மதுரை சித்திரைத் திருவிழா ....
இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்..
மூன்றாம் நாள் -கைலாசபர்வதம் , காமதேனு வாகன உலா..
நான்காம் நாள் தங்க பல்லாக்கு...
ஐந்தாம் நாள் -வேடர்பறிலீலை, தங்கக் குதிரை வாகன உலா
ஆறாம் நாள் ரிஷப வாகனத்தில்...
ஏழாம் நாள் இறைவன் அதிகார நந்தி மீதும், அம்மன் யாளி வாகனத்திலும் ...
எட்டாம் நாள் இரவு - மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
ஒன்பதாம் நாள் விழா அன்று மாலை அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை அம்மன் மூவரும் இந்திர விமானத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வருவர்.
அப்போது மீனாட்சி அம்மன் திக்விஜயம் நடைபெறும்.
மீனாட்சி அம்மன் மலையத்துவசன் காஞ்சமாலைக்கு அக்னியில் இருந்து தோன்றிய மகள். பிறக்கும்போதே, மூன்று மார்பகங்களோடு பிறக்கிறாள். அதைக் கண்டு பெற்றோர் கவலையுறும் போது அசரீரி, ‘தனக்கு ஏற்ற துணையை அவள் பார்க்கும்போது சரியாகி விடும்’ எனக் கூறுகிறது.
மலையத்துவசன் காலத்திற்கு பிறகு, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் முடிந்து, மதுரையின் அரசியான பின்னர், ஈரேழ் உலகத்தையும் ஆட்சி செய்ய நினைக்கிறாள். எட்டு திக்குக்கும் அதிபதிகளான அஷ்டதிக் பாலர்களை வென்று, தனக்கு அடிபணியச் செய்கிறாள்.
இந்நிகழ்ச்சி வடக்குமாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பில் இருக்கும் லாலா ஸ்ரீரெங்க சத்திர மண்டபத்தில் நடைபெறும். அந்நிகழ்ச்சியின் போது, இரண்டு பட்டர் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு அம்பாள், சுவாமி வேஷம் போட்டு, நிகழ்ச்சியை நடத்துவார்கள். அதன்படி
கிழக்கில் (கீழமாசி வீதி) இந்திரனையும்,
அக்னி மூலையில் (தெற்குமாசி வீதிகளில் சந்திப்பில் விளக்குத்தூண் அருகில்) அக்னியையும்,
தெற்கில் (தெற்குமாசி வீதியில்) எமனையும்,
நிருதி திசையில் (தெற்குமாசிமேலமாசிவீதி சந்திப்பு) நிருதியையும்,
மேற்கில் (மேலமாசி வீதி) வருணனையும்,
வாயு திசையில் (வடக்கு மாசி வீதி) வாயுவையும்,
வடக்கில் (வடக்கு மாசி வீதி) குபேரனையும்,
ஈசானி திசையில் (வடக்குமாசி வீதி, கிழக்கு மாசி வீதி சந்திப்பு) ஈசனையும் வெற்றி கொள்கிறாள்.
பின்னர் நந்திதேவரையும் வெல்கிறாள்.
ஈசான்ய மூலையில் சுவாமியை (சிவனை) காண்கிறாள். சுவாமியை கண்டவுடன், மீனாட்சியின் மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடுகிறது. அவள் சுவாமியை பார்த்து, வெட்கப்படுகிறாள். இந்நிகழ்ச்சியில் ஈசனுடன் அம்மன் மாலை மாற்றிக்கொள்வார்.
திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகம்
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

திருவிழாத் தத்துவமும் பலனும்
ஒன்பதாம் நாள் திருவிழா இரவு அருள்மிகு மீனாட்சியம்மை தடாதகைப் பிராட்டியாக மதுரையம்பதியில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வினைக் குறிக்கும் வகையில் அம்மனின் திக்கு விஜயம் நடைபெறும். அப்பொழுது அம்மன் அஷ்ட திக்குபாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடைபெறும்.
ஒன்பதாம் நாள் திருவிழா சகளம், நிஷ்களம், சகளநிஷ்களம் என்னும் வடிவம் மூன்றும், சிருஷ்டி முதலிய முத்தொழில்களும், தன்மை முதலிய மூன்றிடத்து இருத்தலுமாகிய ஒன்பதும் இல்லை என்பதை குறிப்பதாகும்.
ஒன்பதாம் நாள் திருவிழா சகளம், நிஷ்களம், சகளநிஷ்களம் என்னும் வடிவம் மூன்றும், சிருஷ்டி முதலிய முத்தொழில்களும், தன்மை முதலிய மூன்றிடத்து இருத்தலுமாகிய ஒன்பதும் இல்லை என்பதை குறிப்பதாகும்.
திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகம்
2.66 - மந்திரமாவது நீறு
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே. 7
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவமாவது நீறு
அரா வணங்குத் திருமேனி ஆலவாயான் திருநீறே. 8
மதுரை சித்திரைத் திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்

சிறப்பான படங்கள். தகவல்களும் நன்று.
ReplyDeleteதொடரட்டும் திருவிழா.
நன்றி வெங்கட் சார் ..
Deleteதிருவிழாவை நேரில் பார்த்த உணர்வு.
ReplyDeleteஅருமையான அழகான படங்கள்.
விழா விவரங்கள் அருமை.
கண்கவரும் அழகான படங்கள். அம்மனின் அழகை வர்ணிக்கவியலாது. தகவல்களும் அருமை.
ReplyDeleteகாணக் கண்கோடி வேண்டும்.
ReplyDelete