15 August 2017

நாட்டு வணக்கம்....




நாட்டு வணக்கம்....

பாரதியின் வரிகளில்....



எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
      இருந்ததும் இந்நாடே-அதன் 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
      முடிந்ததும் இந்நாடே-அவர் 
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து 
      சிறந்ததும் இந்நாடே-இதை 
வந்தனை கூறி மனதில் இருத்தி, என் 
      வாயுற வாழ்த்தேனோ-இதை 
'வந்தே மாதரம், வந்தே மாதரம்' 
      என்று வணங்கேனோ?




இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள் 
      ஈந்ததும் இந்நாடே- எங்கள் 
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி 
      அறிந்ததும் இந்நாடே- அவர் 
கன்னிய ராகி நிலவினி லாடிக் 
      களித்ததும் இந்நாடே-தங்கள் 
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல் 
      போந்ததும் இந்நாடே-இதை 
'வந்தே மாதரம், வந்தே மாதரம்' 
      என்று வணங்கேனோ?


மங்கைய ராயவர் இல்லறம் நன்கு 
      வளர்த்ததும் இந்நாடே-அவர் 
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித் 
      தழுவிய திந்நாடே-மக்கள் 
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் 
      சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர் 
அங்கவர் மாய அவருடற் பூந்துகள் 
      ஆர்ந்ததும் இந்நாடே-இதை 
'வந்தே மாதரம், வந்தே மாதரம்' 
      என்று வணங்கேனோ?



....இத்தகைய சிறப்பான என் நாட்டிற்கு எனது வணக்கங்கள்....





உறுதி வேண்டும்




மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;


நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;


கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;


தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.


கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;


பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,


மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;


உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்







என்றும் எங்கும் உண்மை நின்றிட வேண்டும்.....






எனது  கைவண்ணத்தில் உருவான சுதந்திர தின வாழ்த்து அட்டை...






அன்புடன்

அனுபிரேம்.....



9 comments:

  1. அருமையான வணக்கம் தந்த பதிவு
    ஓவியங்கள் சிறப்பு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. எழுச்சி மிகும் மகாகவியின் பாடல்கள்..
    அழகான கைவண்ணத்தில் வாழ்த்து மடல்..

    அருமை.. அருமை..
    சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. பாராட்டுகள். இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அருமையா இருக்கு உங்கள் கைவண்ணம்....

    பாரதியின் பாடல் வரிகள் சொல்லி பதிவு..அருமை....

    இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. 71 வது சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பாரதியின் பாடல், வாழ்த்து அட்டை எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள் அனு.

    ReplyDelete
  7. இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  8. சிறப்பான பாடல்.

    சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete