22 May 2020

ஏழாம் நாள்- இறைவன் நந்தி மீதும், அம்மன் யாளி வாகனத்திலும்

மதுரை சித்திரைத்  திருவிழா ....

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்..

மூன்றாம் நாள் -கைலாசபர்வதம் , காமதேனு வாகன உலா..

நான்காம் நாள் தங்க பல்லாக்கு...

ஐந்தாம் நாள் -வேடர்பறிலீலை, தங்கக்  குதிரை வாகன உலா

ஆறாம் நாள் ரிஷப வாகனத்தில்...

 ஏழாம் நாள் இறைவன் அதிகார நந்தி மீதும், அம்மன் யாளி வாகனத்திலும்   பவனி வருவர்.























திருவிழாத் தத்துவமும் பலனும்  


ஏழாம் நாள் திருவிழா எழுவகைப் பிறப்பு, கலையாதிகள் ஏழு , மாயாகுணம் ஏழு  என்னும் இவற்றைத் தவிர்த்தற் பொருட்டாகும். 

ஏழாம் நாள் காலையில் பிட்சாடனத் திருக்கோலத் திருவிழா நடைபெறும் . 

தாருகாவனத்து ரிஷிகளும் , ரிஷிபத்தினிகளும் ஆவண மலத்தால் தாங்கள் சுதந்திரர்களென எண்ணிக் கடவுளை மறந்தனர். 
அவர்கள் பரதந்திரர்களென உணர்த்துதற் பொருட்டு இறைவன் பிட்சாடன மூர்த்தியாய்ச் செல்ல, ரிஷிபத்தினிகள் அவரழகில் ஈடுபட்டனர் . 
விஷ்ணு மோகினியாகச் செல்ல அவ்வழகில் ரிஷிகள் ஈடுபட்டனர் . 

இவ்விரண்டு செயல்களாலும் ரிஷிகளும் , அவர் பத்தினிமார்களும் பரதந்திரர்களேயென அவர்களை உணரச் செய்து , பரமன் மறைந்தருளினான்.

 பராக்ரமக் கோலமே பிட்சாடனக் கோலமாகும் . 

ஏழாம் நாள் இரவில் அதிகாரநந்தி வாகனம். இது விருத்திக்கிரம சங்காரக் கோலம் என்பர் . அதிகார நந்தி மான், மழு, சதுர்ப்புஜம், முக்கண் முதலிய குறிகளோடு சாரூப்பிய பதவியைப் பெற்றவர் . இவர் விருஞான கலர் எனும் ஆன்மாக்களுள் சிறந்தவர் ஆவர். 

கைலையில் சிவசந்நிதியானத்தில் அதிகாரம் செலுத்துபவர் . ஆதலால் அதிகாரநந்தி எனப் பெயர் பெற்றார் .


திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகம்

2.66 - மந்திரமாவது நீறு 

முத்தி திருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே. 3

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே. 4


மதுரை சித்திரைத்   திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. பிக்ஷாடணத் திருக்கோலம் - படங்கள் அனைத்துமே அழகு.

    தொடரட்டும் திருவிழா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார் ....

      இப்படங்களை காணும் பொழுது அதன் அழகில் மீண்டும் மீண்டும் காணும் எண்ணம் வருகிறது ...

      Delete
  2. நிறைவான காட்சிகள்.

    ReplyDelete