ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் திருவிழா
3ம் நாள் - அழகர் மலையில் இருந்து புறப்பாடு....
கள்ளர் திருக்கோலமாய் கண்டாங்கி பட்டு உடுத்தி, அழகர் மலையிலிருந்து சுவாமி கள்ளழகர் ,
கள்ளர் கொண்டை,
கொண்டையில் குத்தீட்டி,
கையில் வலைதடி (பூமராங்) ,
இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் ......
அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வரும் கள்ளழகர் வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்குவார் .
திருக்கோவிலில் நடைபெற்ற இந்த வருட விழா காட்சிகள் ...
திருவாய்மொழி
மூன்றாம் பத்து
ஒன்றாம் திருவாய்மொழி – முடிச்சோதி
திருமாலிருஞ்சோலை அழகரது எழிலை அநுபவித்தல்
2899
பரஞ்சோதிநீபரமாய் நின்னிகழ்ந்துபின் * மற்றோர்
பரஞ்சோதியின்மையின் படியோவிநிகழ்கின்ற *
பரஞ்சோதிநின்னுள்ளே படருலகம்படைத்த * எம்
பரஞ்சோதி! கோவிந்தா! பண்புரைக்கமாட்டேனே. 3
2900
மாட்டாதேயாகிலும் இம்மலர்தலைமாஞாலம் * நின்
மாட்டாயமலர்புரையும் திருவுருவும்மனம்வைக்க *
மாட்டாதபலசமய மதிகொடுத்தாய் * மலர்த்துழாய்
மாட்டேநீமனம் வைத்தாய் மாஞாலம்வருந்தாதே. 4
மதுரை சித்திரைத் திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம்
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம்
அழகான படங்கள்.
ReplyDelete