பொன்னாங்கண்ணி கீரை......
சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.
இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை.
பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.
மேனியை பளபளக்கச் செய்யும்.
நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுவது பொன்னாங்கண்ணி கீரை....
பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் ....
இது பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது....
பொன்னாங்கண்ணி தூக்கத்தை தூண்டக் கூடியது.
மத்திய நரம்பு மண்டலத்தை சீர்செய்து சாந்தப்படுத்தக் கூடியது.
இதனால் பல்வேறு நரம்பு நோய்கள் குணமாகிறது.
ஞாபக சக்தியை தூண்டக் கூடியது.
கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது.
தலைவலி, மயக்கத்தை தணிக்கக்கூடியது.
பொன்னாங்கண்ணி சாறு பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.
பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டுவதாலும் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவுவதாலும் தலைமுடி நன்கு செழுமையாக வளரும்.
பொன்னாங்கண்ணி கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் கொனேரியா எனும் பால்வினை நோய் குணமாகும்.
ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஓர் துணை மருந்து ஆகிறது.
குடலிறக்க நோய் ஆன ஹெர்னியா தணிவதற்குத் துணையானது. பொன்னாங்கண்ணி நெஞ்சு சளியைக் கரைக்க வல்லது. மார்பு இறுக்கத்தைப் போக்கும்.
ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறுகளையும் அகற்ற வல்லது. பொன்னாங்கண்ணி நுண்கிருமிகளை அழிக்க வல்லது. பொன்னாங்கண்ணி புண்களை ஆற்றக் கூடியது.
பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
(தகவல்கள் இணையத்திலிருந்து)
இத்தகைய அருமையான பொன்னாங்கண்ணி கீரை..
எங்க வீட்டு தொட்டியிலும் காம்பை கிள்ளி நட்டதால் செழிப்பாக வளர்ந்தது....
பின் ஒருநாள் பாசிபருப்பு போட்டு கூட்டு வைத்தேன்....
(வழக்கம் போல் தான்...😎😁😊😊)
நன்றாக இருந்தது....
ஆனால் இங்கு கிடைக்காது.... ஏரிக்கரையில் நன்றாக வளர்ந்து
கண்ணுக்கு குளிர்ச்சியாய்
செழுமையாக இருக்கும்....
அன்புடன்
அனுபிரேம்
எங்க வீட்டில் பொன்னாங்கன்னி கீரை வேற ரகமிருக்கு. நாளைக்கு செய்வேனே
ReplyDeleteமருத்துவ குணம் மிகுந்த பொன்னாங்கண்ணியைப் பற்றிய பதிவு அருமை..
ReplyDeleteபொன்னாங்கன்னி கீரை வகைகள் இருக்கு எங்கள் ஊரில் இந்த வெரைட்டி நிறையவே இருக்கும். பாண்டிச்சேரியில் நிறைய கிடைக்கும் வகை வகையாக....இங்கு சென்னையிலும் குறிப்பிட்ட இடங்களில் கிடைக்கிறது...ஆம் அனு மருத்துவ குணங்கள் அதிகமே...
ReplyDeleteஅது சரி கரிசலங்கன்னிதானே எண்ணையில் காய்ச்சி தலைக்குத் தடவிக் கொள்வது. பொன்னாங்கன்னியுமா?
கீதா
வாங்க கீதாக்கா...
Deleteபொன்னாங்கண்ணியும் எண்ணெயில் காய்ச்சி தடவினால் சிறப்பு என்றே கூறுகின்றனர்...
இவை எல்லாம் தங்கள் ஆய்வின் முடிவா? இல்லை படித்ததை, கேள்விப்பட்டதை வரிசைப்படுத்தி இருக்கிறீர்களா?
ReplyDeleteதனியாக ஆய்வு செய்து வரிசைபடுத்தும் அளவிற்கு திறன் இல்லை ஐயா...
Deleteஅதனால் படித்ததை பகிர்ந்தேன்....
அருமை
ReplyDeleteநன்றி சகோதரியாரே
இங்கே கிடைப்பதில்லை. நெய்வேலியில் இருந்தவரை நிறைய சாப்பிட்டு இருக்கிறேன்.
ReplyDeleteஉபயோகமான குறிப்புகள். பொன்னாங்கண்ணி கீரை இதுவரை இரண்டு முறை சமைத்திருப்போம். ஒருமுறை மோர்க்கீரை. இன்னொருமுறை வதக்கல்!
ReplyDeleteபொன்னாங்கண்ணி மாயவரத்தில் மிக சிறியதாக கிடைக்கும். அதனால் செய்ய சோம்பல்,
ReplyDeleteநானே தொட்டியில் வைத்து வளர்த்த போது,நிறைய தடவை செய்து இருக்கிறேன்.
இங்கு வந்த பின் இன்னும் வாங்கவில்லை.
பயனுள்ள பதிவு.
இதெல்லாம் ஊரில் சாப்பிட்டதோடு சரி. இங்கு நினைத்து பார்க்கமுடியாது. பச்சை கீரை கிடைக்கும் நானும் பருப்பு கூட்டு,பொரியல் என வைப்பேன். ம். இம்முறையும் சாப்பிடக்கொடுத்து வைக்கல. தகவல்கள் அருமை. அனு.
ReplyDeleteமேலே போட்டிருக்கும் படம் அழகா இருக்கு..
ReplyDelete