07 November 2016

கூடலழகர் - திருக்கூடல்,மதுரை ...



கூடலழகர்   திருக்கோவில்     வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் 90 வது திவ்ய தேசம்....

பாண்டிய நாட்டின் பதினெட்டுத் திவ்யதேசங்களில் இதுவும் ஒன்றாகும்.

"கிருதமாலா" என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து இவ்வூரை (மதுரை) அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று
சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று.

இணையத்திலிருந்து


இங்கே பெருமாள் கிழக்குத் திசை நோக்கியவாறு அமர்ந்த கோலத்தில்  ஆதிசேச குடையோடு   கூடலழகர் எனும் திருநாமத்துடன் காட்சியளிக்கிறார்.


தாயார்    -   மதுரவல்லி நாச்சியார், வகுளவல்லி


 தீர்த்தம்   - ஹேமபுஷ்கரிணி, சக்கர தீர்த்தம்,  கிருதமாலா                                                   மற்றும்                                 வைகை நதி


 விமானம் -  அஸ்டாங்க விமானம் எனும் எண்கோண                           விமானமாகும்.


மங்களாசாசனம் -   பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்



 பிருகு முனிவர், வல்லபர், பெரியாழ்வார், ஆகியோருக்குக் கூடலழகர் காட்சியளித்துள்ளார்.


இணையத்திலிருந்து



இணையத்திலிருந்து



வரலாறு

     இத்தலத்தைப் பற்றி, பிரம்மாண்ட புராணமான    கூடற் புராணம்
போன்றவற்றால் விரிவான செய்திகளை அறிய முடிகிறது. நான்கு யுகங்களிலும்  இத்தலம் இருந்ததாக புராண வரலாறு உரைக்கிறது.




     கிரேதா யுகத்தில் பிரம்ம தேவனின் மைந்தன்  திருமாலை அர்ச்சா ரூபத்தில் வழிபட விரும்பி, விஸ்வகர்மாவை அழைத்து அதற்கேற்றார் போல  ஒரு கோவிலைப் படைக்கச் சொன்னதும் இந்தக் கிருதமாலா நதியிடையே அஷ்டாங்க விமானத்துடன் இக்கோவிலைப் படைக்க எம்பெருமானும் பிராட்டியும் சகல பரிவாரங்களுடன் இங்கு எழுந்தருளினர்.
          இதே  யுகத்தில்தான் சிவன் உமையவளைக் கூட இத்தலத்தே தவமிருந்து  இப்பெருமானின் அருள்பெற்று உமையவளை மணம் புரிந்தார்.


     திரேதாயுகத்தில் பிருது என்னும் மன்னன் ஒருவன் எல்லாத் தலங்கட்கும் சென்று வழிபட்டு வரும் சமயத்தில் இத்தலத்தின் மீது பறக்கும் போதும்  அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் விமானம் பறக்க முடியாமல் போகவே இவ்விடத்தே இறங்கி இப்பெருமானின் திருவழகில் ஈடுபட்டு நெடுநாள் தங்கி  பரமபதம் அடைந்தான்.

 

 துவாபரயுகத்தில் விஷ்ணு பக்தியில் மிகச்சிறந்து விளங்கிய அம்பரிஷன்  மன்னனும் இப்பெருமானை வழிப்பட்டு முக்தியடைந்தான்.



     கலியுகத்தின் ஆரம்பத்தில் புருரவன் என்னும் பேரரசன் இந்தக்
கூடலழகருக்குப் பணிவிடை பல செய்து வைகுந்தம் அடைந்தான். அவனது  மகன் இந்திரத்யுமனன் தந்தையைப் பின்பற்றியே தொண்டூழியம் செய்து  உய்ந்து போனான். இவனது புத்திரனே மலயத்துவசப் பாண்டியன் என்பவன். இவனே வடநாட்டு வேந்தர்களை வென்று இமயமலைமீது மீன் கொடியை
நாட்டி மீன் முத்திரையும் பதித்துத் திரும்பினான். இவனைத்தான்
பெரியாழ்வார்,

"பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர்"      என்கிறார்.



இணையத்திலிருந்து




இணையத்திலிருந்து



பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண் ணா! உன்

சேவடி செவ்வி திருக் காப்பு.

(திருப்பல்லாண்டு - 1)




 அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி

ஆயிரம்  பல்லாண்டு !

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற

 மங்கையும் பல்லாண்டு !

வடிவார் சோதி வலத்துறை யும்சுட

ராழியும் பல்லாண்டு !

படைப்போர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச

சன்னியமும்  பல்லாண்டே.

(திருப்பல்லாண்டு - 2)



நாங்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு நாள் இவரை சேவிக்கும் பாக்கியம் பெற்றோம்...


மூலவர் மிக அழகாக ...பிரம்மாதமாக..பிரமாண்டமான அழகில் காட்சி தருகிறார்...

மேலும் இகோவிலைப் பற்றிய சிறப்புகள் அடுத்த பதிவில்...

தொடரும்..


கூடலகரின் சிறப்புகள்.... - திருக்கூடல்,மதுரை ... (2)


அன்புடன்

அனுபிரேம்

1 comment:

  1. மிக அழகான பதிவு. பாடல் பகிர்வு ,செய்திகள் எல்லாம் அருமை.

    ReplyDelete