வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள் ...
1.குடகு மலை காற்றில்
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி நிசர்காதமா
7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா
8.செல்லும் வழியில்
9.தலைக்காவேரியிலிருந்து ...
10.பிரம்மகிரி மலைத் தொடர் ...
11.பாகமண்டலேஸ்வரா கோவில்
பெரியவர் |
சின்னவர் |
இன்னும் பக்கத்தில் பல கொட்டகைகள் இருந்தன , அங்கும் சில யானைகளை காணலாம் ...
ரொம்ப வித்தியாசமான உணர்வு ....
ஆனால் ஆரம்பத்தில் கொடுத்த உணவுகளை ஆசையாய் வாங்கிய யானைகள் ,அப்புறம் விருப்பம் காட்டவே இல்ல...வாங்கி வாங்கி தன் தும்பிக்கையில் வைத்துக் கொண்டது .... பாகன் சொல்லவும் வாயில் வைக்கும் ... ஒரே உணவு அதற்கு விருப்பம் இல்லை போல ...
அப்பொழுது தான் நாங்கள் டாப்ஸ்லிப் சென்ற போது இதே போன்று யானைக்கு உணவு தரும் நேரத்தில் , அங்கிருந்த பாதுகாவலர் சொன்ன தகவல்கள் நியாபகம் வந்தது ......இத்தனைக்கும் அவர்கள் அங்கு நிறையவே அடுக்கி வைத்து இருந்தனர் ... இது எல்லாம் அதற்கு உணவே இல்லை, காட்டிற்கு சென்று தானே எடுத்து உண்டால் தான் அதற்கு வயறு நிறையும் , அதே போல அதற்கு பல கிலோ உணவு தேவை அதை முழுதும் நம்மால் தரவும் இயலாது என கூறினார் ....
அப்பொழுது தான் இத்தனை சிறிய நெற்கதிர்கள் ஏதோ நம்மை மகிழ்விக்க அவர்கள் செய்யும் ஒரு காரியம் என புரிந்தது ...
அங்கயே அமர்ந்து அனைத்தையும் ரசித்தோம் ...
இந்த இடத்தின் உள்ளே கடைகள் ஏதும் கிடையாது .. நம்மிடம் உள்ள சிறு தீனிகளையே உண்டு பசியாற்ற வேண்டும் ....சரி செல்லலாம் என மீண்டும் படகுக்கான வரிசையில் நின்று அக்கரை சேர்த்தோம் ...
காவேரி ..... |
துபாரேவில் இருந்து கிளம்பி செல்லும் வழியில் மதிய உணவை உண்டு ,எங்கள் கூர்க் பயணத்தை முடித்தோம் ....
எங்களுக்கு இன்னும் அரை நாள் இருந்ததால் , எங்கள் வண்டி ஓட்டுனர் கொடுத்த ஐடியா படி அடுத்து ஒரு இடம் சென்றோம் ....
அடுத்து சென்றதும் அனைவருக்கும் மிக பிடித்த இடம் தான் ...அது எங்கே .... அடுத்த பதிவில் பார்ப்போம் ....
தொடரும் ...
அன்புடன்,
அனுபிரேம்
அனுபிரேம்
யானையார்களின் காட்சிகள் கண்களுக்கு விருந்து.
ReplyDeleteநன்றி மா ..
Deleteமனதைக் கவரும் படங்கள்..
ReplyDeleteயானையைப் பார்ப்பதுவே மகிழ்ச்சி..
யானைகள் என்றால் கொள்ளை மகிழ்ச்சி...
யானையைப் பராமரிப்பவர்களுக்கு இது ஒரு வருமானம் வரும் வழி. அவ்ளோதான்.
Deleteஇன்னொன்று, எல்லாரும் புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு, கோவில் யானைகளுக்கெல்லாம் பழம், வெள்ளரி என்று நிறைய வாங்கிக்கொடுப்பார்கள். இங்குமே எவ்வளவுதான் வைக்கோல் யானை சாப்பிடும்.
அதுக்கும் ஒருவேளை மனசில் இட்லி மிளகாய்ப்பொடி சாப்பிட ஆசை இருக்குமோ?
அப்படி ஒரு ஆசை யானைக்கு இருக்குமோ ...
Deleteவைக்கோலின் நடுவே கொஞ்சம் நெல்மணிகள்..
ReplyDeleteஇதற்கு 20 ரூபாய்..
அநியாயம் என்று தோன்றுகிறது...
அத்தனை நேரம் பயணம் செய்து அங்கு போவதால் இந்த பணம் அதிக படியாக தோன்றவில்லை அண்ணா ....பரவாயில்லை அவர்களுக்கு உபயோகமாக இருக்கட்டும் என்னும் எண்ணமே வந்தது
Deleteயானைப் படங்கள் - மனதை மிகவும் கவர்கின்றன. உங்கள் அனைவரின் படங்களையும் பார்த்தாச்சு.
ReplyDeleteஅங்கே யானைச்சவாரி இருந்ததா?
ஓ கண்டுபிடித்துவிட்டீர்களா ..மகிழ்ச்சி ..
Deleteஇங்கு யானை சவாரி இல்லை ...
யானைக்கு உணவு - பாவம் அவை - இயற்கையாக காட்டில் விளைபவற்றை தின்னும் அவற்றுக்கு இத்தனூண்டு உணவு. அவற்றை அவற்றின் சூழலில் இருக்க விடுவதே நல்லது.
ReplyDeleteஆனாலும் இங்கே யானைகளைப் பார்த்து ரசிக்க முடிகிறது.
யானைகளை காண்பதில் மகிழ்ச்சி இருந்தாலும் ...சற்று அதிகமாக யோசிக்கும் போது அவற்றை நாம் கஷ்டப்படுத்துகிறோம் என்னும் எண்ணம் எழுவதை தவிர்க்க இயலாது வெங்கட் சார் ..
Deleteயானைகள் எவ்வளவுதான் காய்ந்த புல்லை தின்னும்? அதற்கும் அலுத்துவிட்டது.
ReplyDeleteகரும்பு, வாழைப்பழம், அரிசி, வெல்லம் என்று கொடுத்தால் சாப்பிடும்.
சாதன் உருண்டைகள் கொடுத்தால் மறுக்காமல் வாயை திறக்கும்.
படங்கள் அழகு.
அரிசி , சாதம் ,வெல்லம் போன்றவை எல்லாம் அவைகளுக்கு தனியே தருவார்கள் போல மா ...
Deleteகாணொளி, பாரதியார் கவிதை எல்லாம் சிறப்பு.
ReplyDeleteஇத்தனை யானைகளை ஒரு இடத்தில் பார்ப்பதே ஆனந்தம்.
ReplyDeleteஆம் ஸ்ரீராம் சார் ...
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteயானைகளின் படங்கள் மிகவும் அழகு. அதன் உணவு அதற்கு பிடித்தமானதாக இருந்தால் அது ரசித்து நிறையவே சாப்பிடும். அங்கு அதுபோல் கிடைக்க வசதி செய்தாலும், சில நெற்கதிர்கள் இணைந்த வைக்கோல் சுருளின் விலையே அதிகந்தான். யானையும் பாவம்..!ஒரே மாதிரியான அந்த உணவை பாகனுக்காக எத்தனை நாள் சாப்பிடுமோ? ஆனால் படங்கள் அருமை. தங்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்களை கண்டு ரசித்தமைக்கு நன்றிகள் கமலா அக்கா ..
Deleteபாவம் அவைகளுக்கு தனியே வேறு உணவுகள் தருவார்கள் போல ...இது சும்மா நம்மை மகிழ்விக்க ...
யானைகள் அழகு. உங்கள் பயணப் படங்கள் அழகாக இருக்கின்றன.
ReplyDeleteதுளசிதரன்
அனு படங்கள் அட்டகாசம் இத்தனை யானைகள் பார்க்க அழகு!! ஆனால் பாருங்க என் மனசு ஏனோ கஷ்ட்ப்படுது, உணவு கொஞ்சம்...அதுங்க காட்டுல அதனதன் விருப்பப்படி சுதந்திரமா வாழும் இல்லையா. அப்படி இருந்தாலே நல்லதுனு தோணும் எனக்கு..
உங்களுக்கு நல்ல அனுபவம் ! குழந்தைகள் ரொம்பவே எஞ்சாய் செஞ்சுருப்பாங்க
கீதா
யானைகளை காண்பதில் மகிழ்ச்சி இருந்தாலும் ...
Deleteசற்று அதிகமாக யோசிக்கும் போது அவைற்றை நாம் கஷ்டப்படுத்துகிறோம் என்னும் எண்ணம் எழுவதை தவிர்க்க இயலாது கீதா அக்கா ...