11 May 2020

தேங்காய் கோதுமை பிஸ்கட் ( குக்கீஸ் )

 தேங்காய் கோதுமை மாவு பிஸ்கட் ( குக்கீஸ்)








தேவையானவை


கோதுமை மாவு  - 1  1/2 கப்

வெல்லம் - 1/2 கப்

எண்ணெய்  - 1/2 கப்

dry  cocount   - 1/4 கப்

பேக்கிங் பவுடர்
  (baking powder) - 1/4 tsp



செய்முறை 



முதலில் சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லத்தை  பாகு காய்ச்ச வேண்டும் . பின் அதை வடிகட்டி  அதில்  கோதுமை மாவு, எண்ணெய் , தேங்காய் பூ மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும் ,

தேவையென்றால் சிறுது பாலும்  சேர்த்து பிசைந்துக் கொள்ளலாம். 










பின் அந்த மாவை இது போல குழியான  ஸ்பூன் ல் வைத்து அழுத்தி 
பேக்கிங் தட்டில் வைக்க வேண்டும் .







பின் இதை  preheat செய்த  otg / oven  ல்  180 temp ல்  25 நிமிஷசங்கள்  bake  செய்ய .. சுவையான குக்கீஸ் ரெடி 



இதில் வெண்ணெய் சேர்த்தும் செய்யலாம் , dry cocount க்கு பதில் துருவிய தேங்காய் சேர்த்தும் செய்யலாம். 

ஆனால்  எங்களுக்கு எண்ணெய் சேர்த்து செய்த குக்கீஸ் மிகவும் பிடித்து இருந்தது .

அன்புடன்
அனுபிரேம்





15 comments:

  1. ஆஹா சூப்பரா வந்திருக்கே கோகொனட் குக்கீஸ் .

    ReplyDelete
  2. குக்கி உண்மையிலே மிகவும் அருமையாக வந்திருக்கிறது....பார்ப்பதற்கே மிக அழகாகவும் இருக்கிறது.... நீங்கள் செய்த முறையில் கோதுமை மாவிற்கு பதிலாக ஒட்மீல் வைத்து செய்து நட்ஸ் சேர்த்து செய்தால் மிக அருமையான ஓட் மீல் குக்கி கிடைக்கும்.. இந்த குக்கிஸ் போன்றவைகள் எல்லாம் என் மகள்தான் செய்வாள் எனக்கு இந்த மாதிரி ஐட்டம் செய்ய பொறுமை இருக்காது. எனக்கு நான் செய்வது எல்லாம் உடனே இன்ஸ்டென்டாக தெரியனும்

    அருமையான குக்கி செய்தற்கு பாராட்டுக்கள் அனு

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி ..இந்த பதிவுக்கு இத்தனை பெரிய பதிலுரையை நான் எதிர்பார்க்க வில்லை..

      மிக மகிழ்ச்சி சகோ..

      ஓட்ஸ் சேர்த்து முன்னர் செய்தது உண்டு...ஆனால் ஓட்ஸ் இதற்காக தான் வாங்க வேண்டும் ..அதன் பயன்பாடு எங்கள் வீட்டில் மிக மிக குறைவே...

      அதனால் முழுவதும் கோதுமை மாவிலையே இப்பொழுது எல்லாம் செய்வது..

      இங்கு பசங்களுக்கு இந்த குக்கீஸ் ரொம்ப விருப்பம்...அதனால் அம்மா குக்கீஸ் ,என்று கொஞ்சம் அதிகமாவே கேப்பார்கள்...

      Delete
  3. என் பெண்ணுக்குத்தான் இதில் இன்டெரெஷ்ட். போன வாரம் சாக்லெட் குக்கீஸ் செய்தாள். எபிக்கு எழுத படங்கள் எங்கேன்னு கேட்டதற்கு, ஏற்கனவே செய்தவைகளையே நீங்கள் இன்னும் எழுதலைனு சொல்லிட்டா.

    குக்கீஸ் அழகா வந்திருக்கு. ஆனால் எனக்கு இவைகளெல்லாம் பிடிப்பதில்லை (ஆர்வமா சாப்பிட மாட்டேன்).

    பெண்ணுக்கு புதிய அவன் வாங்கித்தர்றேன்னு சொல்லியிருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்...

      அடுத்த வாரம் தான் சாக்லேட்டு குக்கீஸ் செய்யணும்...

      முன்னாடி மாதம் ஒரு நாள் தான் பேக்கிங்..இப்போ lockdown ஆரம்பித்தத்திலிருந்து வாரம் ஒரு நாள்..

      அதுவும் இந்த குக்கீஸ் இதுவரை நான்கு முறை செய்தாகி விட்டது..

      இந்த வாரம் செய்த போது சின்னவர் அடிக்கடி எடுத்தார்...தம்பி இன்னும் இரண்டு நாளுக்காவது வரணும் so போதும் ன்னு சொன்னா..


      அம்மா இது அவ்வோளோ டேஸ்ட் ட்டா இருக்கு அதனால் தான் எடுக்குறோம் ன்னு பதில்😊😊😊..

      எங்க வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப இஷ்டம்..

      சீக்கிரம் வாங்கி தாங்க... ரொம்ப உபயோகமான பொருள்..

      Delete
  4. ஆவ்வ்வ்வ் மிக அருமை, செய்திட்டால் போச்சு.. இப்போ கொரோனா நேரம்.. விதம் விதமாகச் சமைப்பதிலேயே நேரம் அதிகம் செலவாகுது:))

    ReplyDelete
    Replies
    1. உண்மை அதிரா..தினமும் 5 வேளை சமையல் என்று எனக்கு நேரமே போதவில்லை..😬😬


      சீக்கிரம் செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க..

      Delete
  5. பேக்கிங் பௌடர் இல்லையே... என்ன செய்யலாம்? மேலும் இதை அவனில் வைக்கும் பாத்திரமும் இல்லை.

    சுவையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. சில குக்கீஸ் க்கு பேக்கிங் பவுடர் சேர்க்காமலும் செய்யலாம்...ஆனால் இதில் நான் அப்படி முயன்றது இல்லயே ஸ்ரீ ராம் சார்..

      Oven இருந்தால் அதுக்கு ன்னு தட்டு இருக்குமே...

      Delete
  6. சூப்பரா செய்திருக்கிறீங்க அனு. ஈசியான குறிப்பு.

    ReplyDelete
  7. அழகாய் வந்திருக்கிறது கோகோனட் குக்கீஸ். பாராட்டுகள்.

    முயற்சிகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்...

      Delete
  8. கோகோணட் குக்கீஸ் சூப்பர். மருமகள் வித விதமாய் குக்கீஸ் செய்வாள்.

    குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றால் அடிக்கடி செய்யலாம்.

    ReplyDelete