மதுரை சித்திரைத் திருவிழா ....
இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்..
மூன்றாம் நாள் -கைலாசபர்வதம் , காமதேனு வாகன உலா..
நான்காம் நாள் காலையில் சுவாமியும், பிரியாவிடை அம்மனும் மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டபத்தில் தங்குவர்.
இரவில் தங்கப்பல்லக்கில் ஊர்வலமாக கோயிலுக்கு வருவர்.
திருவிழாத் தத்துவமும் பலனும்
நான்காம் நாள் திருவிழா நாற்கரணம், நால்வகைத் தோற்றம் என்னும் இவற்றை நீக்குதற் பொருட்டு நிகழ்வதாகும்.
மதுரை மீனாட்சியம்மையின் புகழ் பாடும் பொருட்டு ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை ஆகும்.
அந்நூலிலிருந்து ...
கட்டளைக் கலித்துறை
குணங்கொண்டு நின்னைக் குறையிரந் தாகங் குழையப்புல்லி
மணங்கொண் டவரொரு வாமங்கொண் டாய்மது ரேசரவர்
பணங்கொண் டிருப்ப தறிந்துங்கொள் ளாயம்மை பைந்தொடியார்
கணங்கொண் டிறைஞ்சு நினைக்குமுண் டாற்பொற் கனதனமே. 4
மதுரை சித்திரைத் திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
படங்கள் ரொம்பவே அழகு.
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
படங்களும் பகிர்வும் அருமை அனு.
ReplyDelete