சந்திர சந்திரசூடேஸ்வரர் திருக்கோவில் (மலைக்கோயில்)
பெங்களூரில் இருந்து சுமார் 39 கி.மீ தூரத்தில் ஓசூர் நகரம் உள்ளது. அருகே ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது மரகதாம்பிகை உடன் உறை சந்திர சந்திரசூடேஸ்வரர் திருக்கோவில் .
கோபுரம்
மூலவர் -சந்திரசூடேஸ்வரர்
அம்மன் -மரகதாம்பிகை
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - பச்சைகுளம்
பழமை - 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் - பத்ரகாசி
ஊர் - ஓசூர்
தல வரலாறு:
கயிலாயத்திலிருந்து சுவாமி அம்பாள் இருவரும் வரும்போது சுவாமி உடும்பு ரூபம் எடுத்து வருகிறார். அந்த உடும்பை பிடிக்க அம்பாள் பின் தொடருகிறார். காடு மேடு தாண்டி இப்பகுதிக்கு வருக்கிறார். அப்படி வரும்போது முத்கலர், உத்சாயனர் என்ற இரு பெரும் ரிஷிகள் இம்மலையில் தவமிருக்கின்றனர்.
தங்களது தவ ஞானத்தால் ஈசன் என்று உணர்ந்து அந்த உடும்பை பிடிக்க எண்ணினர். அப்பொழுது அந்த பல்லி மறைந்து விடுகிறது கோபம் கொண்டு ரிஷிகளை அம்பாள் சபிக்க ரிஷிகள் இருவரும் முறையே ஊமையன் செவிடன் ஆகி விடுகின்றனர்.
பின்பு தவம் செய்த அம்மன் முன் இறைவன் தோன்றியதாக தல வரலாறு சொல்கிறது.இன்றும் கோவில் அமைந்திருக்கும் மலை பாறையின் மீது ஒரு பல்லியின் வடிவம் உள்ளதாக சொல்லப்படுகிறது..
முகப்பு
சிறப்பம்சம்:
மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் உள்ள ஜலகண்டேசுவரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் மத்தியில் இந்த லிங்கம் உள்ளது.மழை இல்லாத காலங்களில் இந்த லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புக்குள் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர் .16 நாட்கள் தொடர்ந்து இவ்வாறு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி தெப்பமாக வைத்து விட்டு கற்பூரம் ஏற்றி வைத்து வணங்கி விட்டு வந்து விடுகிறார்கள். பின்பு சில மணி நேரங்களில் தண்ணீர் வற்றி விட்டால் மழை வராது என்று பொருள். தண்ணீர் வடியாமல் தெப்பம் போல் நின்றிருந்தால் அடுத்த சில நாட்களில் மழை வருமாம்.
திருக்கோவிலின் வெளிப்புறம்..
கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், உற்சவர் மண்டபம் என இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் மரகதாம்பிகை சிற்றாலயம், வள்ளி-சண்முகர்- தெய்வானை, இராச கணபதி, சப்தமாதர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியே சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிலைகள் உள்ளன
இது ஒரு சின்ன மலை தான்.கோவில் வரை வாகனங்கள் செல்வதற்கு மலை பாதையும் உள்ளது.பக்தர்கள் நடந்து மலை ஏறுவதற்கு படிகளும் உள்ளது. இது ஆயிரம் ஆண்டு பழமை உள்ள கோவில். இந்த கோவிலுக்கு கர்நாடகா ,ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருந்து நிறைய பக்தர்கள் வருகிறார்கள்.
அன்புடன்
அனுபிரேம்
சிலமாத பெங்களூர் வாழ்வில் நான் இந்தக்கோயிலுக்கு ஒரு முறை போயிருக்கிறேன். அழகான கோயில்!! :)
ReplyDeleteஅருமையாகச் சொல்லி இருக்கீங்க சகோ...
ReplyDeleteஅங்கு சென்ற நினைவலைகள் மனதை வருடுகின்றன நன்றி
Wonderful construction
ReplyDelete