15 July 2024

பெரியாழ்வார் திருநட்சத்திரம்

  இன்று  ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)







ஆழ்வார்  வாழி திருநாமம்!

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே

நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே

சொல்லரிய ஆனிதனில்  சோதி வந்தான் வாழியே

தொடை சூடிக்கொடுத்தவள் தன் தொழும் தம் அப்பன் வாழியே

செல்வ நம்பிதனைப் போலச்   சிறப்புற்றான் வாழியே

சென்று கிழியறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே

வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே

வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே


பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.


பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்

தந்தை           : முகுந்தர்

தாய்              : பதுமவல்லி

பிறந்த நாள்  : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்

நட்சத்திரம்    : சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)

கிழமை           : திங்கள்

எழுதிய நூல்   : பெரியாழ்வார் திருமொழி

பாடிய பாடல் : 473

சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்

பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும் ஆழ்வார்களின் அருளிச்செயல் வரிசையில் முதல் ஆயிரத்தில் முதன்மையாக வைக்கப்பட்டுள்ளன.

இதில் பெரியாழ்வார் திருமொழியில் ஆழ்வார் யசோதை பாவனையில் ஸ்ரீ கண்ணபிரானின் குழந்தைப் பருவ வைபவங்களைப் பாடிய பாசுரங்கள் தனித்துவமாக விளங்குகின்றன.

இவை தமிழ் இலக்கியத்தில் "பிள்ளைத் தமிழ்" என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தவை.

தமிழ் இலக்கியத்தில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் உள்ளன.

அவற்றுக்கு எல்லாம் ஆதி பிள்ளைத்தமிழ் காவியமாகவும், சிகரம் வைத்தாற் போலப் பிரகாசிப்பதும்  பெரியாழ்வார் பாடிய கண்ணன் பிள்ளைத்தமிழ் ஆகும்.


முந்தைய  பதிவுகள் ...











பெரியாழ்வார் திருமொழி
முதற் பத்து 

1 -8. எட்டாம்  திருமொழி - பொன்னியல் 

அச்சோப் பருவம்


97 பொன் இயல் கிண்கிணி சுட்டி புறங் கட்டித்* தன் இயல் ஓசை* சலன்-சலன் என்றிட* மின் இயல் மேகம்* விரைந்து எதிர் வந்தாற்போல்* என் இடைக்கு ஓட்டரா அச்சோ* அச்சோ எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ (2) 98 செங்கமலப் பூவிற்* தேன் உண்ணும் வண்டே போல்* பங்கிகள் வந்து* உன் பவளவாய் மொய்ப்ப* சங்கு வில் வாள் தண்டு* சக்கரம் ஏந்திய* அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ* ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ 2

99 பஞ்சவர் தூதனாய்ப்* பாரதம் கைசெய்து* நஞ்சு உமிழ் நாகம்* கிடந்த நற் பொய்கை புக்கு* அஞ்சப் பணத்தின்மேல்* பாய்ந்திட்டு அருள்செய்த* அஞ்சனவண்ணனே! அச்சோ அச்சோ* ஆயர் பெருமானே! அச்சோ அச்சோ 3

100 நாறிய சாந்தம்* நமக்கு இறை நல்கு என்ன* தேறி அவளும்* திருவுடம்பிற் பூச* ஊறிய கூனினை* உள்ளே ஒடுங்க* அன்று_ ஏற உருவினாய்! அச்சோ அச்சோ* எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ 4

101 கழல் மன்னர் சூழக்* கதிர் போல் விளங்கி* எழலுற்று மீண்டே* இருந்து உன்னை நோக்கும்* சுழலை பெரிது உடைத்* துச்சோதனனை* அழல விழித்தானே! அச்சோ அச்சோ* ஆழியங்கையனே! அச்சோ அச்சோ 5








102

போர் ஒக்கப் பண்ணி*   இப்பூமிப் பொறை தீர்ப்பான்* 
தேர் ஒக்க ஊர்ந்தாய்!*  செழுந்தார் விசயற்காய்* 
கார் ஒக்கு மேனிக்*  கரும் பெருங் கண்ணனே!* 
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ* 
 ஆயர்கள் போரேறே!  அச்சோ அச்சோ  6




103

மிக்க பெரும் புகழ்*  மாவலி வேள்வியில் *
தக்கது இது அன்று என்று*  தானம் விலக்கிய* 
சுக்கிரன் கண்ணைத்*  துரும்பாற் கிளறிய* 
சக்கரக் கையனே!  அச்சோ அச்சோ*
 சங்கம் இடத்தானே!  அச்சோ அச்சோ  7




104

என் இது மாயம்?*  என் அப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே*  கொண்டு அளவாய் என்ன*
மன்னு நமுசியை*  வானிற் சுழற்றிய* 
மின்னு முடியனே!  அச்சோ அச்சோ* 
 வேங்கடவாணனே! அச்சோ அச்சோ  8



105

கண்ட கடலும்*  மலையும் உலகு ஏழும்*  
முண்டத்துக்கு ஆற்றா*  முகில்வண்ணா ஓ!  என்று* 
இண்டைச் சடைமுடி*  ஈசன் இரக்கொள்ள*  
மண்டை நிறைத்தானே!  அச்சோ அச்சோ*
 மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ  9



106

துன்னிய பேரிருள்*  சூழ்ந்து உலகை மூட* 
மன்னிய நான்மறை*  முற்றும் மறைந்திடப்*  
பின் இவ் உலகினில்*  பேரிருள் நீங்க*  அன்று- 
அன்னமது ஆனானே!  அச்சோ அச்சோ* 
 அருமறை தந்தானே!  அச்சோ அச்சோ     10 



107

நச்சுவார் முன் நிற்கும்*  நாராயணன் தன்னை*
அச்சோ வருக என்று*  ஆய்ச்சி உரைத்தன* 
மச்சு அணி மாடப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
நிச்சலும் பாடுவார்*  நீள் விசும்பு ஆள்வரே  (2)









ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை


இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே!
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள்

16


உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்

20










    ஓம் நமோ நாராயணாய நம!!
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!


அன்புடன் 
அனுபிரேம் 






1 comment:

  1. படங்களும் பாக்களும் சிறப்பு.

    ReplyDelete