09 May 2020

சுவாமி இராமானுஜர் மணிமண்டபம் 2 ...

வாழ்க வளமுடன் 

 சுவாமி  இராமானுஜர்  மணிமண்டபம்...முந்தைய பதிவு ..

  சுவாமி  இராமானுஜர்  மணிமண்டபத்தை சுற்றியுள்ள காட்சிகளை இன்று காணலாம்.







 





கண்ணா 




 




 காஞ்சி ஸ்ரீவரதராஜர்,

திருநாராயணபுரம் ஸ்ரீசம்பத் குமாரன்,

திருப்பதி ஸ்ரீவேங்கடவன்,

திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆகியோரின் சன்னதிகள் இம்மணிமண்டபத்தை சுற்றி அமைந்துள்ளன.

 நாங்கள் சென்றது ஒரு சனிக்கிழமையில் , எனவே அங்கு இருந்த எல்லா சன்னதியிலும் பட்டர் ஸ்வாமிகள் இருந்து தீர்த்தம் , சடாரி சேவித்தார்கள்.






கோ சாலை 

பூங்கா 



திருவரங்கத்தமுதனார் அருளிய 
இராமாநுச நூற்றந்தாதி


கூட்டும்விதிஎன்றுகூடுங்கொலோ? * தென்குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்தன்னைத் * தன்பத்தியென்னும்
வீட்டின்கண்வைத்தஇராமானுசன்புகழ்மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள்தன்னை * என்நாட்டங்கள்கண்டு இன்பமெய்திடவே.

29
3805


இன்பந்தருபெருவீடுவந்தெய்திலென்? * எண்ணிறந்த
துன்பந்தருநிரயம்பலசூழிலென்? * தொல்லுலகில்
மன்பல்லுயிர்கட்கிறையவன் மாயனெனமொழிந்த
அன்பன்அனகன் * இராமானுசன்என்னையாண்டனனே.

30

3806


ஆண்டுகள்நாள் திங்களாய் * நிகழ்காலமெல்லாம் மனமே!
ஈண்டுபல்யோனிகள்தோறுழல்வோம் * இன்றோ ரெண்ணின்றியே
காண்தகுதோளண்ணல்தென்னத்தியூரர்கழலிணைக்கீழ்ப்
பூண்டவன்பாளன் * இராமானுசனைப்பொருந்தினமே. (2)


31

3807




பராமரிப்பு மிக சிறப்பு இங்கு.

நாங்கள் எதிர்பார்த்தை விட நல்ல கூட்டம் , மேலும் அங்கிருக்கும் பூங்காவில் குழந்தைகள் மிக மகிழ்ச்சியாக விளையாடினர் , அந்த பூங்காவும் வித்தியாசமாக இருந்தது.

அங்கு ஒரு சிற்றுண்டி உணவகமும் இருந்தது , அதில்  கடலை உருண்டை, பொறி உருண்டை போன்ற பலவகையான உருண்டைகள் என நம் பாரம்பரிய உணவுகளை விற்கிறார்கள் .

அங்கு பூங்காவில் விளையாடிவிட்டு , அடுத்து குழந்தைகள் இங்கு உண்டு மகிழ்ந்தனர் .

ஒரு சுற்றுலா வந்த மகிழ்ச்சி தெரிந்தது அவர்களின் முகங்களில் .



இம்மணிமண்டபம் காலை 7 முதல் மதியம் 12 வரை;
மாலை 4 முதல் 7 வரை திறந்திருக்கும்.


சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எருமபாளையம் பிரிவு ரோட்டில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் இவ்விடம்  உள்ளது.


ஆட்டோ போன்ற வசதிகள் உள்ளன . ஆனாலும்  கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களே அதிகம் . செல்லும் வழி  சற்று சிறியதாகவே இருந்தாலும் அங்கங்கு அம்பு குறியிட்டு  வழி காட்டியிருந்தனர் .

வாய்ப்பு கிடைக்கும் போது  சென்று வாருங்கள் .

அன்புடன்
அனுபிரேம் 

6 comments:

  1. படங்கள் அருமை. இடமும் ரொம்ப நல்லா இருக்கு போலிருக்கு. தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்.

    'ஆண்டுகள் நாள் திங்களாய்.... ஈண்டு பல் யோனிகள் தோறும் உழல்வோம்' இதனைத் தடுக்க ஒரே வழி, இராமானுசன் அடியைப் பொருந்துவதுதான்.

    பலவகையான உருண்டைகள் - என்னது இது? கடலை உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, எள் உருண்டை பொரி உருண்டை போன்ற இனிப்புகளைச் சொல்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்...


      ஆமாம் திணை உருண்டை, கடலை உருண்டை போன்றவை தான்...

      Delete
  2. புகைப்படங்கள் எல்லாம் மிக அழகு! அதுவும் அந்த கூரை வேய்ந்த குடிலும் வாயிலில் வாத்துக்களும் பூங்காவில் யானையும் கொள்ளை அழகு!

    ReplyDelete
  3. அழகான இடமாகத் தெரிகிறது. பராமரிப்பு நன்றாக இருக்க வேண்டும்.

    கிடைக்கும் உருண்டை வகைகள் கவர்கின்றன.

    ReplyDelete
  4. அழகான மணி மண்டபம்.

    தின்பண்டங்கள் பாரம்பரிய முறைப்படி செய்வது கேட்டு மகிழ்ச்சி.
    உருண்டைகள் உடலுக்கு நல்லது.

    காணொளி நேரில் பார்த்த உணர்வை தந்தது , நன்றி அனு.

    ReplyDelete
  5. அருமையான பக்தி உலா. மிக அருமையான
    படங்கள். அனுபவித்தேன் அன்பு அனு.

    ReplyDelete