வாழ்க வளமுடன்
தேவையானவை
அரிசி - 1 கப் ,
கொள்ளு - 1 கப் ,
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொள்ளை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும் மிக்சியில் ஒன்று இரண்டாக பொடிக்கவும் ...பின் அதில் உள்ள தோலை எல்லாம் முடிந்த அளவு நீக்க வேண்டும் (ஊதினாலே அவைகளை எளிதாக நீக்கலாம்).
குக்கரில் அரிசி, உடைத்த கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து 4 மடங்கு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும் . 2 விசில் விட்டு 5 நிமிஷம் சிமில் வைக்கவும்.
அத்தை வீட்டில் அரிசி முழுதாக இருக்குமாறு வேக வைப்பார்கள். அம்மா வீட்டில் நன்கு குலைய இருக்கும் , அதனால் நமக்கு எப்படி விருப்பமோ அப்படி வேக வைத்துக் கொள்ளலாம்.
மோர் மிளகாய் , அப்பளம் , ஊறுக்காய் உடன் .. |
அனுபிரேம்
செய்வது எளிது ...சத்து மிக்க கஞ்சி..... நைஸ்
ReplyDeleteநன்றி சகோ ...
Deleteஆஆ கஞ்சி என்றதும், அதனுள் மானே தேனே எனப் பல பொருட்கள் போடுவீங்கள் என எதிர்பார்த்தேன் சட்டென நிறுத்திட்டீங்க ஹா ஹா ஹா,.. இன்றே வரகு +கொள்ளு செய்திடப்போறேன், அடிக்கடி சைவ நாட்களில் செய்வதுதான்.. நான் பால், பச்சைமிளகாய் வெங்காயம் கீரை இதனுள் சேர்ப்பேன்.
ReplyDeleteஅதிரா மானே தேனே எல்லாம் நீங்கள் போட்டுக்கணும் ஹா ஹா ஹா நானும் சேர்ப்பேன்....
Deleteகீதா
இதில மானே தேனே போட்டா நல்லா இருக்காது அதிரா ...
Deleteஅப்புறம் கொள்ளு மணம் , சுவையே மாறி போகும் ..
அட கீதா அக்கா ...
Deleteசுவையான கஞ்சி... குறிப்பிற்கு நன்றி.
ReplyDeleteநன்றி வெங்கட் சார் ....
Deleteசமைத்து பாருங்கள் சுவையும் நன்றாக இருக்கும் .
கொள்ளு கஞ்சி நானும் செய்வேன்.
ReplyDeleteபடங்கள் அழகு.
நன்றி மா ..
Deleteபடங்கள் நல்லா இருக்கு.
ReplyDeleteஎனக்குப் பிடிக்கும்னு தோணலை.
ஆமாம் சார் , முதல் முறை சாப்பிடும் போது பிடிப்பது கடினமே ..
Deleteமுதல் முறை கல்யாணத்திற்கு பின் அத்தை செய்து தந்த போது என்னடா இது இதில் சாதம் இப்படி முழுசா இருக்கே ன்னு நினச்சு கொஞ்சமா தான் சாப்பிடுவேன் ..
இப்போ சமைச்சு சமைச்சு பிடிச்சி போச்சு ...
நானும் கஞ்சி செய்திட்டேன்ன் ஹா ஹா ஹா..
ReplyDeleteவாவ் ...சூப்பர் அதிரா ..
Deleteஎப்படி வந்துச்சு ..
வணக்கம் சகோதரி
ReplyDeleteசத்தான கஞ்சி. கொள்ளு வாசனையுடன் அரிசி வாசனை சேர்ந்து சுவையாகத்தான் இருக்கும். உப்பு மோருடன் கலக்கி அருந்தினால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.படங்கள், செய்முறைகள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் கமலா அக்கா கொள்ளு வாசனையுடன் ரொம்ப நல்லா இருக்கும் ..
Deleteபசங்க இதில் தயிர் சேர்த்து தான் சாப்பிடுவாங்க ..
சூப்பர் அனு!!!
ReplyDeleteமிகவும் ப்டிக்கும் இங்கு
கீதா
Deleteவாங்க கீதா அக்கா ...
உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் மிக மகிழ்ச்சி
நல்ல சத்தான ஈசியாக செய்யக்கூடியதா இருக்கு. தெளிவான படங்கள்,செய்முறை அருமை.
ReplyDeleteநன்றி அம்மு ...ரொம்ப எளிய செய்முறை தான் ..
Deleteநல்ல கஞ்ச
ReplyDeleteநன்றி மா ...
Delete