15 May 2020

ஐந்தாம் நாள் -வேடர்பறிலீலை, தங்கக் குதிரை வாகன உலா

மதுரை சித்திரைத்  திருவிழா ....

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்..

மூன்றாம் நாள் -கைலாசபர்வதம் , காமதேனு வாகன உலா..

நான்காம் நாள் தங்க பல்லாக்கு...

ஐந்தாம் நாள் சுவாமியும், அம்மனும் குதிரை வாகனத்தில் வலம் வருவது
கண்கொள்ளாக் காட்சி.

அடியவர்களின் குறைகளை விரைவாக களைவதற்காக வேகமாக செல்லக்கூடிய குதிரையில் எழுந்தருளுவதாக ஐதீகம்.


























திருவிழாத் தத்துவமும் பலனும்  

ஐந்தாம் நாள் திருவிழா புலன்களின் வழியே செல்லும் ஐம்பொறிகளும், பஞ்ச அவந்தைகளும், பஞ்ச மலங்களும் தம்வலிகுன்றலைக் குறிப்பதாகும்.  ஐந்தாம் நாள் இரவு அகவ( குதிரை) வாகன ஆரோகணம் . 

இது சம்ஹாரக்  கோலமாகும்.

 தர்ம, அர்த்த, காம, மோட்சங்களாகிய (அறம், பொருள், இன்பம் , வீடு ) எனும் நான்கு கால்களையும் , 
கிரியை, ஞானம் எனும் இரண்டு காதுகளையும், 
பரஞானம், அபரஞானம் எனும் இரண்டு கண்களையும், 
விதியாகிய முகத்தையும்,  
நிடேதமாகிய வாலையும் , 
ஆகமங்கள் என்கின்ற ஆபரணங்களையும் ,
 மந்திரங்கள் எனும்  பாதஸரத்தையும், 
கடிவாளம் என்னும் பிரணவத்தையும்,  
அண்ட கோடிகளாகிய முதுகையும், 
 உபநிடதங்களாகிய சேணத்தையும் கொண்ட வேதக்குதிரையில்  இறைவன் சவாரி செய்கிறான் என்பதை உணர்த்துகிறது.

மதுரை மீனாட்சியம்மையின் புகழ் பாடும் பொருட்டு ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை ஆகும்.

அந்நூலிலிருந்து ...

நேரிசை வெண்பா

கனமிருக்குங் கந்தரரர்க்குன் கன்னிநா டீந்தென்
தினமிரப்ப தோவொழியார் தேனே - பனவனுக்காப்
பாமாறி யார்க்குனைப்போற் பாரத் தனமிருந்தாற்
றாமாறி யாடுவரோ தான். 5



மதுரை சித்திரைத்   திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

8 comments:

  1. கண்கவரும் வண்ணப்படங்கள். அழகு. அருமை.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. அழகான மதுரையம்பதி இறைவன்,இறைவியை தரிசித்துக் கொண்டேன். குதிரை வாகனத்தின் விரிவாக்கம் நன்றாக உள்ளது. படித்து தெரிந்து கொண்டேன். படங்கள் அனைத்துமே கண்களை கவரும் வண்ணம் இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் இனிய வார்த்தைகளுக்கு நன்றி கமலா அக்கா ..

      Delete
  3. அழகிய காட்சிகள்.குதிரை வாகனத்தில் வரும் ஐதீகம் அறிந்து கொண்டோம்.

    ReplyDelete
  4. Hi,did you give like these photos in frame

    ReplyDelete
    Replies
    1. Hi ,
      I got all these photos from face book only...

      And thanks for visiting here

      Delete