ஆழ்வார் வாழி திருநாமம்!
நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே
செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே
சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே
பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : முகுந்தர்
தாய் : பதுமவல்லி
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்
நட்சத்திரம் : சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)
கிழமை : திங்கள்
எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
பாடிய பாடல் : 473
சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்
பெரியாழ்வார் திருமொழி
முதற்பத்து
எட்டாம் திருமொழி -- பொன்னியல்
அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்
பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி *
தன்னியலோசை சலன்சலனென்றிட *
மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல் *
என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ எம்பெருமான்! வாராஅச்சோவச்சோ. (2)
1 97
செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல் *
பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப *
சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய *
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ.
2 98
பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து *
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு *
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த *
அஞ்சனவண்ணனே! அச்சோவச்சோ ஆயர்பெருமானே! அச்சோவச்சோ.
3 99
நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன *
தேறிஅவளும் திருவுடம்பில்பூச *
ஊறியகூனினை உள்ளேயொடுங்க * அன்று
ஏறவுருவினாய்! அச்சோவச்சோ எம்பெருமான்! வாராஅச்சோவச்சோ.
4 100
கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி *
எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும் *
சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை *
அழலவிழித்தானே! அச்சோவச்சோ ஆழியங்கையனே! அச்சோவச்சோ.
5 101
போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான் *
தேரொக்கவூர்ந்தாய்! செழுந்தார்விசயற்காய் *
காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே! *
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ ஆயர்கள்போரேறே! அச்சோவச்சோ.
6 102
மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில் *
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய *
சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய *
சக்கரக்கையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ.
7 103
என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன் *
முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன *
மன்னுநமுசியை வானில்சுழற்றிய *
மின்னுமுடியனே! அச்சோவச்சோ வேங்கடவாணனே! அச்சோவச்சோ.
8 104
கண்டகடலும் மலையும்உலகேழும் *
முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ! என்று *
இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள *
மண்டைநிறைத்தானே! அச்சோவச்சோ மார்வில்மறுவனே! அச்சோவச்சோ.
9 105
துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட *
மன்னியநான்மறை முற்றும்மறைந்திட *
பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க * அன்று
அன்னமதானானே! அச்சோவச்சோ அருமறைதந்தானே! அச்சோவச்சோ.
10 106
நச்சுவார்முன்னிற்கும் நாராயணன் தன்னை *
அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன *
மச்சணிமாடப் புதுவைக்கோன்பட்டன்சொல் *
நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. (2)
11 107
ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை
இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே!
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள்
16
உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்
20
ஓம் நமோ நாராயணாய நம!!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!
அன்புடன்
அனுபிரேம்
படங்கள் அழகு, இடுகை அருமை. நினைவாக வெளியிட்டதற்குப் பாராட்டுகள்
ReplyDeleteநன்றி சார் ...
Deleteபெரியாழ்வர் மொத்தம் 461 பாசுரங்கள் பாடியிருக்கிறாரே. உங்க இடுகைல நானூற்று இருபத்து ஒன்று என்று வரும்படி இருக்கே. கொஞ்சம் சரிபாருங்களேன்.
ReplyDelete//நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றுப் பத்தொன்றும் நமக்குரைத்தோன் வாழியே// - இது விக்கிபீடியாவின் ஒரு இடுகை. (https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/67)
//நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே// - இது இன்னொரு பக்கம் சொல்வது (https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)
//நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற் றறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லறிய வானிதனிற் சோதிவந்தான் வாழியே// - இது இன்னொரு பக்கம். (https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)
முன்பு இருந்த வரிகள் ...
Deleteநானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே...
https://guruparamparaitamil.wordpress.com/vazhi-thirunamams/ இந்த தளத்தில் கண்டே வாழி திருநாமங்கள் பதிவிடுவேன் ...
உங்கள் கருத்துக் கண்டும் எனது தவறு புரியவில்லை ...இப்பொழுது அப்பா கண்டு எங்கு தவறு என்று தகவல்கள் அனுப்பினார் ...
தற்பொழுது மாற்றிய வரிகள் ...
நானூற்றறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே..
மாற்றிவிட்டேன் ...
தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றிகள் சார்
நானூற்றுப் பத்தொன்றும் = 411, நானூற்றிரு பத்தொன்றும் - 421, நானூற்றறுபத்து ஒன்றும் - 461. இதில் சில தளங்களில் தட்டச்சுத் தவறு நேர்ந்திருக்கலாம். ஆனால் சிறிய தவறு, அர்த்த்தையே மாற்றிவிடுகிறதல்லவா? அதனால்தான் குறிப்பிட நேர்ந்தது. (வரிகள்ல தவறு இருக்கா என்று நான் எப்போதும் முடிந்த வரை பார்ப்பேன். அதில் ஒரு லாபம் இருக்கு. நமக்கும் அர்த்தம் விளங்கி ஒரு தடவை படித்ததுபோல ஆகும். அப்படி ஏதேனும் தவறு கண்ணில் பட்டால் அதை க்ளேரிஃபை செய்து எழுதிடலாம். இந்த மாதிரி பின்னூட்டங்கள் எழுதுபவருக்கு உற்சாகம் ஊட்டக்கூடியவை என்றே நான் நம்புவேன்)
Deleteஉங்கள் அப்பா கண்டுபிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
ஆம் ...ஒரே எழுத்தில் பொருளே தவறாகி விட்டது ....
Deleteஅப்பா அவரிடம் உள்ள புத்தகத்திலிருந்து படம் எடுத்து அனுப்பியும் எனக்கு பிரிக்க தெரியவில்லை ...அப்புறம் அதில் எனது விடுபட்ட எழுத்தை காணவும் தான் புரிந்தது ..
பிறகு பல முறை இவற்றை சொல்லியும் பார்த்தேன் ...
நிச்சயமாக இத்தைகைய பின்னூட்டங்கள் இன்னும் சரியாக அறிந்துக் கொள்ளும் எண்ணத்தையும் , முயற்சியையும் அதிகப்படுத்தும் ..
உண்மையில் இப்பொழுது மனதிற்க்கு மகிழ்ச்சியாகவும் , உற்சாகமாகவும் உள்ளது ...
நன்றி சார்
சில புத்தகங்களில் பெரியாழ்வார் பாடியவை 473 பாசுரங்கள் என்றும் போட்டிருக்காங்க. நீங்களும் summaryல 473 என்றுதான் போட்டிருக்கீங்க.
ReplyDeleteதிவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை திருப்பல்லாண்டு (12 பாசுரங்கள்),
Delete13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்)..
சரி தானே ..
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியைத் தோள் மீது வளர்த்து -
ReplyDeleteமாதவன் மதுசூதனனுக்கே மாமனார் ஆகிய பெருமையைப் பெற்றவர்..
பெரியாழ்வார் திருவடிகள் போற்றி..
நன்றி அண்ணா ...
Deleteபெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!
ரங்கனுக்கு மாமனார்..
ReplyDeleteபெரியாழ்வாரும், ஆண்டாளும் வேறு வேறில்லைன்னு சொல்வாரும் உண்டு...
படங்கள் அருமை
நன்றி ராஜி அக்கா ..
Deleteபெரியாழ்வார் திருவடிகள் வாழியவே!
ReplyDeleteஓம் நமோ நாராயணாய நம !!
படங்கள் அழகு.
ReplyDeleteகருடனின் அம்சமான பெரியாழ்வார் - நன்று.
Deleteநன்றி வெங்கட் சார் ...