வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள் ...
1.குடகு மலை காற்றில்
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி நிசர்காதமா
7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா
8.செல்லும் வழியில்
9.தலைக்காவேரியிலிருந்து ...
10.பிரம்மகிரி மலைத் தொடர் ...
11.பாகமண்டலேஸ்வரா கோவில்
திரிவேணி சங்கமம் கண்டு தரிசித்த பின் , மடிகேரிக்கு வந்து கொஞ்சம் ஷாப்பிங் என்று நேரம் சென்றது .
பின் அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் ராஜா சீட் .
மடிகேரி பஸ் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ராஜா சீட் புகழ்பெற்ற காட்சிக் கோணம் (வியூ பாய்ண்ட்) ஆகும்.
இவ்விடம் அழகிய பூங்காவாக பராமரிக்கப்படுகிறது .
ராஜா சீட் என்றால் குடகு அரசர்களின் ஓய்வெடுக்கும் இடம் என்று பொருள்.
இப்பூங்காவின் நடுவில் ஒரு அழகிய விதானம் நான்கு தூண்களையும், அழகான கூரை மற்றும் அலங்கார வளைவுகளையும் கொண்டு இருக்கிறது.
இங்கு அரசர்கள் தங்கள் இராணிகளுடன் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து மகிழ்வார்களாம்.
இவ்விடத்தின் சிறப்பு அழகிய காட்சி கோணம் ஆகும் , பகலில் சென்று இருந்தால் நாங்களும் கண்டு ரசித்து இருக்கலாம் .
நாங்கள் செல்லும் போது மாலை நேரம் , இருட்ட தொடங்கி விட்டதால் எங்களால் அக்காட்சிகளை காண முடியவில்லை.
மேலும் அந்த நேரத்தில் அங்கு மிக அதிக கூட்டம் ...,
உள்ளே செல்லவும் , நுழைவு கட்டணம் வாங்கும் இடத்திலையும் அதிக கூட்டம் காரணமாக நாங்கள் செல்லும் போதே நன்றாக இருட்டி விட்டது . ஆனாலும் அங்கிருந்த இடத்தில் அமைதியாக அமர்த்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம் .
அங்கு தண்ணீரில் ஒளி, ஒலி நிகழ்ச்சி நடைபெறும் என்பதும் எங்களுக்கு தெரியாது .... தீடீரென்று சத்தம் கேட்கவும் சென்று பார்த்தால் , மிக அழகிய நிகழ்ச்சி குழந்தைகள் முதல் பெரியவர் அனைவரும் மிக ரசித்து பார்த்தோம் .
மிக சிறு வயதில் இது போல பார்த்தது , வெகு நாள்கள் பிறகு இப்படி water dance பார்க்கவும் மிகவும் குதூகலமாக இருந்தது ....அப்பொழுது காற்று வீசும் அதிகமாக இருக்க நீர் இங்கும் அங்கும் என அனைவரின் மேலும் துளிகளை சிதறி ஆடியது மிக அழகு .
அம்மகிழ்ச்சியில் எடுத்த காட்சிகளும் , காணொளியும் ...
எதிர் பாராமல் கிடைத்த இம்மகிழ்ச்சியுடன் நாங்கள் எங்கள் அறைகளுக்கு திரும்பினோம் ...
தொடரும் .....
அன்புடன்
அனுபிரேம்
Musical Fountain - ரொம்பவே அழகு. இங்கே தில்லியில் முகல் கார்டன் உள்ளேயும் உண்டு. பொதுவாக ஃபிப்ரவரி-மார்ச் மாதங்களில் மட்டுமே உள்ளே சென்று பார்க்க அனுமதி கிடைக்கும்.
ReplyDeleteதொடரட்டும் பயணம்.
நன்றி வெங்கட் சார் ....
Deleteசிறு வயதில் பிருந்தாவனத்தில் கண்டது ...மீண்டும் பார்க்கவும் அத்தனை ஆனந்தம் ..
படங்கள் அசத்தல் சில படங்கள் ஒரேபோல் இருக்கிறதே...
ReplyDeleteநன்றி சகோ ...
Deleteஎல்லா படமும் ஒன்று போல இருந்தாலும் அனைத்திலும் சின்ன சின்ன அசைவு மாற்றங்கள் இருக்கிறதே ...
அரசர்கள் ராணிகளுடன் அஸ்தமனம் பார்க்கும் வியூ அட...டா..அற்புதமான இடம்தான். வண்ண ஒலி ஒளி காட்சிகளும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி சகோதரி ...
Deleteபடங்கள் எல்லாம் அழகு. வாட்டர் டான்ஸ் படங்கள் காணொளி எல்லாம் அருமை.
ReplyDeleteஉங்களுக்கும் பிடித்ததில் மிக மகிழ்ச்சி மா ...
Deleteபடங்கள் எல்லாமே அழகு. வண்ண ஒலி ஒளி காட்சி அருமை. சிங்கப்பூரில் இந்த ஒலி,ஒளி நிகழ்ச்சி பார்த்திருக்கேன்.
ReplyDeleteஎங்கு கண்டாலும் மனதிற்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி அல்லவா ...நன்றி அம்மு
Delete