01 May 2020

மதுரை சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத்  திருவிழா ....





எங்கும் நிரம்பிய செம்பொருளாகிய இறைவன்  64 திருவிளையாடல்களைச் செய்தருளியதும், ‘பூலோக கயிலாயம்’ என அழைக்கப்படுவதுமான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 12 தமிழ் மாதங்களிலும் திருவிழா நடைபெறும். இவ்விழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் திருக்கல்யாணம் உலக பிரசித்தி பெற்றது.




இந்த சித்திரைத்  திருவிழா 12 நாட்கள் நடைபெறும். வழக்கம்போல காலை கொடியேற்றத்துடன் தொடங்கி,

இரவு சுவாமியும், பிரியாவிடை அம்மனும், கேட்டதைத் தரும் கற்பக விருட்ச வாகனத்திலும்,

மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர். நகர் சோதனைக்காக இவ்வாறு வலம் வருவதாக மரபு.


மதுரை சித்திரைத்  திருவிழாவின் நிகழ்ச்சி நிரல் ....

ஏப்ரல் 25 - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கொடியேற்றம், கற்பகவிருட்ச வாகனம், சிம்ம வாகனம்

ஏப்ரல் 26 - பூத வாகனம், அன்ன வாகனம்

ஏப்ரல் 27 - கைலாச பருவதம், காமதேனு வாகன உலா

ஏப்ரல் 28 - தங்க பல்லாக்கு.

ஏப்ரல் 29 - வேடர்பறிலீலை, தங்கக்  குதிரை வாகன உலா

ஏப்ரல் 30 - சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ரிஷப வாகனம்.

மே 1 - நந்திகேஸ்வரர், யாளி  வாகனம்.

மே 2 - ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் - வெள்ளி சிம்மாசன உலா

மே 3 - ஸ்ரீ மீனாட்சி திக் விஜயம் - இந்திர விமான உலா

மே 4 - ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், யானை வாகனம்

மே 5 - ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் தேரோட்டம்

மே 6 -தீர்த்தம் , வெள்ளி விருச்சபை சேவை


ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் 2020 ..

மே 6  – தல்லாகுளத்தில் எதிர்சேவை

மே 7 – ஸ்ரீ கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு

மே 8  – வண்டியூர் தேனூர் மண்டபம் எழுந்தருளுதல், சேஷ வாகனம், கருட வாகனம், மண்டூக முனிவருக்கு மோட்சம் தருதல், ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு

மே 9  - மோகனாவதாரம் – (இரவு) கள்ளர் திருக்கோலம், புஷ்ப பல்லக்கு

மே 10 - மீண்டும் திருமாலிஞ்சோலை எழுந்தருளல்.




முதல் நாள் - கற்பக விருக்க்ஷ வாகனம் , 
சிம்ம வாகனத்தில் ஸ்வாமிகள் வீதி உலா...



கற்பக விருக்க்ஷ வாகனம் 






சிம்ம வாகனத்தில் அன்னை 


திருவிழாத் தத்துவமும் பலனும்  


கொடியேற்றப்படும்  கொடிப்பட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள ரிஷபம்  தர்ம உருவாகவும் ஆத்மாவின் உருவாகவும் மதிக்கப்படுகிறது. ஆத்மாக்களையும், தர்மத்தையும் கீழ் நிலையிலிருந்து உயர்நிலைக்குக் கொண்டு செல்லும் இறைவனின் கருணை இக்கொடியேற்ற திருவிழாவில் விளக்கப்படுகிறது. பொது வகையில்  உயிர்களுக்கு  அருள் புரியும் இறைவன்,  சிறப்பு வகைகள் அருள்புரிய இப்பன்னிரண்டு  நாட்களும்  ஆயத்தமாகக் காத்திருக்கிறான்  என்பதை இக்கொடியேற்றம் உணர்த்துகிறது .


முதல் நாள் திருவிழா தூல தேகத்தை நீக்கிக் கொள்ளும் பயனை விளக்குவதாக அமையும்.

முதல் நாள் இரவு மரத்தடியில் சிவபெருமான் வீற்றிருப்பதாக விளக்கும் கற்பக விருட்சக வாகனம் எழுந்தருளும்.

இதை விருத்திக் கிரம சிருஷ்டிக் கோலம் என்பர்.

மரத்தின் கிளைகளும், இலைகளும் தத்துவங்களாகவும் உயிர்வர்க்கங்களாகவும் உள்ளன.

இவற்றின் அடியில் இறைவன் இருந்து சிருஷ்டிக்கெல்லாம்  வேர் போல் தாம் இருந்தருளுவதை இது  உணர்த்துகிறது.


மதுரை மீனாட்சியம்மையின் புகழ் பாடும் பொருட்டு ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை ஆகும்.

அந்நூலிலிருந்து ...


நேரிசை வெண்பா

கார்பூத்த கண்டத்தெங் கண்ணுதலார்க் கீரேழு
பார்பூத்த பச்சைப் பசும்கொம்பே - சீர்கொள்
கடம்பவனத் தாயேநின் கண்ணருள்பெற் றாரே
இடம்பவனத் தாயே யிரார். 1

மதுரை சித்திரைத்   திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. என்றைக்காவது ஒரு நாள் சித்திரைத் திருநாள் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். பார்க்கலாம் எப்போது கிடைக்கிறது என.

    சென்ற வருடத்தின் படங்கள் அழகு.

    ReplyDelete
  2. மதுரையை மிஸ் செய்கிறேன்.

    ReplyDelete
  3. அம்மன் அழகோ அழகு.. ஆனா இம்முறை எந்தக் கோயிலிலும் எதுவும் பண்ண முடியாமல் பண்ணி விட்டதே கொரொனா.. அப்போ கொரொனாவுக்குத்தான் சக்தி அதிகம் என நினைக்கத் தோணுதே ஹா ஹா ஹா..

    ReplyDelete
  4. மதுரை சித்திரை திருவிழா படங்கள் அழகு.
    நான் போன வருடம் பார்த்த திருவிழா படங்களை முகநூலில் போட்டு வருகிறேன்.

    ReplyDelete
  5. சித்திரை திருவிழா காட்சிகள் அழகு.

    ReplyDelete