30 October 2015

தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 1 - விநாயகர்

அனைவருக்கும் அழகான காலை வணக்கங்கள் ....

இந்த தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 13 வருடங்களுக்கு முன் நான் முதன் முதலாக வகுப்புக்கு சென்று கற்ற போது வரைந்தது  ....

எங்க பிள்ளையார் எப்படி இருக்கிறார் ....



 



அன்புடன் 
அனுபிரேம் 

Image result for tamil quotes images

27 October 2015

கோதுமை ராகி புட்டு


கோதுமை ராகி புட்டு





தேவையானவை 


கோதுமை  மாவு  -1 க

ராகி மாவு               - 1க

வெல்லம்               -  1/2 க 

ஏலக்காய்                -1

தேங்காய்  துருவியது  - 1/2 க 




செய்முறை 

கோதுமை மாவு மற்றும் ராகி மாவை  நன்றாக வறுத்து ....பின் அதனுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்  .... நன்றாக உதிரியாக இருக்க வேண்டும்  ....


பின்  வெல்லத்தை பொடிக்க  வேண்டும் .... மாவுடன்   ஏலக்காய் பொடி சேர்த்து .. 

புட்டு குழாயில் வெல்லம்  மற்றும் தேங்காயை  அடுக்காக  வைத்து   வேக வைக்க   ......மிருதுவான  புட்டு தயார் ...




அன்புடன் 
அனுபிரேம் 

Image result for tamil quotes images

25 October 2015

பெருமாள் மலை ,துறையூர் - 2

தென் திருப்பதி  பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் 
பெருமாள் மலை ,துறையூர் .....

இக்கோவில்  சோழ மன்னன் கரிகாலனின்  பெரும் மகன்களில் ஒருவரால் கட்டப்பட்டது. ராஜா தன் குரு ஆலோசனை படி, மோட்சத்தை அடைய இங்கே தியானம் செய்ய .... திருமணம் கோலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் தரிசனம் கிடைத்ததாம் .





மலையில் இருந்து 

மலையின்  கீழே பஞ்ச முக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது .....


அங்கே தசாவதாரமும் சிலை வடிவில் எழுப்ப பட்டு  உள்ளது ..







பஞ்சமுக ஆஞ்சநேயர் 




அன்புடன் 
அனுபிரேம் 


17 October 2015

பெருமாள் மலை ,துறையூர்

தென்  திருப்பதி -பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் 


பெருமாள் மலை ,துறையூர் 




மூலவர் -  கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

ஸ்ரீதேவி  பூதேவி சமேதே பிரசன்ன வெங்கடாசலபதி திருமண கோலத்தில் சேவை சாதிக்கிறார் .



கருடழ்வார் 


இத்திருக்கோவில் துறையூர் லிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது.  இந்த இடம்  திருப்பதியை போன்று  பல ஒற்றுமைகளுடன்  இருப்பதால் 'தென்  திருப்பதி' என அழைக்கப்படுகிறது .இங்கும் பெருமாளை காண   ஏழு குன்றுகளை  கடக்கவேண்டும் ...




மலை பாதை 

 பூமியில் இருந்து 960 அடி உயரத்தில் இம்மலை உள்ளது.  1532 படிகளையும் ஏழு  குன்றுகளையும் தாண்டிச் சென்று இத்தலத்தை அடையலாம் ..... அடிவாரத்தில்  சுமார் 5 கி.மீ., மலை  பாதை வசதியும்  உள்ளது. 


மலையில் இருந்து 







தொடரும் ....


அன்புடன் 
அனுபிரேம்