27 May 2020

எட்டாம் நாள் இரவு - மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்


மதுரை சித்திரைத்  திருவிழா ....

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்..

மூன்றாம் நாள் -கைலாசபர்வதம் , காமதேனு வாகன உலா..

நான்காம் நாள் தங்க பல்லாக்கு...

ஐந்தாம் நாள் -வேடர்பறிலீலை, தங்கக்  குதிரை வாகன உலா

ஆறாம் நாள் ரிஷப வாகனத்தில்...

 ஏழாம் நாள் இறைவன் அதிகார நந்தி மீதும், அம்மன் யாளி வாகனத்திலும் ...

சித்திரை திருவிழாவில் எட்டாம் திருநாளில் ஊடல் உற்சவம், பட்டாபிஷேகம் மற்றும் வெள்ளி சிம்மாசன உலா நடைபெறும்.












மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக நிகழ்ச்சி அம்மன் சன்னதி ஆறுகால் மண்டபத்தில் நடைபெறும். அப்போது அம்மனுக்கு பரிவட்டம் சாத்தப்படும்.

 மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய இரத்தின கீரிடத்திற்கு அபிஷேகம் நடைபெறும்.

பாண்டிய மன்னர்கள் வேப்பம் பூ மாலை தரித்தவர்கள் , எனவே  மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம் அன்று வேப்பம் பூ மாலை அணிவிக்கப்படுகிறது.

மேலும் அம்மன் கையில் இரத்தின செங்கோல் அளிக்கப்பட்டு , ...சித்திரை மாதம் முடிசூட்டப்பட்டதன் முதல் ஆடி மாதம் வரை அம்மன் ஆட்சி செய்வதாகக் கருதப்படுகிறது. பின்னர் ஆவணி மாதம் சுந்தரேஸ்வரருக்கு(சுவாமி) பட்டாபிஷேகம் செய்யப்பட்டு, பங்குனி வரை சுந்தரேஸ்வரர் ஆட்சி செய்வதாகக் கருதப்படுகிறது.

 கோயில் தக்கார் மீனாட்சி அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சந்நதி இரண்டாம் பிராகாரம் சுற்றி வந்து மீண்டும் மீனாட்சியம்மன் திருக்கரத்தில் செங்கோலைச் சமர்ப்பிப்பார்.












 மீனாட்சி அம்மன்  வருடத்திற்கு இரண்டு முறை மூக்குத்தி இன்றி தரிசனம் தருவாள் .

  சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள், அன்னைக்கு மதுரையை ஆட்சி செய்யும் அதிகாரத்தை அளிக்கும் மாணிக்க கற்கள் அலங்கரிக்கும் செங்கோல் அளிக்கும் பட்டாபிஷேகம் நடக்கும்... இன்று  அன்னை மூக்குத்தி இன்றி காட்சியளிப்பாள் .

அதே போல் அதற்கு அடுத்த நாள் இரவு தங்க குதிரையில் திக் விஜயம் செய்யும் போதும் அன்னை மூக்குத்தி இன்றி  அருள்பாளிக்கின்றாள் .





திருவிழாத் தத்துவமும் பலனும்  

எட்டாம் நாள் உற்சவம் தன்வயத்தின் ஆதல் முதலிய கடவுட் குணங்கள் எட்டினையும் விளக்குதற் குறிப்புடையதாகும்.



திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகம்

2.66 - மந்திரமாவது நீறு 


பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே. 5

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே. 6


மதுரை சித்திரைத்   திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. படங்கள் ரொம்பவே அழகு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார் ..

      Delete
  2. எட்டாம் திரு நாள் விழா பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.
    படங்கள் அருமை.

    ReplyDelete
  3. படங்கள் அழகாக இருக்கின்றன...

    துளசிதர்ன்
    கீதா

    ReplyDelete