14 August 2017

ஆடி 28 நம்பெருமாள் ..காவேரி தாயாருக்கு சீர்வரிசை வைபவம்...



ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில்..


நேற்று (13.8.2017 ) நம்பெருமாள் ஸ்ரீரங்கம் காவேரி கரை அம்மாமண்டபத்தில்... காலை எழுந்தருளி.... மாலையில் காவேரித்தாயருக்கு  பட்டு புடவை, மாலைகள் மற்றும் சிறிய உணவு மூட்டை போன்ற  மங்களப் பொருட்களை சீர்வரிசையாக வழங்கினார் ..




















வெளி ஆண்டாள் சன்னதி...







காவேரியில் நீர்......

படங்களை கண்டு தரிசித்த உடன் இங்கும் பகிர ஆசை வந்தது...




படங்கள் அனைத்தும் முகநூலில் பகிரப்பட்டவையே....

பகிர்ந்த பக்தர்களுக்கு மிகவும் நன்றி...

................

கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்

கனவிரு ளகன்றது காலையம்பொழுதாய்

மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்

வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி

எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த

இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்

அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.



-தொண்டரடிப் பொடியாழ்வார்

திருப்பள்ளியெழுச்சி
(917)


அன்புடன்

அனுபிரேம்.....






14 comments:

  1. அழகிய படங்கள். சுக தரிசனம்.

    ReplyDelete
  2. அரங்கனின் சீர்வரிசை..

    அழகு.. அருமை..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. படங்கள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
  4. படங்கள் அழகு! அது சரி காவிரியில் நீர் இல்லை என்றார்களே! இந்தப் படத்தில் நீர் இருக்கிறதே!...

    ReplyDelete
    Replies
    1. ஆடி 18 ன் போது காவிரியில் நீர் இல்லக்கா...
      ஆன ஆடி அசைந்து ஒரு வழியாக நேற்று தான் காவிரியின் அம்மா மண்டபத்திற்கு நீர் வந்ததாம்...


      Delete
  5. படங்களின் தொகுப்பு அருமை.

    ReplyDelete
  6. ஆடி 28 இற்கு, திருச்சிக்கு ஆடி ஆடி வந்த காவேரியை அழகாக படம் பிடித்து விட்டீர்கள். பாராட்டுகள். கூடவே நம்பெருமாள் தரிசனம். ( ஸ்ரீரங்கத்தில் குடியிருக்கும், மூத்த வலைப்பதிவர் கீதா சாம்பசிவம் அவர்களும், நீங்களும் என்றேனும் ஒருநாள் நேரில் சந்தித்தது உண்டா? அவரும் நம்பெருமாள் தரிசனம் பற்றி எழுதி இருக்கிறார் )

    ReplyDelete
    Replies
    1. வலைப்பதிவர் கீதா சாம்பசிவம் அம்மா அவர்களின் தளத்தையும்....எழுத்துகளையும் அறிவேன்...தொடர் வாசிப்பாளர் அங்கு...ஆனால் நேரில் சந்திக்கும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை...


      தங்களின் விரிவான கருத்துக்கு மிகவும் நன்றி ஐயா...

      Delete
  7. to mitigate drinking water shortage water was let out from mettur dam few days back.luckily it arrived trichy at approprite time for thayar.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றிகள் பல...

      Delete
  8. போட்டோக்கள் சூப்பர் என்பது வழக்கமான கமெண்ட் அல்ல , நான் திருச்சியில் 11 வருடங்கள் படித்ததால் பழைய திருச்சியை நினைவுக்குக் கொண்டு வந்தது

    ReplyDelete
    Replies
    1. வாங்க அருணா அக்கா...

      உங்களுக்கு திருச்சியை தெரியும் என நானும் அறிவேன்...ஒரு பதிவில் ..அம்மாவின் தையல் கலையில் என்னும் பதிவில் நீங்க ஹோலி கிராஸ் பத்தி சொல்லி இருந்தீங்க..

      சரியா...

      அங்கு அப்பொழுது பதில் இடஇயலவில்லை...


      வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல..

      Delete
  9. அழகான படங்கள். காவிரி ஆற்றில் சற்றேனும் நீர் இருப்பதைக் கண்டு மனதில் மகிழ்ச்சி.

    ReplyDelete