27 August 2017

புளி மிளகாய்...

வாழ்க  நலம்..


புளி மிளகாய்....

இதுவரை இந்த உணவை பார்த்ததும் இல்லை...உண்டதும் இல்லை....

வழக்கம் போல் எங்கள் ப்ளாக் வாசிக்கும் போது தெரிந்து கொண்டேன்...அம்மா இந்த    முறை ஊருக்கு வந்த போது இதை பற்றிய பேச்சு வந்தது  ...

அப்போ அம்மா  ... ..முன்னேல்லாம்  செஞ்சது உண்டு....அப்புறம்  நீங்க எல்லாம் சாப்பிடறது இல்ல ...அதனாலே  செய்றதும்     இல்ல..னு... சொன்னாங்க..



சரி மா வாங்க ..இப்ப செய்யலாம் னு சொல்லி ... வீட்ல இருந்த மோர் மிளகாய் வச்சு....   அம்மா சமைக்க ..நான் படம் எடுத்தேன்...

நல்ல காரமா உறுகாய்க்கு தம்பி மாதரி இருந்துச்சு...










தேவையானவை


மிளகாய்   - 3௦ -40

புளி               - எலுமிச்சை அளவு..

உப்பு

தாளிக்க  -கடுகு, உ.பருப்பு, பெருங்காயம்...


மிளகாயை நடுவில் கீறிக்கனும்..



புளி..



தாளித்து...பின் மிளகாயை சேர்த்து வதக்கணும்..



புளி கரைசலையும் சேர்த்து..உப்பு போட்டு 

நன்கு சுண்ட விட 

புளி மிளகாய் ரெடி...








புதுசு புதுசா....சமையல் குறிப்பு தர எங்கள் ப்ளாக்கும் நன்றிகள்  பல...





அன்புடன்

அனுபிரேம்


10 comments:

  1. நாவில் நீர் ஊறுகிறது புகைப்படம் கண்டு.

    ReplyDelete
  2. புளி மிளகாய் நன்றாக இருக்கிறது. படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  3. அருமை, எங்கள்புளொக்கில் நெ.தமிழனின் குறிப்புப் பார்த்து நானும் செய்தேனெ சூப்பரா வந்துது. நீங்க பருப்பு சேர்த்திருக்கிறீங்க.

    ஆனா இதுக்கு எலுமிச்சை அளவை விட கொஞ்சம் அதிகமாகவே புளி தேவைப்படும் அப்போதான் உறைப்பு குறைவாயிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா...

      இது காரம் இல்லாத மிளகாய்...அதனால் எலுமிச்சை அளவு புளி போதும் ...சாப்பிடும் போதும் காரம் புளிப்பு எல்லாம் சரியாகவே இருந்தது...

      Delete
  4. நிச்சயம் தயிர்சாதத்தின் perfect match.

    ReplyDelete
  5. பார்க்கும்போதே காரம் மண்டைக்கு ஏறுகிறதே! :)

    ReplyDelete
  6. ஆஹா!! அனு செம!!! இந்த மிளகாய்லதான் என் அம்மாவும் புளி மிளகாய் போடுவாங்க...நானும்! கொஞ்சம் வெல்லம் சேர்த்துக்குவாங்க. உ ப போட மாட்டோம். மத்தபடி சேம்...இதிலேயே இஞ்சி பொடியா நறுக்கிச் சேர்த்துச் செஞ்சா புளி இஞ்சி நு கேரளத்துல சொல்லுவாங்க. இந்தப் புளி இஞ்சி இல்லாத கேரளத்துக் கல்யாணங்கள் இருக்காது!!

    நல்ல ரெசிப்பி நாக்குல நீர் ஊறிடுச்சு!!! பகிர்விற்கு நன்றி!!!

    ReplyDelete
  7. வாங்க கீதாக்கா...

    எனக்கும் வெல்லம் சேர்க்கிறது பிடிக்கும்..ஆன இந்த புளி மிளகாய்க்கு சேர்க்கல..

    புளி இஞ்சி யும் ஒரு ஓணத்துக்கு கேரளா நண்பி செஞ்சு கொடுத்தாங்க..சுப்பரா இருந்துச்சு...

    ஆன அம்மா புளி போடாம ....மா இஞ்சி வச்சு ஒரு உறுகாய் செய்வாங்க...அதுவும் நல்லா இருக்கும்..

    ReplyDelete
  8. பார்க்கும்போதே நல்லா இருக்கு. செய்யனும். எங்க ஊர் மிளகாயில செய்யலாமா தெரியல.அதிராவிடம்தான் கேட்கனும். இந்த மிளகாய் கிடைக்காதே. நான் இங்கு பார்க்கல. அதுவும் அம்மா செய்தது என்றா .நல்ல டேஸ்டியா இருந்திருக்கும்.

    ReplyDelete