரைச் சந்தித்தார். தன்னை ஆன்மீகப் பாதையில் வழி நடத்தும்   ஞானியாக, தன் உள்ளூணர்வில் கண்ட கிருஷ்ணனாக, ஆத்ம அனுபவத்தின் அளப்பரிய   சக்தியாக அரவிந்தரை அன்னை உணர்ந்தார்.


 முதலாம் உலகப் போர் ஆரம்பித்த போது மிர்ரா தாயகம் திரும்பினார். அங்கிருந்து ஜப்பான் முதலிய நாடுகளுக்கு
 அவர் சென்று வந்தார், ஆனாலும் அவர் மனம் இந்திய மண்ணிலேயே குடி கொண்டிருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப்
பின்னர் 1920-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு திரும்பிய அன்னை, தான் தன் பூத உடல் நீத்த தருணம் வரை அங்கேயே
தங்கிவிட்டார்.


1956 ஆம் ஆண்டு அரவிந்த ஆசிரமம் உருவான போது அதன் உடலும், உயிருமாக அன்னை  விளங்கினார். அன்பும், அருள், ஆனந்தம், அமைதி  என  ஆன்மீக  ஒளி  பரப்பிய  ஆசிரமம்  அன்னையின் அருளால் உன்னதமான   நிலையை  அடைந்தது. 1952 ஆம் ஆண்டு அரவிந்தர் உலக கல்வி மையமும் 1964 ஆம் ஆண்டு ஆரோவில் என்னும்   உலக சமாதான நகரமும்  பாண்டிசேரியில்  அன்னையின் முயற்சியால்   உன்னதமான  நிலையை   அடைந்தது.


 சுமார் 50 ஆண்டுகள் அன்னையின் அன்பும் அருளாட்சியும் மக்களுக்குக் கிட்டியது. 95 வயது வரை மக்களுக்கு  அன்பையும் அருளையும் வழங்குவது மட்டுமே தன் பணியாகக் கொண்டிருந்த அன்னை 1973 ஆம் ஆண்டு  நவம்பர் 17-ம் நாள் தன் பூத உடலைத் துறந்தார். இலட்சக்கணக்கான் அன்பர்கள் இன்றும் நாள்தோறும் அவரது  பூத உடல் அமைந்த சமாதியில் தியானத்தில் அமர்ந்து அமைதியையும், ஆனந்தத்தையும் அடைகிறார்கள்...,






ஆரோவில்   உள்ள பெரிய ஆலமரம்...











 மாத்ரிமந்திர் காண்பதற்கு  முதலில் அனுமதி  சீட்டுகள்  பெறவேண்டும்.... ஒரு  அறிமுக வீடியோவை  பார்த்த பிறகு, ஆரோவில் பார்வையாளர்கள் 'மையத்தில் அந்த சீட்டை  இலவசமாக பெறலாம்.

பார்வை நேரம்..

 திங்கள்  - சனிக்கிழமை  ..

காலை 9 -  1:00 மணி மற்றும் 1.30 - மாலை 4.30 மணி

ஞாயிறு - காலை 9.30 மணி 1 மணி வரை மட்டுமே,


இந்த மைய பகுதியில்   அமர்ந்து தியானம் செய்ய
 வேண்டுமானால்... அதற்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும்...

மிகவும்   அழகான இடம்....பராமரிப்பு மிகவும் அருமை...



தொடரும்


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..




அன்புடன்
அனுபிரேம்




25 November 2016

ஆரோவில் (Auroville ) --- புதுச்சேரி

அனைவருக்கும் வணக்கம்....



புதுச்சேரி  பயணத்தில்....


புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )


புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  ).. யை  இதுவரை ரசித்தோம்,,,,


இன்று காண இருப்பது  உதய நகரத்தை....


பாண்டிச்சேரி  நகரத்திலிருந்து   8 கிமீ   தொலைவில்   அமைந்துள்ள உதய நகரம் என்ற பொருள்படும்     ஆரோவில்  நகரம்   சர்வதேச  புகழ் பெற்ற நகரம்.  உலகம்   ஒன்றுதான்   என்பதை உணர்த்தும் வகையில்    124 நாடுகளில் இருந்து மண்   எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர்.





''மனித குல ஒருமைப்பாட்டை உண்மையாக்குவதே " ஆரோவில்லின் நோக்கமாகும் 'என்ற பிரகடனத்தோடு  ஸ்ரீஅரவிந்த அன்னையால் தோற்றுவிக்கப்பட்டது ஆரோவில் என்னும் சர்வதேச நகரமாகும். இது அவர்தம்   திருக்கனவில் உதித்ததாகும்.

'பழமையானவை, தற்காலத்தவை, புதியவை, இனிவரவிருப்பவை ஆகிய எல்லா மதங்களையும் விட்டு விட்டுக் குறிப்பாகத் தெய்வத் தன்மையுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்களுக்காக ஏற்பட்டதே ஆரோவில். தன்னுடைய உணர்வைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதற்கான ஓர் இடம் இது 'என்று அன்னை பூமிப்பரப்பின் வரைபடத்தை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்தில் தொட்டுக் காட்டினார்.

பெரிய ஆலமரத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லாலான ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களிலிருந்தும் அந்தந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண் கொணரப்பெற்று அங்கு இடப்பெற்றது.


நகரத்தின் மையத்தில் ஆரோவில்லின் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி பூந்தோட்டங்கள் உள்ளன. இந்த மையப்பகுதிக்கு பேரமைதி (அமைதி) என்று பெயர்.






மையப்பகுதிக்கு  செல்லும் வழி..






அழகிய குடில்..





மைய பகுதி....golden globe ..மாத்ரி மந்திர் ...

 நாங்கள் சென்றது மாலை மயங்கும் நேரத்தில்  ..அப்பொழுது இந்த மைய பகுதி பார்ப்பதற்கு....தக தக வென...மிகவும்   ஜொலித்தது
...





அங்கே வைக்கப் பட்டிருந்த  கல்வெட்டில் ஆரோவிலின் வரலாறு....









ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.



தொடரும்...


ஆரோவில் (Auroville )  அன்னை 


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..




அன்புடன்

அனுபிரேம்..


புதுச்சேரி ... ஊசிட்டேரி ஏரி (ousteri lake )..

அனைவருக்கும் வணக்கம்....


புதுச்சேரி  பயணத்தில்....


புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach ) யை ரசித்தோம்,,,,


இன்று செல்லபோவது படகு நிலையம்....ஊசிட்டேரி  படகு குழுமம்....

ஊசிட்டேரி  ஏரி   பாண்டிச்சேரிலிருந்து   10 கிமீ தொலைவில் உள்ள  மிகப்பெரிய ஏரி ஆகும். இது  புதுச்சேரி-விழுப்புரம் சாலையில்  390  ஏக்கர்  பரப்பளவில்,  ஒரு சரணாலயம் போன்று  பாதுகாக்கப்படுகிறது,



 இந்த  ஏரி விஜயநகர ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது...












இங்கு பல வகையான பறவைகள் காணப்படுகின்றன....
40 க்கும் மேற்பட்ட இடம் பெயரும் பறவைகள் வசிக்கின்றன... கோல்டன் Oriole, நாரை, வெள்ளை Ibis, மசோதா திறந்த நாரை, தையல்காரர் பறவை மற்றும்  Owlets வர்ணம் பூசிய தனிப்பட்ட பறவை இனங்கள் என பல பறவைகள் இங்கு உள்ளன...


நாங்கள் சென்ற மாலை வேளையில்  அங்கங்கே சில பறவைகள் தான் தெரிந்தன....






இங்கு படகு சவாரியும் அருமையாக இருந்தது...நாங்க பெடலிங் படகு எடுத்து..ஒரு மணிநேரம் சென்றோம்...


அமைதியான இடம்...



தொடரும்....




 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... 


ஆரோவில் (Auroville )  அன்னை 


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..





அன்புடன்

அனுபிரேம்





20 November 2016

புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )




புதுச்சேரி (பாண்டிச்சேரி )  பயணம்.....



 அடுத்து நாங்கள் பார்த்தது    புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...




புதுவை   கடலூர்  சாலைலிருந்து  8kms தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது.

சுண்ணாம்பாறு கடலில் சேரும் இடத்தில் தீவு போன்ற அமைப்பு இருப்பதால் இது பாரடைஸ் பீச் என அழைக்கப்படுகிறது.


 இந்த சுண்ணாம்பாற்றில் படகு சவாரியும் விடப்படுகிறது. இதற்கென ஸ்பீடு படகு, சீ குரூஸ், பாண்டூன் படகு, வாட்டர் ஸ்கூட்டர் உள்ளிட்ட வித விதமான படகுகள் இயக்கப்படுகின்றன.

படகில் சென்றால்   நடுவில் உள்ள தீவு போன்ற இடத்தில் சில மணிகளை அனுபவிக்க விட்டு மீண்டும் அழைத்து வருவார்கள் என தகவல் சேகரிப்பு இடத்தில் கூறினர்...























கருக்கும் மழை மேகங்கள்...







நாங்கள் சென்ற போது படகு சேவையும் முடிந்து  இருந்தது... ஆனால்  அந்த இடமே அழகாக இருந்தது...அதனால் அதை மட்டும் ரசித்து விட்டு திரும்பினோம்....


தொடரும்.....





புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  )..,,,


 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... 


ஆரோவில் (Auroville )  அன்னை 


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..




அன்புடன்
அனுபிரேம்


18 November 2016

புதுச்சேரி (பாண்டிச்சேரி ) பயணம்.....



புதுச்சேரி எனவும் பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படும் இந்நகரம், சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், வங்கக் கடலோரத்தில் அமைந்த நடுவண் அரசின் பிரதேசமாகும்.


இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது.


ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.





 எங்கள்  சுற்றுலா  இந்த முறை புதுவையில்.......





இனிவரும் பகுதிகளில்  புதுவையின் சில சுற்றுலா தளங்களை காணலாம்...


  "புரொமெனேட் பீச்" 



 "புரொமெனேட் பீச்"   என அழைக்கப்படும் இந்த  அழகிய கடற்கரையில் காந்திசிலை கம்பீரமாக காட்சித்  தருகிறது. இங்கிருக்கும் தூண்களில் அழகிய சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கிறது...


 மேலும் இந்த கடற்கரையில் தான்  பாண்டிச்சேரியின் தலைமை செயலகம் , கார்கில் நினைவுச்சின்னம், பழைய கலங்கரை விளக்கம்,போர் நினைவுச்சின்னம், பழைய சுங்கச்சாவடி, டூப்ளே சிலை  என அனைத்தும் அமைந்து உள்ளன....



இணையத்திலிருந்து















( இந்த முறை கடற்கரையில் எடுத்த  படங்கள் தெளிவாகவே  இல்லை...)



 ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம் 


இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, 1666 அதாவது ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது . புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் .மணக்குள விநாயகரும் ஒருவர்...



    இக்கோவிலின் உட்பகுதின் மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல வண்ணப்   படங்கள் வரையப்பட்டு நம்மை பிரமிக்க வைக்கிறது....

   அனைத்து படங்களும் ரொம்ப அழகு...


  இங்குள்ள   சுற்றுச் சுவரில்   40   விதமான   விநாயகரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது...








இணையத்திலிருந்து



இங்கு அருகிலே ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் இருக்கிறது...இந்த முறை காண முடியவில்லை....அடுத்த முறை ஆசிரமம் கண்டிப்பாக செல்ல வேண்டும்....

தொடரும்...



புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )


புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  )..,,,


 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... 


ஆரோவில் (Auroville )  அன்னை 


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..



அன்புடன்
அனுபிரேம்