02 May 2020

சுவாமி இராமானுஜர் மணிமண்டபம்...

வாழ்க வளமுடன் 

சுவாமி  இராமானுஜரின் ஆயிரமாவது  (1017ம் ஆண்டு அவதரித்து, 1137 ம் ஆண்டு வரை, 12௦ ஆண்டுகள் ) பிறந்த ஆண்டு கொண்டாட்டத்தின்  ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் எருமபாளையத்தில் உள்ள ஜருகு மலை அடிவாரத்தில், ஸ்ரீராமானுஜருக்கு மிக அற்புதமாக மணிமண்டபம் அமைக்கப்பட்டது.
அம்மணி மண்டபத்தின் காட்சிகள் இன்றைய பதிவில் .....

இயற்கை எழிலார்ந்த பகுதியில்,  இரண்டரை ஏக்கர் பரப்பளவில்,  10,000 சதுர அடியில் இந்த மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் காணப்படும் கோயில்களின் அமைப்பில் கலை நயத்துடன் கூடிய மணிமண்டபத்தில், பத்து அடி பீடத்தில் பதினெட்டு அடி உயரத்தில் சுவாமி  இராமானுஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.மேலும் இம்மணிமண்டபத்தைச் சுற்றிலும்

காஞ்சி ஸ்ரீவரதராஜர்,

திருநாராயணபுரம் ஸ்ரீசம்பத் குமாரன்,

திருப்பதி ஸ்ரீவேங்கடவன்,

திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இயற்கை எழில் சூழ ஏரியின் கரையில் அமைதியாக இக்கோவில் அமைந்துள்ளது .

மேலும், இந்த மணிமண்டபத்தில் நூலகங்கள், அரங்குகள், வெளியில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா போன்ற வசதிகளும் இருப்பது சிறப்பு.


திருவரங்கத்தமுதனார் அருளிய 
இராமாநுச நூற்றந்தாதி


திக்குற்றகீர்த்தி யிராமானுசனை * என்செய்வினையாம்
மெய்க்குற்றம்நீக்கி விளங்கியமேகத்தை * மேவுநல்லோர்
எக்குற்றவாளர் எதுபிறப்பு ஏதியல்வாகநின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு * அவ்வியல்வேநம்மைஆட் கொள்ளுமே.

26
3802

கொள்ளக்குறைவற்றிலங்கி * கொழுந்துவிட்டோங்கியவுன்
வள்ளல்தனத்தினால் வல்வினையேன்மனம்நீபுகுந்தாய் *
வெள்ளைச்சுடர்விடும் உன்பெருமேன்மைக்கிழுக்கிதென்று
தள்ளுற்றிரங்கும் * இராமானுச! என்தனிநெஞ்சமே.

27
3803நெஞ்சிற்கறைகொண்டகஞ்சனைக் காய்ந்தநிமலன் * நங்கள்
பஞ்சித்திருவடிப் பின்னைதன்காதலன் * பாதம்நண்ணா
வஞ்சர்க்கரியஇராமானுசன்புகழன்றி என்வாய்
கொஞ்சிப்பரவகில்லாது * என்னவாழ்வு இன்றுகூடியதே!

28
3804
இம்மணிமண்டபம் காலை 7 முதல் மதியம் 12 வரை; மாலை 4 முதல் 7 வரை திறந்திருக்கும்.


சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எருமபாளையம் பிரிவு ரோட்டில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் இவ்விடம்  உள்ளது.


தொடரும் .....

அன்புடன்
அனுபிரேம் 

9 comments:

 1. முதன்முறையாக இந்த மண்டபத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். நீங்கள் போயிருந்தீர்களா?

  இராமானுசரைப் பற்றிய தொடர் இடுகை மனதை நெகிழ்த்துகிறது.

  80 வயதில் ஒரு பெரும் சமூகத்தையே பக்தியில் திருப்பி, அங்கு பீடாதிபதிகளை அமர்த்தி இராமானுசர் பன்னிரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார் என்றால் தெய்வ அவதாரம் தவிர வேறு யாரால் இது சாத்தியமாயிருக்கும்?

  வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என்வாய்
  கொஞ்சிப் பரவகில்லாது...... எப்படிப்பட்ட பக்தி திருவங்கத்து அமுதனார்க்கு...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார்...

   எங்களின் பொங்கல் பயணத்தின் போது திரும்பி வரும் இங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது...

   சுவாமியின் 1000 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் பொழுதே கேள்வி பட்டிருந்தேன்...

   இவ்வாறு செல்ல வேண்டும் என எண்ணும் இடங்களை google maps ல் சேமித்து வைத்து இருப்பேன்...நேரம் கிடைக்கும் போது சென்று வருவோம்...

   அப்படி தான் இங்கும் சென்றோம்...

   மிக அருமையான இடம்...


   மேலும் ஸ்வாமியின் வைபவங்களை வாசிக்கும் போது மனதில் ஏற்படும் பிரமிப்பை கூற வார்த்தைகள் இல்லை..

   Delete
 2. மணிமண்டபம் அழகாக இருக்கிறது.

  தகவல் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட் சார்

   Delete
 3. உடையவரது மணி மண்டபத்தைப் பற்றி
  இப்போது தான் அறிகிறேன்..

  படங்கள் அனைத்தும் மண்டபத்தின்
  அழகைக் காட்டுகின்றன...

  மகிழ்ச்சி.. நன்றி..
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

   Delete
 4. மணி மண்டபம் மிக அருமை.
  காணொளி மிக அருமை அனு.
  நேரில் பார்த்த உணர்வை தந்தது.

  ReplyDelete
 5. மிகவும் அருமையான சூழலில் அமைந்து இருப்பதாக தெரிகிறது.

  ReplyDelete