22 May 2024

வைகாசி விசாகம் .... முருகா

 சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, 
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, 
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் 
அவதார நட்சத்திரம்  வைகாசி விசாகம்.


நாள் என் செயும், வினைதான் என் செயும், எனை நாடி வந்த

கோள் என் செயும், கொடும் கூற்றென் செயும், குமரேசர் இரு

தாளும் சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும்,

தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 38

#கந்தர்அலங்காரம்







 வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். 

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.

உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். 

மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். 

வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் "வைசாக' மாதம் என்றிருந்து பின்னாளில் "வைகாசி' என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை "வைகாசி விசாகம்' என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

"வி' என்றால் "பட்சி' (மயில்), "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் "விசாகன்' என்றும் வழங்குவர். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம்.






 கற்றதன் பலன் கந்தன் கழலடிக்குத் தன்னை அர்ப்பணம் செய்வதே.


திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி.


 " யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்

தாமே பெற, வேலவர் தந்ததனால்

பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர், நடவீர் இனியே ".( பாடல் 17.)


யாம் ஓதிய கல்வியும் ... நாம் கற்று உணர்ந்த கல்வி அறிவும்,

எம் அறிவும் ... நமக்கு இயற்கையாகவே அமைந்த உண்மை அறிவும்,

தாமே பெற ... தாமே திரும்பப் பெற வேண்டி,

வேலவர் தந்ததினால் ... வேலாயுதக் கடவுள் நமக்குக்

கொடுத்ததினால்,

பூ மேல் ... இப் பூமியில்,

மயல் போய் ... நீங்கள் மயக்கங்களை விட்டு,

அற மெய்ப் புணர்வீர் ... தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்து

வாழும் உத்தம சீலர்களே,

இனி நா மேல் நடவீர் நடவீர் ... நம்மை அவனுக்கு அர்ப்பணித்து

அவனுடைய புகழைச் சொல்லிச் சொல்லிப் பாடுங்கள்.


நாம் கற்ற கல்வியும், நம்மிடம் இயல்பாகவே அமைந்த மெய்ஞானமும்

தாமே திரும்பப் பெற முருகப் பெருமான் கொடுத்து அருள் செய்ததால்

அதற்குக் கைமாறாக அவனுக்கு நமது புலமையை அர்ப்பணம்

செய்யவேண்டும்.








முருகா சரணம்...

கந்தா சரணம்.....

வடிவேலா சரணம்.....




அன்புடன்
அனுபிரேம்  💚💛💚.....


No comments:

Post a Comment