20 August 2017

கண்ணுக்கு விருந்தாக...

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்...


நேற்று ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினம்....

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. 

அதிலும், நேற்று  175-வது ஆண்டு புகைப்பட தினமாகும். 







புகைப்பட கருவியை உருவாக்கு வதற்கான முயற்சி 13-வது நூற்றாண்டிலேயே தீவிரமடைந்து விட்டது. அப்போது கேமரா அப்ஸ்குரா என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து, சிறியதும், பெரியதுமாக பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 


மிகப்பெரிய முன்னேற்றம் 1825-ம் ஆண்டு ஏற்பட்டது. 

பிரான்ஸை சேர்ந்த ஜோசப் நீப்ஸ் என்பவர் ஒரு கட்டிடத்தின் புகைப்படத்தை தனது கருவியில் படம் எடுத்தார். ஆனால், அந்த பிம்பம் 8 மணி நேரத்திற்கு பிறகு அழிந்துவிட்டது.


1839-ம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். 
அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார். இது கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல்லாகும். 


அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து  என்பதாகும். 


அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.



மரத்தாலான இந்த புகைப்படக் கருவியில் லென்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு டாகுரியோடைப் என்று பெயரிடப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது. 

இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயல் பாடுகளை 1839-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி ‘ப்ரீ டூ தி வேர்ல்ட்’ என உலகம் முழுவதும் அறிவித்தது. 
அந்த நாளையே ஆண்டுதோறும் உலக புகைப்பட தினமாக கொண்டாடுகிறோம்.



1841-ல் பிரிட்டனை சேர்ந்த வில்லியம் ஹென்ரி பாக்ஸ் என்பவர் கலோடைப் என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இதில் நெகட்டிவ்களாக பேப்பர்கள் பயன்படுத்தப்பட்டன. அதிலிருந்து பாசிட்டிவ் இமேஜ் உருவாக்கப்பட்டது. 


1851-ல் பிரெடிரிக் ஸ்காட் என்பவர் சில்வர் நைட்ரேட் பயன்படுத்தப்பட்ட வெட் கோலோடியன் செயல் முறையை கண்டறிந்தார். 


1880-களில் செல்லுலாய்ட் பிலிம்களை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் கருவியை ஜான் கார்பட், ஹன்னிபால் குட்வின், ஈஸ்ட்மேன் கோடாக் ஆகியோர் தயாரித்தனர்.. இந்த முறையில் செல்லுலாஸ் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது.


1888-ம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார். 


அதைத்தொடர்ந்து 1900-ல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மி.மி. ஸ்டில் கேமராக்களை 1913-ல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத் துறையையே புரட்டிப்போட்டது.


முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981-ம் ஆண்டு தயாரித்தது. 

அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

(இணையத்திலிருந்து)


புகைப்பட  தினத்திற்காக ஏற்கனவே 


 கோமதி அம்மா- (உலக புகைப்பட தினம், )


என எல்லாரும்  அழகான புகைப்படங்களை பகிர்ந்தார்கள்....



எனக்கும் படங்கள் எடுப்பது மிகவும் பிடிக்கும் ...


அதனால் ஒரு நாள் தாமதம் ஆனாலும் பகிர்வது தான் முக்கியம் என நினைத்ததால் ....சில அழகு புகைப்படங்கள் இன்று உங்கள் 
கண்ணுக்கு விருந்தாக...






கூட்டமாய்...




விழுந்தும் அழகு\...




காத்திருப்பு....





உயர்ந்த மரமும் , சிறியவரும்




வண்ண நீர்க்kumil...



நீர்க்குமிழியை பிடிக்கும் சிறு கைகள்..




நீர்க்குமிழிக்கான நேரம்...



இப்படங்கள் எல்லாம் கோடை விடுமுறையின் போது ...

கப்பன் பார்க்கில்  (cubbon park ) கிளிக்கியவை...


“I believe that photography has the power to tell stories, inspire generations and create positive impact in the world”


– Korske Ara 


அன்புடன்

அனுபிரேம்


10 comments:

  1. எல்லாப் புகைப்படங்களும் அருமை. புகைப்படக்கருவி உள்ளிட்ட தகவல்கள் சுவாரஸ்யம். இன்று எங்கள் ப்ளாக்கில் வெளியாகி இருக்கும் பூனைப்படங்களை நேற்று உ பு தி க்காக ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்ததைத்தான் இன்று ப்ளாக்கில் இங்கு வெளியிட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  2. புகைப்பட கருவியின் வரலாறு அருமை.
    படங்கள் எல்லாம் அழகு.
    கோடை விடுமுறையில் குழந்தைகளின் குதுகல நீர்க்குமிழி படங்கள் அழகு.
    எல்லா படங்களும் அழகு.
    என் பதிவையும் குறிபிட்டதற்கு நன்றி அனு.

    ReplyDelete
  3. புகைப்படக் கருவியின் வரலாறு அத்துடன் படங்களின் தொகுப்பு..
    படங்கள் அனைத்தும் அழகு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  4. துளசி: புகைப்படக் கருவியின் தகவல்கள் அனைத்தும் அருமை. நானும் ரசிப்பவன்... ஆனால் எடுப்பதில்லை. உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன...முதல் படமும், புறா படமும் வெகு சிறப்பு!!!

    கீதா: அனு செம ஃபோட்டோஸ்...ஹைஃபைவ்!! உங்களுக்கும் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் உண்டு என்பது தெரியும்!!! அழகா இருக்குப்பா...தகவல்களும் அருமை!!

    ReplyDelete
  5. என் கேமராவில் லென்ஸ் எரர் வந்துருச்சு அனு..ஸோ இனி அது சரியாகும் வரை புகைப்படம் எடுக்க முடியாது....பல பார்க்கும் போது மனதும், கண்ணும், கைகளும் துரு துரு என்று வருகிறது ஆனால் எடுக்க முடியாதே....மிஸ்ஸின்ங் எ லாட்!!

    கீதா

    ReplyDelete
  6. அழகான புகைப்படங்கள், விரிவான தகவல்கள்.....

    எனது பதிவினையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. அனு நலம்தானே?.. படங்கள் அனைத்தும் அழகு.. அந்த தனியே தெரியும் பபிள்.. சூப்பர் ஏதோ பலூன்போல இருக்கிறது பார்க்க .. சொல்லாவிட்டால் தெரியாது பபிள் என்பது.. அதைப் பிடிப்பவர் மகனோ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா...

      நாங்கள் நலமே...உங்கள் விடுமுறை எப்படி இருந்தது.....


      ம்ம் பபிள் பிடிப்பவர் இளையவர்....விடுபவர் பெரியவர்...

      நானும் சேர்ந்தே விட்டுடோம்...மிக மகிழ்ச்சியான நேரம்...

      மீண்டும் அங்கு சென்று பபிள் விடும் நேரத்திற்குகாக காத்திருக்கிறோம்...

      Delete
  8. கருத்துக்களும் புகைப்படங்களும் மிக அழகு!

    ReplyDelete