புதுச்சேரி (பாண்டிச்சேரி ) பயணம்.....
அடுத்து நாங்கள் பார்த்தது புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...
புதுவை கடலூர் சாலைலிருந்து 8kms தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது.
சுண்ணாம்பாறு கடலில் சேரும் இடத்தில் தீவு போன்ற அமைப்பு இருப்பதால் இது பாரடைஸ் பீச் என அழைக்கப்படுகிறது.
இந்த சுண்ணாம்பாற்றில் படகு சவாரியும் விடப்படுகிறது. இதற்கென ஸ்பீடு படகு, சீ குரூஸ், பாண்டூன் படகு, வாட்டர் ஸ்கூட்டர் உள்ளிட்ட வித விதமான படகுகள் இயக்கப்படுகின்றன.
படகில் சென்றால் நடுவில் உள்ள தீவு போன்ற இடத்தில் சில மணிகளை அனுபவிக்க விட்டு மீண்டும் அழைத்து வருவார்கள் என தகவல் சேகரிப்பு இடத்தில் கூறினர்...
கருக்கும் மழை மேகங்கள்...
நாங்கள் சென்ற போது படகு சேவையும் முடிந்து இருந்தது... ஆனால் அந்த இடமே அழகாக இருந்தது...அதனால் அதை மட்டும் ரசித்து விட்டு திரும்பினோம்....
தொடரும்.....
புதுச்சேரி ... ஊசிட்டேரி ஏரி (ousteri lake )..,,,
ஆரோவில் (Auroville ) உதய நகரம்....
ஆரோவில் (Auroville ) அன்னை
ஆரோவில் கடற்கரை ( aurovile beach )..
அன்புடன்
அனுபிரேம்
புகைப்படங்கள் அருமை இரசித்தேன் தொடர்கிறேன்
ReplyDeleteபுகைபடங்களுடன் செய்திகள் அருமை.
ReplyDeleteநான் இந்த கடற்கரையை பார்த்தது இல்லை.
அனு அந்த நடுவில் உள்ள தீவு போன்ற இடத்தில் சுனாமிக்கு முன்பு பல கடைகள் இருந்தன. சாப்பாடுக் கடைகள் முதல் பாசி மணி சிப்பிகளில் செய்த கைவினைப் பொருட்கள் எல்லாம் க. சுனாமியில் எல்லாம் அழிந்து போக இடையில் வெற்றிடமாக இருக்க இப்ப்போது மீண்டும் வந்துவிட்டன. அடுத்த முறை செல்ல நேர்ந்தால் பார்த்துவிட்டு வாருங்கள். பீச்சும் கொஞ்ச நேரம் விடுவார்கள். நேரக் கணக்கு உண்டு. அது போல முதலியார் குப்பம் பாண்டிச்சேரி சென்னை நடுவில் இருக்கும் படகு குழாம். அதுவும் நன்றாக இருக்கும் ஆனால் கொஞ்சம் காஸ்ட்லி என்பது என் தனிப்பட்ட எண்ணம்.
ReplyDeleteபடங்கள் அழகு!
கீதா